Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மருத்துவமனையில் இருந்தபடியே.. மக்களின் குறைகளை கேட்ட முதல்வர் ஸ்டாலின்!

CM MK Stalin Hospitalized : தமிழக முதல்வர் ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தபடியே, உங்களுடன் ஸ்டாலின் திட்ட பயனாளிகளுடன் கலந்துரையாடி உள்ளார். தொடர்ந்து, இத்ந திட்டம் குறித்து கன்னியாகுமரி, காஞ்சிபுரம், கோயம்புத்தூர் ஆகிய மாவட்ட ஆட்சியர்கள் விவரங்களை முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.

மருத்துவமனையில் இருந்தபடியே..  மக்களின் குறைகளை கேட்ட முதல்வர் ஸ்டாலின்!
முதல்வர் ஸ்டாலின்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 23 Jul 2025 16:32 PM

சென்னை, ஜூலை 23 : சென்னையில் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஸ்டாலின், முக்கிய கோப்புகளை பார்வையிட்டு ஒப்புதல் வழங்கி இருக்கிறார். அதோடு உங்களுடன் ஸ்டாலின் திட்டப் பயனாளிகளுடன் கலந்துரையாடினார்.  கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 2025 ஜூலை 15ஆம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை தொடங்கி வைத்தார். 2025 நவம்பர் மாதம் வரை இந்த முகாம் தமிழகம் முழுவதும் செயல்படுகிறது. இந்த திட்டம் மூலம் பல்வேறு துறை சார்ந்த திட்டம் குறித்து அறிந்து கொள்ளலாம். நகர்ப்புறங்களில் 3,768, ஊரக பகுதிகளில் 6,232 என மொத்தம் 10 ஆயிரம் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடைபெற்று வருகிறது. இந்த முகாம்கள் 2025 நவம்பர் 30ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஊரக பகுதிகளில் 15 துறைகளில் 46 சேவைகளும், நகர்ப்புற பகுதிகளில் 13 துறைகளின் 43 சேவைகளும் வழங்கப்பட உள்ளன.

இந்த திட்டம் மூலம் கலைஞர் மகளிர் தொகை உள்ளிட்ட திட்டம் குறித்து கேட்டறியலாம். மக்கள் அளிக்கும் மனுக்களுக்கு 45 நாட்களில் தீர்வு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  இதற்கிடையில், உடல்நலக் குறைவு காரணமாக,  முதல்வர் ஸ்டாலின்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 2025 ஜூலை 21ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக அவர் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

Also Read : முதல்வர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார்.. விரைவில் டிஸ்சார்ஜ் – அமைச்சர் மா. சுப்பிரமணியன்..

மக்களின் குறைகளை கேட்ட முதல்வர்


அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் மருத்துவர்கள் கண்காணிப்பில் தொடர்ந்து இருந்து வருகிறார். அவர் சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் வீடு திரும்புவதாக சொல்லப்படுகிறது. இந்த சூழலில், சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஸ்டாலின், முக்கிய கோப்புகளை பார்வையிட்டு ஒப்புதல் வழங்கி இருக்கிறார். அதோடு உங்களுடன் ஸ்டாலின் திட்டப் பயனாளிகளுடன் கலந்துரையாடினார்.

இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “மருத்துவமனையில் இருந்தபடியே உங்களுடன்_ஸ்டாலின் முகாம்கள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பொதுமக்களிடம் கேட்டறிந்ததோடு; அரசுக் கோப்புகளிலும் கையெழுத்திட்டேன். மருத்துவர்கள் அறிவுறுத்திய ஓய்வுக்குப் பிறகு, விரைவில் உங்களைச் சந்திக்க உங்கள் மாவட்டங்களுக்கு வருவேன்” என குறிப்பட்டு இருக்கிறார்.

Also Read : தனி நபர் வருமானத்தில் தமிழகம் இரண்டாவது இடம்.. புள்ளிவிவரத்துடன் தெரிவித்த மத்திய அரசு..

இந்த கலந்துரையாடலின்போது, உங்களுடன் ஸ்டாலின் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து கன்னியாகுமரி, காஞ்சிபுரம், கோயம்புத்தூர் ஆகிய மாவட்ட ஆட்சியர்களுடன் விவரங்களை கேட்டறிந்தார். மேலும், உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் கலந்துகொண்ட பயனாளிகளிடம் கோரிக்கைகள் குறித்த விவரங்களை கேட்டறிந்து கலைந்துரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.