Edappadi Palaniswami: ஏழை மக்களுக்காக குரல் கொடுக்கும் ஒரே கட்சி அதிமுக.. திருச்செந்தூரில் எடப்பாடி பழனிசாமி பேச்சு!
ADMK's Pledge: தூத்துக்குடியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது பிரச்சாரத்தில், தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைந்தால் போதைப்பொருள் விற்பனை கட்டுப்படுத்தப்படும், ஏழைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும், அம்மா மினி கிளினிக்குகள் மீண்டும் அமைக்கப்படும் என உறுதியளித்தார். திமுக அரசின் தோல்விகளையும், அதிமுகவின் சாதனைகளையும் எடுத்துரைத்தார்.

தூத்துக்குடி, ஆகஸ்ட் 2: ”மக்களை காப்போம், தமிழகத்தை மீட்ப்போம்” (Makkalai Kappom Tamilagathai Meetpom) என்ற வாசகத்தின் கீழ் தனது பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக தூத்துக்குடியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (Edappadi K. Palaniswami) சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது மக்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் அதிமுக (ADMK) ஆட்சி அமைந்ததும் போதைப் பொருட்கள் விற்பனை இரும்புக்கரம் கொண்டு கட்டுப்படுத்தப்படும். போதைப்பொருள் நடமாட்டத்திற்கு முடிவு கட்டப்படும் எனவும் தெரிவித்தார்.
ஏழை மக்களுக்கு அதிமுக குரல் கொடுக்கும்:
திருச்செந்தூர் வ.உ.சி திடலில் உரையாடிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “தமிழ்நாட்டில் இன்று மக்களுக்கு பாதுகாப்பு என்பதே கிடையாது. சிறியவர்கள் முதல் பாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை. திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு செயலிழந்து கிடக்கிறது. மக்களை ஏமாற்றும் திராவிட முன்னேற்ற கழகம் மக்களிடம் இருந்து பெற்ற மனுக்களை எல்லாம் நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறது. ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி ஏழை மக்களுக்காக குரல் கொடுக்கும் ஒரே கட்சி அதிமுக. அதேநேரத்தில், திமுக ஆட்சியில் விலைவாசி உயர்ந்துள்ளது.




ALSO READ: மதிமுகவில் முற்றிய உட்கட்சி விவகாரம்.. சென்னையில் உண்ணாவிரத போராட்டம் இருக்கும் மல்லை சத்யா..
அதிமுக ஆட்சியின்போது விவசாய தொழிலாளிகளுக்கு பசுமை வீடு, விலை இல்லா கறவை ஆடுகள், மாடுகள், கோழிகள் போன்றவை இலவசமாக வழங்கப்பட்டது. அதேபோல், வருகின்ற 2026ல் அதிமுக ஆட்சி அமைந்ததும் ஏழைகள் வாழும் இடங்களில் மீண்டும் அம்மா மினி கிளினிக் கொண்டுவரப்படும்.
திருச்செந்தூரில் எடப்பாடி பழனிசாமி:
#திருச்செந்தூர் தொகுதியில் கூடிய கூட்டம் தலையா? கடல் அலையா? என கேட்கும் அளவிற்கு மக்களின் ஆர்பரிப்பு இருந்தது.
தமிழ்நாடு விரோத திமுக-விற்கு எதிரான மக்களின் #சூரசம்ஹாரம் தான் 2026 சட்டமன்றத் தேர்தல்!#மக்களைக்_காப்போம்#தமிழகத்தை_மீட்போம்#ByeByeStalin@AIADMKOfficial pic.twitter.com/JkNlWZvJTg
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) August 2, 2025
அதிமுக ஆட்சியின்போது மழைக்காலத்தில் உப்பள தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது. வருகின்ற 2026ம் ஆண்டு அதிமுக ஆட்சி அமைத்து, குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
அதிமுக அரசு அமைந்திருந்தபோது, தூத்துக்குடி விமானம் நிலையம் உண்டாக சுமார் 750 ஏக்கர் நிலம் கையகப்படுத்த நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. இப்படி நிலம் எடுப்பதற்கு முழு காரணம் அதிமுக ஆட்சிதான்.
ALSO READ: தந்தையை வேவு பார்த்த ஒரே மகன் அன்புமணி.. பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனை!
கடந்த 2011 – 2021 வரை நெடுஞ்சாலை துறை அமைச்சராக நான்தான் இருந்தேன். அப்போது, கிராமம் முதல் நகரம் வரை நவீன முறையில் அனைத்து சாலைகளும் தரமாக அமைக்கப்பட்டது. இந்தியாவிலேயே அதிக நீளம் கொண்ட தார்சாலை கொண்ட மாநிலமாக தமிழ்நாடு என்ற சூழலை அதிமுக கொண்டு வந்தது. கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் சீண்டல் என திமுக ஆட்சியில் குற்றங்கள் அதிகரித்துள்ளது. அதனை பலமுறை உணர்த்திவிட்டேன். ஆனால், திமுக தலைமையிலான அரசு கண்டு கொண்டதாக தெரியவில்லை.” என்று தெரிவித்தார்.