1967,1977 போல 2026 சட்டப்பேரவை தேர்தலா? விஜயின் கருத்துக்கு திருமாவளவன் பதில்!
Thirumavalavan Replies To TVK Chief Vijay : 1967, 1977ஆம் ஆண்டு தேர்தலை போல, 2026 சட்டப்பேரவை தேர்தல் இருக்கும் என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கூறியதற்கு, விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். 1967, 1977ஆம் ஆண்டு நடந்த தேர்தலை போல, தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்கு வாய்ப்பில்லை என திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னை, ஜூலை 31 : 1967, 1977ஆம் ஆண்டு தேர்தலை போல, 2026 சட்டப்பேரவை தேர்தல் இருக்கும் என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் (TVK Chief Vijay) கூறியதற்கு, விசிக தலைவர் தொல்.திருமாவளவன் (Thirumavalavan) கூறியுள்ளார். 1967, 1977ஆம் ஆண்டு நடந்த தேர்தலை போல, தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்கு வாய்ப்பில்லை என திருமாவளவன் கூறியுள்ளார். 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளது. இதனால், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக, கூட்டணி பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகிறது. திமுக கூட்டணி வலுவாக இருக்கும் நிலையில், அண்மையில் அதிமுக பாஜக கூட்டணி அமைத்தது. இதில் தற்போது களத்திற்கு வந்துள்ள தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கட்சியை பலப்படுத்த அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளதால், உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தியுள்ளார். இன்னும் ஒருசில மாதங்களில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 2025 ஜூலை 30ஆம் தேதியான நேற்று கூட தமிழக வெற்றிக் கழக உறுப்பினர் செயலியை அறிமுகம் செய்தார். அப்போது அந்நிகழ்ச்சியில் பேசிய தவெக தலைவர் விஜய், “தமிழக அரசியில் நடந்த மிகப்பெரிய தேர்தல்கள். 1967, 1977ஆம் ஆண்டு நடந்த தேர்தல்களை போல, 2026ஆம் ஆண்டு தேர்தல் அமையப் போகிறது.
Also Read : பாஜக கூட்டணியில் விசிக? திருமாவளவன் பரபரப்பு விளக்கம்!




விஜயின் கருத்துக்கு திருமாவளவன் பதில்
இதில், நாம் உறுதியாக இருக்கின்றோம். முதலில் இருநதே சொல்லிக் கொண்டு இருக்கிறோம். அந்த இரண்டு மாபெரும் தேர்தல்களில், ஏற்கனவே வெற்றி பெற்றுக் கொண்டு இருந்தவர்களின் அதிகார பலம், அசுர பலம் எல்லாவற்றையும் எதிர்த்து நின்று தான் புதிதாக வந்தவர்கள் ஜெயித்து இருக்கிறார்கள். அண்ணா சொன்னதை போல, ஊருக்கு ஊர், வீதிக்கு வீதி, வீட்டுக்கு வீடு என்று அனைத்து மக்களை சந்தித்திக்கிறேன்” என கூறினார்.
இந்த நிலையில், விஜயின் கருத்துக்கு தொல். திருமாவளவன் பதில் கொடுத்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய திருமாவளவன், ”விஜய் சொல்வது போல 1967,1977ஆம் ஆண்டு நடந்தது போன்று 2026ஆம் ஆண்டு நடப்பதற்கான கள நிலவரம் தமிழகத்தில் இல்லை. எம்ஜிஆர் காலத்தில் இருந்த கள சூழல், தற்போது தமிழகத்தில் இல்லை.
Also Read : சமூக விடுதலை நீண்ட பயணம்! இதை நான் மாற்றுவேன்.. முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!
அடுத்தடுத்து நிறைய சினிமா பிரபலங்கள் அரசியலுக்கு வந்தார்கள். பெரும் செல்வாக்கூடன் வந்தார்கள். ஆனால், மக்கள் அவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை. திரைப்படத்தை நம்பி தலைவர்களை தேர்ந்தெடுக்கும் காலம் மாறிவிட்டது. அரசியல் விழிப்புணர்வு உள்ள மாநிலமாக தமிழ்நாடு மாறிவிட்டது. யார் தேவையோ மக்கள் அவர்களை தேர்வு செய்வார்கள்” என கூறியுள்ளார்.