Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக நான் தொடர்வேன்.. அன்புமணி ராமதாஸ் பரபரப்பு அறிக்கை!

Anbumani Ramadoss Released Statement Regarding Leader Position | பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பதவி குறித்த சர்ச்சை குறித்து அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தான் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக தொடர்வேன் என்று கூறியுள்ளார். அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக நான் தொடர்வேன்.. அன்புமணி ராமதாஸ் பரபரப்பு அறிக்கை!
அன்புமணி ராமதாஸ்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 12 Apr 2025 23:00 PM

சென்னை, ஏப்ரல் 12 : ஏப்ரல் 10, 2025 அன்று மீண்டும் பாட்டாளி மக்கள் கட்சி (PMK – Paatali Makkal Katchi) தலைவராக தன்னை தானே அறிவித்துக்கொள்வதாக அந்த கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்த நிலையில், முறைப்படி பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்திருப்பதால் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக செயல்படுவேன் என்று அன்புமணி ராமதாஸ் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி விவகாரம் குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தன்னை தானே தலைவராக அறிவித்துக்கொண்ட ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சியை ராமதாஸ் தொடங்கி நடத்தி வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அன்புமணி ராமதாஸ் அக்கட்சியின் தலைவராக அறிவிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து அவர் தலைவராக செயல்பட்டு வந்தார். இந்த நிலையில், ஏப்ரல் 10, 2025 அன்று கட்சியின் தலைவர் பொறுப்பையும் தானே ஏற்பதாக ராமதாஸ் அறிவித்தார். கட்சி தொடங்கியவர் என்பதன் அடிப்படையில் தனக்கு அந்த அதிகாரம் உள்ளதாகவும், கட்சியின் தலைவராக இருந்த அன்புமணி ராமதாஸ் இனிமேல் செயல் தலைவராக செயல்படுவார் என்றும் அவர் அறிவித்திருந்தார்.

அவரின் இந்த அறிவிப்பு பாமக உறுப்பினர்கள் மத்தியில் மட்டுமன்றி, தமிழக அரசியல் களத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த அறிவிப்பினால் தந்தை, மகனுக்கு இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் பேச்சுக்கள் எழுந்தன. ராமதாசின் இந்த அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என்றும், அன்புமணி ராமதாசை மீண்டும் தலைவராக அறிவிக்க வேண்டும் என்றும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கட்சியினர் ராமதாசை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வந்தனர். ஆனால் அவர் சமரசத்திற்கு வராத நிலையில், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

அன்புமணி ராமதாஸ் அறிக்கை

பாமக தலைவர் பதவி குறித்து அறிக்கை வெளியிட்ட அன்புமணி ராமதாஸ்

இந்த விவகாரம் குறித்து மவுனமாக இருந்து வந்த அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தான் பாட்டாளிம் மக்கள் கட்சி தலைவராக தொடர்வேன் என்று அவர் கூறியுள்ளார். இது குறித்து கூறியுள்ள அவர், முறைப்படி பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்திருப்பதால் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக செயல்படுவேன் என்று அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

மருத்துவர் அய்யா அவர்களுக்கு புகழ் சேர்க்கும் வகையில் பாமகவை தொடர்ந்து வழி நடத்துவேன் என்றும் விரைவில் பாமக தொண்டர்களை சந்திப்பேன் என்றும் அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.