Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மீண்டும் விருதாச்சலம் தொகுதியில் போட்டியிடும் பிரேமலதா விஜயகாந்த்.. தேமுதிகவின் பிளான் என்ன?

2026 Assembly Election: 2026 சட்டமன்றத் தேர்தலில் விருதாச்சலம் தொகுதியில் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுவார் என்றும் தகவல் தெரிவித்துள்ளார். 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பிரேமலதா விஜயகாந்த் இதே தொகுதியில் போட்டியிட்ட அவர் 25,908 வாக்குகளை பெற்று டெபாசிட் இழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் விருதாச்சலம் தொகுதியில் போட்டியிடும் பிரேமலதா விஜயகாந்த்.. தேமுதிகவின் பிளான் என்ன?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 29 Jul 2025 06:53 AM

சென்னை, ஜூலை 29, 2025: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கக் கூடிய நிலையில் அரசியல் கட்சிகள் தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தேமுதிகவின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விருதாச்சலம் தொகுதியில் போட்டியிட உள்ளதாக விஜய பிரபாகரன் தகவல் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தை பொறுத்தவரையில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றி கழகம் என நான்கு முணை போட்டி நடைபெற்ற வருகிறது. அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்து வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது. இதற்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் மாவட்டம் தோறும் சென்று மக்களை சந்தித்து பிரச்சார பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

அதேபோல் தமிழகத்தில் இருக்கக்கூடிய ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி தரப்பில் ஓரிணியில் தமிழ்நாடு என்ற திட்டத்தின் கீழ் உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டு வருகிறது. அதேபோல் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாவட்டந்தோறும் சென்று கள ஆய்வு மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார்.

அதிமுக உடன் கைக்கோர்க்குமா தேமுதிக?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் நெருங்கும் நிலையில் கூட்டணிக்கு பல கட்சிகள் வருகை தருவார்கள் என குறிப்பிட்டு இருந்தார். தேமுதிகவை பொறுத்தவரையில் அதன் தலைவர் விஜயகாந்த் மறைவிற்குப் பின் பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் தேமுதிகவின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது குறித்து மக்கள் மத்தியில் பெரும் கேள்வி இருந்து வருகிறது.

Also Read: தீராத மோதல்.. அன்புமணியின் நடைப்பயணத்திற்கு எதிர்ப்பு.. மீண்டும் மனு அளித்த ராமதாஸ்..

2026 சட்டமன்ற தேர்தல் தொடர்பாக விஜய பிரபாகரன் பேசுகையில் மக்கள் மனதில் நம்பிக்கை விதைக்கும் வகையில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சுற்றுப்பயணம் இருக்கும் என தெரிவித்துள்ளார். அதேபோல் சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை ஜனவரி 9, 2026 ஆம் தேதி கடலூரில் நடைபெறும் மாநாட்டில் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: த.வெ.க மற்றும் நாம் தமிழர் கட்சிக்கு அழைப்பு விடுத்த எடப்பாடி பழனிசாமி.. த.வெ.க சொன்ன பதில்..

மீண்டும் விருதாச்சலம் தொகுதியில் போட்டியிடும் பிரேமலதா விஜயகாந்த்:

அதேபோல் 2026 சட்டமன்றத் தேர்தலில் விருதாச்சலம் தொகுதியில் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுவார் என்றும் தகவல் தெரிவித்துள்ளார். 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பிரேமலதா விஜயகாந்த் இதே தொகுதியில் போட்டியிட்ட அவர் 25,908 வாக்குகளை பெற்று டெபாசிட் இழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.