கூட்டணி ஆட்சி.. நாங்கள் ஏமாளிகள் அல்ல.. எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்..
Edappadi Palanisamy: இன்று அதாவது 2025 ஜூலை 20 தேதியான இன்று, திருத்துறைப்பூண்டியில் எடப்பாடி பழனிசாமி பிரச்சார பயணத்தை மேற்கொண்டார். அப்போது மக்களை சந்தித்து பேசி அவர், " யாருடன் வேண்டுமானாலும் நாங்கள் கூட்டணி வைப்போம், அது எங்கள் விருப்பம்" என பேசியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி, ஜூலை 20, 2025: யாருடன் வேண்டுமானாலும் அதிமுக கூட்டணி வைக்கும் அது எங்கள் விருப்பம். அதிமுக பாஜக கூட்டணியை பார்த்து முதலமைச்சருக்கு பயம் வந்துவிட்டது என எடப்பாடி பழனிசாமி தனது பிரச்சார பயணத்தில் பேசியுள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அதிமுக தரப்பில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதற்கட்ட சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். ஜூலை 7 2025 அன்று தொடங்கிய இந்த சுற்றுப்பயணம் நாளை அதாவது ஜூலை 21 2025 அன்று முடிவடைகிறது. இதில் தொகுதி வாரியாக சென்று மக்களை சந்தித்து சாலை வளம் மேற்கொண்டு உரையாற்றி வருகிறார். இந்த பிரச்சார பயணத்தின் போது தொடர்ச்சியாக திமுக அதன் கூட்டணி கட்சிகள் குறித்த பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இதற்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் தரப்பிலும் பதில் அளிக்கப்பட்டு வருகிறது.
எங்களை விமர்சனம் செய்ய என்ன அருகதை இருக்கிறது?
அந்த வகையில் எடப்பாடி பழனிசாமியின் பேச்சிற்கு, திமுக அமைச்சர் கே.என் நேரு பதிலளித்திருந்தார். அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசி இருந்தார். அதனைத் தொடர்ந்து இன்று அதாவது 2025 ஜூலை 20 தேதியான இன்று, திருத்துறைப்பூண்டியில் எடப்பாடி பழனிசாமி பிரச்சார பயணத்தை மேற்கொண்டார். அப்போது மக்களை சந்தித்து பேசி அவர், “ எடப்பாடி பழனிசாமியின் உறவினர் வீட்டில் ரெய்டு நடந்ததால் தான் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்ததாக அமைச்சர் ஒருவர் பேசியிருக்கிறார். மீண்டும் மீண்டும் தேய்ந்த ரெக்கார்டு மாதிரி இதனை எத்தனை முறை தான் சொல்லிக் கொண்டே இருப்பீர்கள்.
மேலும் படிக்க: குற்றால சாரல் திருவிழா.. வில்லுப்பாட்டு, ஆணழகன் போட்டி, நாய் கண்காட்சி.. நிகழ்ச்சி நிரல் இதோ..
இப்படி எல்லாம் பேசி நான் ஸ்டாலின் பற்றி பேசுவதை குறைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக மடைமாற்றும் விதமாக அமைச்சர் நேரு பேசியிருக்கிறார். சட்டசபை நடந்து கொண்டிருக்கும்போதே பாதியில் எழுந்து சென்றவர் நீங்கள். உங்கள் குடும்பத்தில், உங்கள் தம்பி வீட்டில், மகன் வீட்டில் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனரா இல்லையா?. இவ்வளவு அழுக்கை உங்களிடம் வைத்துக் கொண்டு எங்களை விமர்சனம் செய்ய என்ன அருகதை இருக்கிறது என காட்டமாக பேசி உள்ளார்.
கூட்டணி ஆட்சி.. நாங்கள் ஏமாளிகள் அல்ல:
தொடர்ந்து பேசிய அவர், “ யாருடன் வேண்டுமானாலும் நாங்கள் கூட்டணி வைப்போம், அது எங்கள் விருப்பம். அதிமுக பாஜக கூட்டணியை பார்த்து முதலமைச்சருக்கு பயம் வந்துவிட்டது. பாஜகவுக்கு ஆட்சியில் பங்கு கொடுப்பீர்களா என மீண்டும் மீண்டும் எதிர்க்கட்சியினர் கேள்வி கேட்கிறார்கள். நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல. அதிமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். எங்களுக்கு கூட்டணி வேண்டுமென்றால் வேண்டும், இல்லை என்றால் இல்லை எதைப் பற்றியும் எங்களுக்கு கவலை இல்லை” என குறிப்பிட்டு உள்ளார்