கோவை, திருப்பூர் மாவட்டத்திற்கு செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின்.. பிளான் என்ன?
TN CM MK Stalin: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வரும் ஜூலை 22, 2025 மற்றும் ஜூலை 23, 2025 ஆகிய இரண்டு நாட்களுக்கு கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்திற்கு செல்கிறார். அங்கு அவர் பல்வேறு நலத்திட்ட உதவுகளை தொடங்கி வைக்கிறார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கோவை திருப்பூர் இரு மாவட்டங்களுக்கு இரண்டு நாள் பயணமாக செல்கிறார். கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைப்பதற்காகவும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதற்காகவும் ,கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகவும் 2025 ஜூலை 22 மற்றும் ஜூலை 23ஆம் தேதி பயணம் மேற்கொள்கிறார். இதற்காக சென்னையிலிருந்து தனி விமான மூலம் நாளை மறுநாள் அதாவது ஜூலை 22 2025 அன்று புறப்பட்டு செல்கிறார். கோவைக்கு செல்லும் அவருக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலத்த வரவேற்பு கொடுக்க இருக்கின்றனர். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று கள ஆய்வு மேற்கொள்கிறார். அந்த வகையில் சமீபத்தில் தஞ்சாவூர் வேலூர் திருவாரூர் சிதம்பரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து உரையாற்றினார்.
கோவை மாஸ்டர் பிளான்:
சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவைக்கு செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின் அங்கிருந்து கார் மூலம் திருப்பூர் மாவட்டத்திற்கு செல்கிறார். அங்கு பல்லடம் மற்றும் உடுமலையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அதேபோல் 2025 ஜூலை 23ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் பொள்ளாச்சி செல்கிறார்.
அங்கு பரம்பிக்குளம், ஆழியாறு பாசன திட்டம் நிறைவேற காரணமாக இருந்த பெருந்தலைவர் காமராஜர், சுப்ரமணியம், மகாலிங்கம் ஆகிய தலைவர்களின் திருவுருவ சிலையை திறந்து வைக்கிறார். இதனை தொடர்ந்து கோவைக்கு வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கோவைக்கான மாஸ்டர் பிளான் திட்டம் குறித்து அதிகாரிகள், பொதுமக்கள், தொழில்துறையினர், மக்கள் பிரதிநிதிகள், பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
Also Read: தீராத உட்கட்சி பூசல்.. பாமகவில் 3 எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்.. ராமதாஸ் எடுத்த முடிவு!
அதாவது கோவை மாஸ்டர் பிளான் 2041 திட்டம் தொடர்பாக பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்க உள்ளார். அதைப்போல் இரண்டு நாட்கள் திருப்பூர் மற்றும் உடுமலையில் நடைபெற உள்ள அரசு விழாவில் முதலமைச்சர ஸ்டாலின் கலந்து கொண்டு கோவில்வழி பஸ் நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்த வைக்கிறார். வேலம்பாளையத்தில் புதிய அரசு மருத்துவமனை பேருந்து நிலையத்தை திறந்து வைக்கிறார். அதே போல் உடுமலை பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள பெரியார், பேரறிஞர் அண்ணா, அம்பேத்கர் சிலைகளை திறந்து வைக்கிறார்.
Also Read: கூட்டணி ஆட்சி.. நாங்கள் ஏமாளிகள் அல்ல.. எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்..
முதலமைச்சர் ஸ்டாலின் இந்த பயணத்தின் போது தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சாலை வளம் மேற்கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சட்டமன்றத் தேர்தல் நெருங்க இருக்கும் நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மாவட்டம் தோறும் சென்று மக்களை சந்தித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது