பாஜகவுடன் கூட்டணியா? வைகோ சொன்ன முக்கிய விஷயம்.. என்ன மேட்டர்?
DMK MDMK Alliance : பாஜகவுடன் என்றைக்கும் கூட்டணி இல்லை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திட்டவட்டமாக கூறியுள்ளார். திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகுவதாக தகவல்கள் கசிந்த வண்ணம் இருந்த நிலையில், அதற்கு தற்போது வைகோ மறுப்பு தெரிவித்துள்ளார்.

சென்னை, ஆகஸ்ட் 01 : மதிமுக பொதுச் செயலாளர் வைகோ (MDMK Chief Vaiko), மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோவும் முதல்வர் ஸ்டாலினை (Vaiko Meets MK Stalin) சந்தித்துள்ளார். சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்துள்ளனர். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு வைகோ பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், “பாஜகவுடன் (BJP) என்றைக்கும் கூட்டணி இல்லை. பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளுடன் எந்த சூழ்நிலையிலும், எக்காரணத்தை கொண்டும் பாஜகவுடன் மதிமுக தொடர்பு வைத்துக் கொள்ளாது. திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறுவதாக வதந்தி பரப்பப்படுகிறது. திமுக கூட்டணி மகத்தான வெற்றியை பெறும். 2026 சட்டப்பேரவை தேர்லில் தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்கும். கூட்டணி ஆட்சி அல்ல. திமுக தனித்தே ஆட்சி அமைக்கும்” என தெரிவித்துள்ளார்.
2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாக வேலை செய்து வருகின்றர். குறிப்பாக, கூட்டணி பேச்சுவார்த்தைகளும் தீவிரமாக நடந்து வருகிறது. 2026 தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாதக, தவெக என நான்கு முனைப்போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், அண்மையில் அதிமுக பாஜக கூட்டணி அமைத்தது. இதனால், மற்ற கட்சிகள் தங்கள் அக்கூட்டணி முயற்சித்து வருகிறது. அதே நேரத்தில், தங்கள் கூட்டணி வலுவாக வைக்க திமுக தீவிரம் காட்டி வருகிறது.




Also Read : ’எதுவும் நடக்கலாம்’ ஓபிஎஸ் சொன்ன வார்த்தை.. அடுத்த கட்ட நகர்வு என்ன?
முதல்வர் ஸ்டாலினை சந்தித்த வைகோ
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் திரு. வைகோ அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களை சந்தித்து, உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். pic.twitter.com/0TU6ExHD7Q
— CMOTamilNadu (@CMOTamilnadu) August 1, 2025
வைகோ சொன்ன முக்கிய விஷயம்
தற்போது திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன், முஸ்லீம் லீக், தமிழக வாழ்வுரிமை கட்சி, மனிதநேயம் மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆட்சி ஆகியவை அங்கம் வகித்துள்ளன.
இதில் திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகுவதாக தகவல்கள் வெளியான வண்ணம் இருந்து வருகின்றனர். திமுக கூட்டணியில் இருந்து அதிமுக பாஜக கூட்டணியில் இணைவதாகவும் தகவல்கள் கசிந்தன. இந்த நிலையில் அதற்கு வைகோ மறுப்பு தெரிவித்துள்ளார்.
Also Read : பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகல்..
தங்கள் எக்காரணத்தை கொண்டு, எந்த சூழ்நிலையிலும் பாஜக உடன் கூட்டணி வைக்க மாட்டோம் என திட்டவட்டமாக கூறியுள்ளார். முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பிறகு, செய்தியாளர்களிடம் இவ்வாறு அவர் கூறினார். இதன் மூலம், திமுக கூட்டணியில் மதிமுக தொடரும் என்பது தெரியவந்துள்ளது.