Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

முதல்வர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார்.. விரைவில் டிஸ்சார்ஜ் – அமைச்சர் மா. சுப்பிரமணியன்..

Tamil Nadu CM MK Stalin: தற்போது முதலமைச்சர் மு க ஸ்டாலின் நல்ல உடல் நலத்துடன் உள்ளார். அப்போலோ மருத்துவமனையில் இருந்து முதலமைச்சர் ஸ்டாலின் எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்ற தகவல் இன்று மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் வெளியிடப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்,

முதல்வர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார்.. விரைவில் டிஸ்சார்ஜ் – அமைச்சர் மா. சுப்பிரமணியன்..
அமைச்சர் மா. சுப்பிரமணியன்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 23 Jul 2025 13:38 PM

சென்னை, ஜூலை 23, 2025: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நலமுடன் உள்ளதாகவும் டிஸ்டார்ஜ் பற்றிய தகவலை இன்று (ஜூலை 23, 2025) மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்படும் எனவும் அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் 2025 ஜூலை 21 ஆம் தேதி உடல் நல குறைவு காரணமாக சென்னையில் இருக்கக்கூடிய அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார். அதாவது நடைபயிற்சி மேற்கொண்ட போது திடீரென தலைசுற்றல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என தெரிவித்துள்ளனர்

மருத்துவமனையில் இருந்தே அரசு பணிகள்:

ஜூலை 21 2025 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மருத்துவமனை அனுமதிக்கப்பட்ட நிலையில் ஜூலை 22, 2025 மற்றும் ஜூலை 23, 2025 ஆகிய இரண்டு தேதிகள் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்திற்கு மேற்கொள்ள இருந்த சுற்றுப்பயணம் மற்றும் அரசு நிகழ்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. மேலும் மருத்துவர்கள் அவருக்கு மூன்று நாட்கள் ஓய்வு தேவை எனவும் குறிப்பிட்டிருந்தனர்.

மேலும் படிக்க: மருத்துவமனையில் இருந்தே ஆய்வு பணி.. அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்தபடியே ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதில், “மருத்துவமனையில் இருந்தபடி அரசு பணிகளை தொடர்கிறேன். உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் திட்டமிட்டபடி நடைபெறுகிறதா, நேற்று வரையில் பெறப்பட்ட மனுக்கள் எத்தனை தீர்வு காணப்பட்டவை எத்தனை உள்ளிட்ட விவரங்களை தலைமை செயலாளரிடம் கேட்டு அறிந்து மக்களின் மனுக்கள் மீது தீர்வு காண்பதில் எந்த விதமான தொய்வும் ஏற்படக்கூடாது என அறிவுறுத்தியுள்ளேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல்வர் நலமுடன் உள்ளார் – அமைச்சர் மா. சுப்பிரமணியன்:

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் நலமுடன் உள்ளதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ” சகோதரர் மு.க முத்து மறைவால் ஒருநாள் முழுவதும் அவர் சாப்பிடாமல் இருந்துள்ளார். அடுத்தநாள் நடைபயணம் மேற்கொண்ட பொழுது அவருக்கு தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது. பயப்படும் அளவுக்கு ஒன்றும் இல்லை. பல பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார். தற்போது முதலமைச்சர் மு க ஸ்டாலின் நல்ல உடல் நலத்துடன் உள்ளார். அப்போலோ மருத்துவமனையில் இருந்து முதலமைச்சர் ஸ்டாலின் எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்ற தகவல் இன்று மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் வெளியிடப்படும்” என குறிப்பிட்டுள்ளார்