Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம்.. 2 வாரம் தான் டைம்.. விஜய் போட்ட உத்தரவு!

TVK Chief Vijay : பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமனம் செய்யாத நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. 2 வாரங்களுக்கு ஒரு முறை நிர்வாகிகளின் நடவடிக்கைகளை தொகுத்து கட்சி தலைமைக்கு வழங்க வேண்டும் எனவும் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

பூத் கமிட்டி  நிர்வாகிகள் நியமனம்.. 2 வாரம் தான் டைம்.. விஜய் போட்ட உத்தரவு!
Tvk Vijay (49)
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 25 Jul 2025 12:16 PM

சென்னை, ஜூலை 25 : பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமனம் செய்யாத நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. 2 வாரங்களுக்கு ஒரு முறை நிர்வாகிகளின் நடவடிக்கைகளை தொகுத்து கட்சி தலைமைக்கு வழங்க வேண்டும், பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனத்தை விரைவில் முடித்தே ஆக வேண்டும் எனவும் உத்தரவிட்டிருக்கிறார். தவெக மக்கள் விரும்பும் ‘முதல்வர் வேட்பாளர் விஜய்’ என வீடு வீடாக சென்று பிரசாரத்தை நிர்வாகிகள் தொடங்கி உள்ள நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளது. இதனால், அனைத்து கட்சிகளும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

குறிப்பாக, தற்போது அரசியல் களத்திற்கு வந்திருக்கும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கட்சியை பலப்படுத்தி வருகிறார். தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே இருப்பதால், பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். விஜய் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்தி முடித்தார். அதைத் தொடர்ந்து, 2025 ஆகஸ்ட் 25ஆம் தேதி இரண்டாவது மாநாட்டை மதுரையில் நடத்த உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதே நேரத்தில், கட்சியில் அனைத்து மட்டத்திலும் பலப்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

Also Read : ஆகஸ்ட் 25 ஆம் தேதி த.வெ.கவின் இரண்டாவது மாநாடு.. மதுரையில் நடக்கும் என விஜய் அறிவிப்பு..

இதில், முக்கியமாக பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம். இதில் விஜய் முழு கவனம் செலுத்தி வருகிறார். அதோது, தவெக நிர்வாகிகள் தவெக மக்கள் விரும்பும் ‘முதல்வர் வேட்பாளர் விஜய்’ என வீடு வீடாக சென்று பிரசாரத்தை தொடங்கியுள்ளனர். மேலும், கட்சி சார்பில் வைக்கப்படும் பேனர்களில் மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் உங்கள் விஜய் என வாசகம் தவறால் இருக்க வேண்டும் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்திருந்தார்.

அதன்படியே, மாநிலம் முழுவதும் கட்சி பேனர்களில் இதுபோன்ற வாசகம் இடம்பெற்றிருக்கிறார்.  மேலும், விஜய் விரையில் மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.  இப்படியாக அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகளை தவெக மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில், தவெக தலைவர் விஜய் முக்கிய உத்தரவை நிர்வாகிகளுக்கு பிறப்பித்துள்ளார்.

Also Read : என் உயிருக்கு இவர்களால் ஆபத்து.. காவல் ஆணையரிடம் புகாரளித்த ஆதவ் அர்ஜூனா!

அதாவது, பூத் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் கிளை கழக நிர்வாகிகள் வீடு வீடாக சென்று மக்கள் பிரச்னைகளை கேட்கவும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு நிர்வாகிகள் நேரில் செல்வதை நிர்வாகிகள் வழக்கமாக மேற்கொள்ள வேண்டும் எனவும் விஜய் உத்தரவிட்டுள்ளார். இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை அதனை தொகுத்து தலைமைக்கு வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். முறையாக பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமனம் செய்யாத நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க விஜய் உத்தரவிட்டுள்ளார்.