உறுப்பினர் சேர்க்கைகான புதிய செயலி.. இன்று நடக்கும் த.வெ.கவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..
TVK District Secretaries Meeting: தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று ஜூலை 30, 2025 தேதியான இன்று நடைபெறுகிறது. இதில் முக்கியமாக உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய செயலியை அறிமுகம் செய்கிறார் தலைவர் விஜய். மேலும் இந்த செயலிக்கான பயிற்சியையும் நிர்வாகிகளுக்கு அளிக்கப்பட உள்ளது.

சென்னை, ஜூலை 30, 2025: தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை கட்சி தலைவர் விஜய் இன்று அதாவது ஜூலை 30, 2025 அன்று பனையூரில் இருக்கக்கூடிய தலைமை அலுவலகத்தில் வெளியிடுகிறார். 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழக வெற்றி கழகம் தரப்பில் அதற்கான ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக கட்சி தரப்பில் பூத் கமிட்டி ஏஜெண்டுகள் அமைப்பது, நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டங்கள் என தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஜூலை 30, 2025 தேதியான இன்று பனையூர் தலைமை அலுவலகத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் மாவட்ட செயலாளர் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
தமிழகத்தை பொறுத்தவரையில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றி கழகம் என நான்கு முனை போட்டி நிலவி வருகிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழக வெற்றி கழகம் யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற கேள்விக்கு தனித்துப் போட்டியிடுவோம் என குறிப்பிட்டுள்ளனர். திமுகவுடன் பாஜக உடனும் கூட்டணி கிடையாது என கூறப்பட்டு வரும் நிலையில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்குமா என்ற கேள்வியும் எழுந்து வருகிறது. ஆனால் அதிமுகடனும் நிச்சயமாக கூட்டணி கிடையாது என aக்கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் 2வது மாநில மாநாடு:
இதற்கிடையில் தமிழக வெற்றி கழகம் தரப்பில் முதல்வர் வேட்பாளராக விஜய் களம் இறங்குவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் முக்கியமாக வருகின்ற 2025 ஆகஸ்ட் 25ஆம் தேதி மதுரையில் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நடத்தப்பட உள்ளது. கட்சியின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இன்று நடக்கும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மாநாடுக்கான ஏற்பாடுகள் குறித்தும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.




மேலும் படிக்க: பொதுத்தேர்வு அட்டவணை எப்போது வெளியாகும்? அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு
உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய செயலி:
முக்கியமாக தமிழக வெற்றி கழகம் தரப்பில் உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய செயலி தலைவர் விஜய் அறிமுகம் செய்ய உள்ளார். இந்த செயலி ஏற்கனவே 2025 ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி வெளியிடப்பட விருந்த நிலையில் அந்த செயலியில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அதாவது இந்த செயலி பதிவிறக்கம் செய்யும்பொழுது சில சிக்கல்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அது ஒத்திவைக்கப்பட்டது.
மேலும் படிக்க: பெண்கள், மாணவிகளுக்கு குட் நியூஸ்.. இனி ஈஸியா போகலாம்.. போக்குவரத்து கழகம் எடுத்த முடிவு
அதனைத் தொடர்ந்து 2025 ஜூலை 30ஆம் தேதி இந்த செயலி வெளியிடப்படுகிறது. அதேப்போல் இந்த புது செயலி மூலம் உறுப்பினர் சேர்க்கை தீவிர படுத்தப்பட உள்ளது. இந்த செயலி எவ்வாறு கையாள்வது போன்ற பயிற்சிகளையும் மாவட்ட செயலாளர்களுக்கு எடுத்துரைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.