Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இன்று சேலத்தில் நடக்கும் த.வெ.கவின் முதல் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்.. திட்டம் என்ன?

TVK State Level Policy Briefing: தமிழக வெற்றிக் கழகத்தின் குறிக்கோள்கள் மற்றும் கொள்கைகளை மக்களிடையே கொண்டு செல்லும் வகையில், மாநில அளவிலான மாபெரும் கொள்கை விளக்க முதல் பொதுக் கூட்டம், (21.07.2025) இன்று, மாலை 04.00 மணி அளவில் சேலத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இன்று சேலத்தில் நடக்கும் த.வெ.கவின் முதல் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்.. திட்டம் என்ன?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 21 Jul 2025 07:42 AM

த.வெ.க கொள்கை விளக்க கூட்டம், ஜூலை 21, 2025: 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகிறது தமிழக வெற்றி கழகம். அந்த வகையில் இன்று தமிழக வெற்றிக்கழகத்தின் கொள்கை விளக்க முதல் பொதுக்கூட்டம் சேலத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடிகர் விஜயால் தமிழக வெற்றி கழகம் அறிவிக்கப்பட்டது. கட்சி தொடங்கியது முதலே 2026 சட்டமன்ற தேர்தல் தான் இலக்கு என திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்க பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது முக்கியமாக அடுத்த மாதம் அதாவது 2025 ஆகஸ்ட் 25ஆம் தேதி மதுரையில் கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

த.வெ.க கொள்கை விளக்க கூட்டம்:

அந்த வகையில் தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை விளக்க முதல் பொதுக்கூட்டம் 2025 ஜூலை 21 தேதியான இன்று மாலை 4 மணி அளவில் சேலத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ தமிழ்நாட்டு மக்களின் எதிர்கால நலனை நோக்கிய தமிழக வெற்றிக் கழகப் பயணத்தின் அடுத்த கட்டமாக, மக்கள் விரும்பும் முதலமைச்சர் வேட்பாளர், வெற்றித் தலைவர் விஜய், உத்தரவின் பேரில், நம் கழகத்தின் குறிக்கோள்களையும் கொள்கைகளையும் தமிழக மக்களிடையே கொண்டு சேர்க்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் படிக்க: சென்னை: மழை காலத்தில் வீடுகளுக்குள் தண்ணீர் வந்தால் எங்கே செல்வது? வெளியான அறிவிப்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் குறிக்கோள்கள் மற்றும் கொள்கைகளை மக்களிடையே கொண்டு செல்லும் வகையில், 5 கழக மண்டலங்கள், 120 கழக மாவட்டங்கள் மற்றும் 12,500 கிளைக் கழகங்கள் ஆகியவற்றில் கழகக் கொள்கை விள்க்க பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்று கழகச் செயற்குழுக் கூட்டத்தில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முதல் கூட்டம்.. எங்கே? எப்போது?


அத்தீர்மானத்தின்படி, மாநில அளவிலான மாபெரும் கொள்கை விளக்க முதல் பொதுக் கூட்டம், (21.07.2025) திங்கள்கிழமை, மாலை 04.00 மணி அளவில் சேலம், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது என்பதைக் நமது வெற்றித் தலைவர் ஒப்புதலுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் படிக்க: பாஜக யாரையும் ஏமாற்றும் கட்சி அல்ல, ஏமாறும் கட்சியும் அல்ல – அண்ணாமலை..

கழகப் பொதுச் செயலாளர் என். ஆனந்த் தலைமையில் நடைபெற உள்ள இந்தப் பொதுக் கூட்டத்தில். தலைமைக் கழக் நிர்வாகிகள் பங்கேற்றுச் சிறப்புரையாற்ற உள்ளனர். இதில் மாவட்டக் கழகச் செயலாளர்கள், சார்பு அணிகளின் அனைத்து நிலை நிர்வாகிகள் கழகத்தின் அனைத்து நிலை நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் அனைவரும் கலந்துகொண்டு, கழகத்தின் கொள்கைகள் மற்றும் குறிக்கோள்களைப் பொதுமக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.