O. Panneerselvam: நயினார் நாகேந்திரன் இனியாவது உண்மை பேச வேண்டும்.. ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை வெளியீடு!
O. Panneerselvam Breaks Alliance with BJP: ஓ.பன்னீர்செல்வம் பாஜக கூட்டணியில் இருந்து விலகியதாக அறிவித்தார். அதற்கு முன்னும் பின்னும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை இரண்டு முறை சந்தித்தார். பிரதமர் மோடியைச் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதால் இந்த முடிவு எனக் கூறப்படுகிறது. பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இதுகுறித்து அளித்த விளக்கத்தை ஓ.பி.எஸ் மறுத்துள்ளார்.

சென்னை, ஆகஸ்ட் 2: பாஜக (BJP) தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியுடனான கூட்டணியை முறித்து கொள்வதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு முன்பும், பின்பும் என ஒரே நாளில் 2 முறை தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை (Tamil Nadu CM MK Stalin) நேரில் சந்தித்தார் ஓ. பன்னீர் செல்வம். பாஜக உடனான முறிவுக்கு பிரதமர் மோடியை ஓபிஎஸ் சந்திக்க முடியாததுதான் என்று கூறப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்தார். அப்போது, பிரதமரை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் (O. Panneerselvam) கேட்டுகொண்டபோதும், பாஜகவினர் புறக்கணித்ததாக கூறப்படுகிறது. இதன்பிறகு, கூட்டணியை முறித்ததாக ஓபிஎஸ் அறிவித்தார். தன்னிடம் சொல்லி இருந்தால் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்திருப்பேன் என நயினார் நாகேந்திரன் தெரிவித்ததில் எள்ளளவும் உண்மை இல்லை என ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ALSO READ: தந்தையை வேவு பார்த்த ஒரே மகன் அன்புமணி.. பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனை!




ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை வெளியீடு:
- பிரதமரை சந்திக்க தன்னிடம் சொல்லி இருந்தால் ஏற்பாடு செய்திருப்பேன் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்ததில் எந்தவிதமான உண்மையும் இல்லை. 6 முறை தொலைபேசி அழைத்தேன், இருப்பினும், நயினார் நாகேந்திரன் எடுக்கவில்லை. இதன்பின்னர் மெசேஜூம் அனுப்பினேன், அதற்கும் எந்த பதிலும் இல்லை.
- தமிழ்நாடு பாஜக தலைவர் என்ற பொறுப்பில் உள்ள நயினார் நாகேந்திரன் இனியாவது உண்மை பேச வேண்டும். பிரதமர் மோடியை சந்திப்பது தொடர்பாக நயினார் நாகேந்திரனிடம் நான் சொல்லவில்லை என்பது சரியல்ல, உண்மைக்குப் புறம்பானது.
- நயினார் நாகேந்திரன் பிரதமரை நான் சந்திக்க வேண்டுமென்று நினைத்திருந்தால், நான் தொலைபேசியில் அழைத்தபோதோ அல்லது மெசேஜின் அடிப்படையிலோ என்னிடம் பேசியிருக்கலாம். அப்படி இல்லையென்றால், எனது கடிதம் பத்திரிகைகளுக்கு வெளியிடப்பட்டதை அடிப்படையாக கொண்டு அதற்கு ஏற்பாடு செய்திருக்கலாம்.
- நான் பிரதமரை சந்திப்பதில் நயினார் நாகேந்திரனுக்கு துளியும் விருப்பமில்லை என்பது தெளிவாக தெரிகிறது. பிரதமரை சந்திப்பது தொடர்பாக நயினார் நாகேந்திரன் அவர்களிடம் சொல்லவில்லை.
- தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன் என்ற பொறுப்பில் இருக்கிறார். ஆகவே, இனியாவது நயினார் நாகேந்திரன் உண்மை பேச வேண்டும் என்பதே எனது விருப்பம்.
உண்மைக்கு புறமானது..
உண்மைக்கு மாறான தகவல் வெளியிடுவதை தவிர்க்குமாறு தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சித் தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்களை வலியுறுத்தல்! pic.twitter.com/p54dK8L6Mq
— O Panneerselvam (@OfficeOfOPS) August 2, 2025
ALSO READ: மதிமுகவில் முற்றிய உட்கட்சி விவகாரம்.. சென்னையில் உண்ணாவிரத போராட்டம் இருக்கும் மல்லை சத்யா..
முன்னதாக, வருகின்ற நாட்களில் திமுகவுடன் கூட்டணி வைப்பீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, “அரசியலில் நிரந்தர எதிரிகளோ, நண்பர்களோ இல்லை. தேர்தல் நெருங்கும்போது எதுவும் நடக்கலாம்” என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.