Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

’எதுவும் நடக்கலாம்’ ஓபிஎஸ் சொன்ன வார்த்தை.. அடுத்த கட்ட நகர்வு என்ன?

O Panneerselvam : முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் என்டிஏ கூட்டணியில் இருந்து விலகியுள்ளார். அதே நேரத்தில், முதல்வர் ஸ்டாலினை அவர் ஒரே நாளில் இரண்டு முறை சந்தித்தது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அவர் திமுக கூட்டணியில் இணைவாரா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது.

’எதுவும் நடக்கலாம்’ ஓபிஎஸ் சொன்ன வார்த்தை.. அடுத்த கட்ட நகர்வு என்ன?
ஓ.பன்னீர்செல்வம்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 01 Aug 2025 10:35 AM

சென்னை, ஆகஸ்ட் 01 : பாஜக கூட்டணியில் (NDA Alliance) இல்லை என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (O Panneerselvam) அறிவித்தை தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலினை (DMK Alliance) சந்தித்தது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன்பின்பு செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், எதிர்காலத்தில் தேர்தல் நெருங்கும்போது எதுவும் நடக்கலாம் என தெரிவித்தார். இவரது கருத்து பல கேள்விகளை எழுப்பி உள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு (Tamil Nadu Assembly Polls) இன்னும் 8 மாதங்கள் உள்ளதால், அரசியல் களத்தில் நடக்கும் அடுத்தடுத்து நகர்வுகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தேர்தல் நெருங்குவதால், கூட்டணி பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகிறது. இந்த நேரத்தில், 2025 ஜூலை 31ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் ஸ்டாலினை இரண்டு முறை சந்தித்து பேசியுள்ளார்.

அதிமுக கூட்டணியில் இருந்து விலகல்

இது மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே என கூறப்பட்டாலும், இந்த சந்திப்புகள் கூட்டணிக்கான அச்சாரமாகவே பார்க்கப்படுகிறது என அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். அதோடு, அதிமுக தலைமையிலான கூட்டணி இருந்தும் விலகுவதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டமாக கூறினார். கூடடணியில் தனக்கான மரியாதை, முக்கியத்துவம் இல்லாததால், விளங்கியதாக அவர் விளக்கம் அளித்திருந்தார். இதன் மூலம்  ஓ.பன்னீர்செல்வத்தின் அடுத்த கட்ட நகர்வு என்னாவாக இருக்கும் என பல கேள்வி எழுப்பி உள்ளது. ஏற்கனவே  மதிமுக, திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக தகவல்கள் கசிந்த வண்ணம் இருக்கின்றன.

Also Read : அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாக நாதக, விசிக.. வேறு லிஸ்டில் தவெக.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு

திமுகவின் தொடர் வெற்றிக்கு அவர்களது பலமான கூட்டணியே காரணம்.  இந்த நிலையில், மதிமுக விலகுவது அக்கூட்டணிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தும் என அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். இதுபோன்ற சூழலில், தேமுதிக மற்றும் ஓபிஎஸ் நெருக்கம் காட்டி வருகின்றனர். இந்த சூழலில், 2025 ஜூலை 31ஆம் தேதியான நேற்று ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்தார்.

ஓபிஎஸின் அடுத்த கட்ட நகர்வு

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஓ.பன்னீர்செல்வம், ”பாஜக கூட்டணியில் மீண்டும் இணைந்த அதிமுகவுக்கு வாழ்த்துகள். அரசியலில் எனக்கென்று ஒரு சுயமரிதை உள்ளது. ஜெயலலிதா நேரடி பார்வையில் 25 ஆண்டுகள் நான் பணியாற்றியுள்ளேன்” என கூறினார். தொடர்ந்து அவரிடம் திமுக கூட்டணியில் இணைவீர்களா என்ற கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அவர், “அரசியலில் நண்பர்களும் இல்லை. எதிரிகளும் இல்லை என்பது தான் கடந்தகால வரலாறு. எதிர்காலத்தில் தேர்தல் நெருங்கும்போது எதுவும் நடக்கலாம்” என கூறினார்.  இதன் மூலம், திமுக கூட்டணியில் இணைவதற்கான சிக்கனலை கொடுப்பதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

Also Read : பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகல்..

திமுக கூட்டணியில் மதிமுக விலகும் பட்சத்தில், முக்குலத்தோர் சமூதாயத்தைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வத்தை தனது கூட்டணியில் சேர்த்துக் கொள்வதன் மூலம் வெற்றி வாய்ப்பை உறுதி செய்ய முடியும் என ஸ்டாலின் நம்புவதாக அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.  இதன் மூலம், தென் மாவட்டங்களில் குறிப்பிடத்தகுந்த முக்குலத்தோர் வாக்குகளை பெற முடியும்  திமுக எண்ணுவதாக தெரிகிறது. அதே  சமயத்தில், தவெகவுடனும்  ஓ.பன்னீர்செல்வம்  கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபவடுவதாக அரசல் புரசலாக  பேசப்பட்டு வருகிறது.