Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஆணவப் படுகொலைகளுக்கு எதிராகத் தனிச்சட்டம் கொண்டுவருவதில் என்ன சிக்கல்? – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி..

Seeman Statement: தூத்துக்குடியில் சமீபத்தில் நடந்த ஆணவப்படுகொலைக்கு எதிராக பலரும் குரல் கொடுத்து வரும் நிலையில், தமிழகத்தில் அதற்கென தனிச்சட்டம் அமைக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மேலும், ஆணவப் படுகொலைகளுக்கு எதிராகத் தனிச்சட்டம் கொண்டுவருவதில் என்ன சிக்கல் என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆணவப் படுகொலைகளுக்கு எதிராகத் தனிச்சட்டம் கொண்டுவருவதில் என்ன சிக்கல்? – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி..
சீமான்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 03 Aug 2025 07:40 AM

சீமான் அறிக்கை: கடந்த சில தினங்களுக்கு முன்பு தூத்துக்குடியில் மென்பொருளாளர் கவின் குமார் ஆணவ படுகொலை செய்யப்பட்டார் இந்த சம்பவம் தமிழ்நாட்டையே உனக்கு எது இந்த வழக்கு தொடர்பாக மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் அதாவது கவின் குமாரை குத்தி கொலை செய்த சுர்ஜித் அவரது தாய் மற்றும் தந்தை சரவணன் ஆகியோர் மீது வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளது இந்த சம்பவம் தொடர்பாக பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தூத்துக்குடியை சேர்ந்த மென்பொறியாளர் கவிஞன் ஆணவ படுகொலை வழக்கில் ஆளும் திமுக அரசு காட்டிய மெத்தனப்போக்கு மிக மோசமான நிர்வாக செயல்பாடாகும் என தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த சீமான்:

மேலும் கவினின் உடலை வாங்க மறுத்து பெற்றோர் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு மேலாக அறப்போராட்டம் நடத்தும் அளவுக்கு அவர்களை தள்ளியது பெரும் வேதனைக்குரியதாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “ அவர்களது வீட்டுக்குச் சென்றபோது கவினின் தாயார் கண்ணீர் வடித்து, கதறியது மனதைக் கலங்கச் செய்தது. பிள்ளையைப் பறிகொடுத்துவிட்டு பரிதவித்த அந்தத் தாயின் கண்ணீரைக் கண்டு, எதுவும் செய்யவியலாத கையறு நிலையில் கூனிக் குறுகி நின்றேன்.

ஒட்டுமொத்த தமிழ்நாடும் பேசிய இப்படுகொலை குறித்து தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இதுவரை வாய்திறக்காததும், அலட்சியமாக நடவடிக்கைகளை இவ்வழக்கில் மேற்கொண்டதும் கடும் கண்டனத்திற்குரியது. சனாதன ஒழிப்பு, சாதிய எதிர்ப்பு, சமூக நீதி, சமத்துவம் என்றெல்லாம் நாளும் பேசி, விளம்பர அரசியல் செய்து வாய்ப்பந்தல் போடும் திமுக அரசு, சாதியத்திற்கு ஆதரவாக மறைமுகமாகத் துணைநிற்பது வெட்கக்கேடானது.

Also Read: பா.ம.கவிற்கு மாம்பழச் சின்னம்.. அன்புமணிக்கு வந்த அறிவிப்பு – வழக்கறிஞர் கே.பாலு சொன்னது என்ன?

தமிழ்த்தேசிய இனத்தின் ஓர்மையையும், தமிழர்களுக்கு இடையேயான சமத்துவத்தையும், இணக்கப்பாட்டையும் ஒருநாளும் ஆளும் திராவிட ஆட்சியாளர்கள் விரும்ப மாட்டார்கள். சாதி, மதத்தின் பெயரால் தன்னினப் பகை கொண்டு, ஒருவரையொருவர் வெட்டி வீழ்த்தி, நாங்கள் செத்து விழும்போது, சிந்துகிற இரத்தத்தைக் குடிக்கிற ஓநாய்களாகவே திராவிடக்கூட்டம் இருக்குமென்பதே மறுக்கவியலா வரலாற்றுப்பேருண்மையாகும். ஒருவரையொருவர் காதலித்து, மனமொத்து வாழ்க்கையைத் தொடங்க நினைக்கும் இணையர்கள் மீது சாதிவெறியின் பெயரால் நிகழ்த்தப்படும் வன்முறை வெறியாட்டங்களும், ஆணவப் படுகொலைகளும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாத பேரவலங்களாகும்.

அணவப்படுகொலைக்கு தனிச்சட்டம் இயற்ற வேண்டும்:

இதுபோன்ற சாதிய ஆணவப்படுகொலைகள் நடைபெறாமல் தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும், நிவாரணமும் கிடைக்கச் செய்யவும் இச்சமயத்திலாவது தனிச்சட்டம் இயற்ற வேண்டியது பேரவசியமாகிறது. கடந்தக் காலத்தில் சாதிய ஆணவப்படுகொலைகளுக்கு எதிராகத் தனிச்சட்டம் இயற்ற வேண்டுமெனப் பேசிய முதல்வர் ஸ்டாலின் அவர்கள், இருக்கிற சட்டங்களே போதுமென இப்போது பேசுவது சந்தர்ப்பவாத அரசியல் இல்லையா? சனநாயகத் துரோகமில்லையா?

Also Read: நயினார் நாகேந்திரன் இனியாவது உண்மை பேச வேண்டும்.. ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை வெளியீடு!

சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு எதிராகத் தனிச்சட்டம் கொண்டுவருவதில் என்ன சிக்கல்? சமூக நீதி அரசென சுயதம்பட்டம் அடித்துக் கொள்ளாத ராஜஸ்தான் மாநிலத்தில், ‘ராஜஸ்தான் திருமண இணையர் தெரிவு சுதந்திரத்தில் கௌரவம் மற்றும் பாரம்பரியம் பெயரால் தலையீடு தடுப்பு சட்டம் – 2019’ என ஆணவப்படுகொலைகளுக்கு எதிராகத் தனிச்சட்டம் இயற்றியிருக்கும்போது, தமிழ்நாட்டிலும் அதனைச் செய்ய திராவிட மாடல் நாயகருக்கு என்ன தயக்கம்?

சட்டங்கள் கடுமையாக வேண்டும்:

சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு, தண்டனைகள் உறுதிசெய்யப்பட்டால்தான் குற்றங்கள் இல்லாத ஒரு சமூகம் உருவாகும். சாதியரீதியிலான வாக்கரசியலை மனதிற்கொண்டு அதனை செய்ய ஆளும் திமுக அரசு மறுக்குமென்றால், இதுதான் உங்களது சாதி எதிர்ப்பா? இதுதான் உங்கள் சனாதன ஒழிப்பா? திராவிட மாடல் அரசா? பேரவலம்!