முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை.. வதந்தி பரப்பினால் நடவடிக்கை.. சுகாதாரத்துறை எச்சரிக்கை!
Tamil Nadu CM MK Stalin Hospitalized : முதல்வர் ஸ்டாலினின் உடல்நிலை குறித்து தவறனா தகவல்கள், வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மருத்துவமனை நிர்வாகம் கொடுக்கும் அறிக்கையை மட்டுமே நம்ப வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

சென்னை, ஜூலை 23 : சென்னையில் உள்ள மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக முதல்வர் ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனவே, முதல்வர் ஸ்டாலினின் உடல்நிலை குறித்து தவறனா தகவல்கள், வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மருத்துவமனை நிர்வாகம் கொடுக்கும் அறிக்கையை மட்டுமே நம்ப வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடந்த சில தினங்களாக சுற்றுப் பயணம் மேற்கொண்டார். கடலூர், திருவாரூர் என அடுத்தடுத்து பயணம் மேற்கொண்டு, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் சகோதரர் மு.கமுத்து காலமானார். இதனால், முதல்வர் ஸ்டாலின் சோர்வாகவும் இருந்துள்ளார். இந்த நிலையில், 2025 ஜூலை 21ஆம் தேதி காலை நடைபயிற்சி மேற்கொண்டிருந்த முதல்வர் ஸ்டாலினுக்கு தலைசுற்றல் ஏற்பட்டு இருக்கிறது.
இதனை அடுத்து, அவர் ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு உடல் பரிசோதனைக்கு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் முதல்வர் ஸ்டாலினை மூன்று நாட்கள் ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தினர். மேலும், அவருக்கு பல பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து, மருத்துவர்கள் கண்காணிப்பில் முதல்வர் ஸ்டாலினுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், முதல்வர் ஸ்டாலினின் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றனர்.
Also Read : முதல்வர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார்.. விரைவில் டிஸ்சார்ஜ் – அமைச்சர் மா. சுப்பிரமணியன்..




வதந்தி பரப்பினால் நடவடிக்கை
இந்த சூழலில், தமிழக சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதன்படி, “முதல்வர் ஸ்டாலினின் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் மற்றும் வதந்தி பரப்பினால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். முதல்வர் ஸ்டாலின் உடல் நிலை குறித்து மருத்துவர்கள் அளிக்கும் அறிக்கையை மட்டுமே நம்ப வேண்டும். மற்ற எந்த தகவல்களும் உண்மை இல்லை” என கூறியது.
Also Read : தனி நபர் வருமானத்தில் தமிழகம் இரண்டாவது இடம்.. புள்ளிவிவரத்துடன் தெரிவித்த மத்திய அரசு..
முன்னதாக, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முதல்வரின் உடல்நிலை குறித்து பேசுகையில், “பயப்படும் அளவுக்கு ஒன்றும் இலை. அவருக்கு பல பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது முதல்வர் ஸ்டாலின் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார். அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து முதல்வர் ஸ்டாலின் எப்போது வீடு திரும்புவார் என்ற தகவல் இன்று மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வெளியாகும்” என தெரிவித்தார். எனவே, முதல்வர் ஸ்டாலின் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.