பாஜக – திமுக நாடகத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள்.. தவெக தலைவர் விஜய் கண்டனம்!
TVK Leader Vijay Statement | தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பாஜக் - திமுக கட்சிகளில் அரசியல் நாடகத்தை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று அவர் கூறியுள்ளார். அதுமட்டுமன்றி பாஜக மற்றும் திமுகவை அவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

சென்னை, ஜூலை 28 : திராவிட முன்னேற்ற கழகம் (DMK – Dravida Munnetra Kazhagam) மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் (BJP – Bharatiya Janata Party) அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று தமிழக வெற்றிக் கழக (TVK – Tamilaga Vettri Kazhagam) தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றியில் கூறியுள்ளார். இந்த நிலையில், திமுக – பாஜக குறித்து தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் விஜய் கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
திமுக – பாஜக உறவு குறித்து விமர்சனம் செய்த விஜய்
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள விஜய், 75 ஆண்டுகளை கடந்த கட்சி என்றும் தமிழ், தமிழர் அடையாளம் என்றாலே அது தங்களுக்கு மட்டுமே உரியது என்பது போலவும் பொய்யாக மார்தட்டிக் கொள்ளும் தற்போதைய ஆளும் கட்சியான திமுக தமிழர் பெருமையான சோழ பேரரசர்களுக்கு உரிய மரியாதையை முன்பே முழுமையாக அளித்திருந்தால் இப்போது தமிழர்களுக்கு எதிராக இருக்கும் ஒன்றிய பாஜக அரசு இதை கையில் எடுத்திருக்காது என்று கூறியுள்ளார்.




இதையும் படிங்க : MK Stalin Health scheme: நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் மக்களுக்கு இதுதான் பயன்.. விளக்கமளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
திமுக அரசு சோழர்களுக்கு முன்பே மரியாதை செய்திருக்க வேண்டும் – விஜய்
— TVK Vijay (@TVKVijayHQ) July 28, 2025
இதையெல்லாம் செய்யாமல் ஒன்றிய பிரதமர் வருகை தமிழ் நாட்டுக்கு பெருமை என்று வாஞ்சையாக சொல்லி சிலாகித்தது இந்த வெற்று விளம்பரம் மாடல் திமுக அரசு மறைமுகமாக பாஜகவின் திமுகவும் ஓரணியில் இருக்கும் கபடதாரிகளாக இணைந்து நடத்தும் அரசியல் ஆதாய நாடகத்தை இனியும் தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள். தமிழகத்தை ஓர வஞ்சனையோடு ஒதுக்கும் பிரதமர் சோழர்களைப் பற்றி பாடம் எடுக்கிறார். தமிழர் கட்சி என்று மார் தட்டும் திமுக முன்பே சோழர்களுக்கு மரியாதை செய்திருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : 3 நாட்களில் அரசு பணிகளை தொடங்கும் முதல்வர் ஸ்டாலின்.. திட்டம் என்ன?
மேலும் கொள்கை, கோட்பாடுகளுடன் அறிஞர் அண்ணா ஆரம்பித்த இயக்கம் இன்று அனைத்திலும் சமரசம் செய்துக்கொண்டு தமிழுக்கும், தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் எதிராக உள்ள பாஜகவிடம் சரணடைந்து கிடப்பதுதான் வேடிக்கை. இல்லை இல்லை இதுதான் திமுக தலைமை குடும்பத்தின் வாடிக்கை என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.