திமுகவிற்கு கூடுதல் பலம்.. ஓ.பி.எஸ், பிரேமலதா முதல்வர் உடன் சந்திப்பு.. பிளான் என்ன?
2026 Assembly Election: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், திராவிட முன்னேற்ற கழகத்துடன் தேமுதிக மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூட்டணியில் இணைவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் பிரேமலதா விஜயகாந்த் முதல்வருடன் சந்தித்திருப்பது பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.

சென்னை, ஆகஸ்ட் 2, 2025: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கக்கூடிய நிலையில் அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் இருக்கக்கூடிய பிரதான கட்சிகளான அதிமுக மற்றும் திமுக இடையே பலத்த போட்டி நிலவில வருகிறது. அதிமுக தரப்பில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் நெருங்கும் நிலையில் இன்னும் சில கட்சிகள் தங்களுடன் கூட்டணி அமைப்பும் என தெரிவித்துள்ளார். அதேபோல் திமுக தரப்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மக்களின் ஆதரவு திரளாக உள்ளது எனும் அடுத்த முறையும் திமுக தான் ஆட்சி அமைக்கும் என உறுதியாக பேசி வருகிறார். இரண்டு கட்சியினர் இடையே மக்களை சந்தித்து தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதிமுகவில் இருந்து விலகிய அன்வர் ராஜா:
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுகவிலிருந்து அன்வர் ராஜா விலகி திமுகவில் இணைந்தார். இது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக அதிமுகவினர் இடையே இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அன்வர் ராஜா எம்.ஜி.ஆர் காலம் முதல் அதிமுகவில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. பல தசாப்தங்களாக அதிமுகவுக்கு உறுதுணையாக இருந்த அன்வர் ராஜா விலகியது அதிமுகவினரிடையே பேர அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இரண்டு முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓ. பன்னீர்செல்வம்:
அதனை தொடர்ந்து ஜூலை 31, 2025 தேதியான நேற்று முன்தினம் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசினார். காலை நடை பயிற்சி மேற்கொண்டபோது இருவரும் சந்தித்தனர். அப்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் உடல் நலம் குறித்து விசாரித்ததாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஜூலை 31, 2025 தேவையான நேற்று முன்தினம் மாலை மீண்டும் இரண்டாவது முறையாக முதலமைச்சருல்லத்திற்கு சென்று ஓ பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து பேசினார். ஒரே நாளில் இரண்டு முறை முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்தது பெரும் பேசு பொருளாக மாறியது. இந்த சந்திப்பை முடித்து வெளியே வந்த ஓ.பி.எஸ் செய்தியாளர்களிடம் பேசிய போது, “ அரசியலில் நிரந்தர எதிரி அல்லது நிரந்தர நண்பர் என யாரும் இல்லை.
Also Read: கிருஷ்ணகிரி முதல் செங்கல்பட்டு வரை… எடப்பாடி பழனிசாமியின் 3 ஆம் கட்ட பயண விவரம்
தேர்தல் நெருங்கும் பொழுது சரியான முடிவு எடுக்கப்படும்” என தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
திமுக உடன் கூட்டணி அமைக்க தேமுதிக திட்டம்?
இது ஒரு பக்கம் இருக்க, தேமுதிகவின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசி உள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடல்நிலை குறித்து விசாரிப்பதுக்காக நேரில் சந்தித்ததாக பிரேமலதா விஜயகாந்த் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் ஏழு மாத காலங்களே இருக்கக்கூடிய நிலையில் இது போன்ற சந்திப்புகள் அரசியலில் பெரும் பேசப் பொருளாக மாறி உள்ளது.
Also Read: பாஜகவுடன் கூட்டணியா? வைகோ சொன்ன முக்கிய விஷயம்.. என்ன மேட்டர்?
பிரேமலதா தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்திருப்பது தேர்தல் நெருங்கும் நிலையில் திமுகவுடன் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுகவில் இடம்பெற்ற கூட்டணி கட்சிகள் அப்படியே தொடர்ந்து வருகிறது. கூடுதலாக கமல் ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் இணைந்துள்ளது. ஆனால் அதிமுக தரப்பில் இன்னும் கூட்டணி பலம் என்பது எதிர்பார்க்கும் அளவிற்கு இல்லை என்பதே நிதர்சனம்.
தேமுதிக எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என்பது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்படுத்தியிருக்கும் நிலையில் 2026 ஜனவரி மாதம் நடைபெறும் கட்சியின் மாநாட்டில் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.