அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாக நாதக, விசிக.. வேறு லிஸ்டில் தவெக.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு
Tamil Nadu Election Commission : நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி அங்கீகரிக்கப்பட்ட நிலையில், தமிழக வெற்றிக் கழக கட்சியை பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலில் மாநில தேர்தல் ஆணையம் சேர்த்துள்ளது. ஏற்கனவே, இந்த மூன்று கட்சிகளை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள நிலையில், தற்போது மாநில தேர்தல் ஆணையம் ஏற்று அறிவிப்பை வெளியிட்டது.

சென்னை, ஆகஸ்ட் 01 : தமிழக வெற்றிக் கழகத்தை (Tamilaga Vettri Kazhagam) பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலில் சேர்த்து தற்போது மாநில தேர்தல் ஆணையம் (Election Commission) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே, இந்திய தேர்தல் ஆணையம் தமிழக வெற்றிக் கழகத்தை பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலில் சேர்த்து 2024ஆம் ஆண்டு அறிவிப்பை வெளியிட்டது. இந்த நிலையில், அதனை தற்போது மாநில தேர்தல் ஆணையம் ஏற்றுள்ளது. அதேபோல, விடுதலை சிறுத்தைகள் கட்சி (Viduthalai Chiruthaigal Katchi), நாம் தமிழர் கட்சி (Naam Tamilar Katchi)ஆகிய கட்சிகளையும் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி பட்டியலில் மாநில தேர்தல் ஆணையம் சேர்த்துள்ளது. 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளது. இதனால், அனைத்து கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தற்போதே பெரும்பாலான கட்சிகள் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது. இந்த சூழலி, மாநில தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாக நாதக, விசிக
அதன்படி, தமிழக வெற்றிக் கழக கட்சியை மாநில அரசு தேர்தல் அங்கீகரித்துள்ளது. ஏற்கனவே, இந்திய தேர்தல் ஆணையம் தமிழக வெற்றிக் கழக கட்சியை அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பட்டியலின் சேர்த்துள்ள நிலையில், அதனை தற்போது மாநில தேர்தல் ஆணைம் ஏற்று அறிவிப்பை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சியையும் மாநில தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.
Also Read : பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகல்..




2024 மக்களவை தேர்தலில் தமிழகத்தில் 8 சதவீதம் வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றது. இதனை அடுத்து, இந்திய தேர்தல் ஆணையம் நாம் தமிழர் கட்சியை அங்கீகரித்தது. தற்போது, அதனை மாநில தேர்தல் ஆணையம் ஏற்று அறிவிப்பாணையை வெளியிட்டது. இதன்மூலம், இக்கட்சிகள் சட்டப்பேரவை, நாடாளுமன்ற, உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிடலாம். மேலும், கட்சிக்கு என்ற சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டு விடும். அதை மற்ற கட்சிகளும் பயன்படுத்த முடியாது.
Also Read : மீண்டும் விருதாச்சலம் தொகுதியில் போட்டியிடும் பிரேமலதா விஜயகாந்த்.. தேமுதிகவின் பிளான் என்ன?
2026 சட்டப்பேரவை தேர்தல்
2026 சட்டப்பேரவை தேர்தல் இன்னும் 8 மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் மூன்று கட்சிகளை அங்கீகரித்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 2026 சட்டப்பேரவை தேர்தல் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாதக, தவெக என நான்கு முனைப்போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் திமுக கூட்டணி உறுதியாக இருக்கிறது. மேலும், சமீபத்தில் அதிமுக பாஜக கூட்டணி அமைத்தது. மேலும், தங்கள் கூட்டணிக்குள் மற்ற கட்சிகள் சேர்க்க அதிமுக கூட்டணி மும்முரம் காட்டி வருகிறது. அதே நேரத்தில், நாதக மற்றம் தவெக தனித்து போட்டியிடுவதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.