Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

PM Modi’s Tamil Nadu visit: மோடியின் வருகை அவ்வளவு முக்கியத்துவம் இல்லை.. மதிமுக வைகோ பேட்டி..!

MDMK Vaiko's Reaction pm Modi Visit: 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக பிரதமர் மோடியின் தமிழ்நாடு வருகையை மதிமுக தலைவர் வைகோ விமர்சித்துள்ளார். மோடியின் வருகைக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை எனவும், தமிழ்நாட்டில் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்காமல் அரசியல் நாடகம் நடத்துகிறார்கள் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

PM Modi’s Tamil Nadu visit: மோடியின் வருகை அவ்வளவு முக்கியத்துவம் இல்லை.. மதிமுக வைகோ பேட்டி..!
மதிமுக வைகோImage Source: PTI
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 28 Jul 2025 06:44 AM

சென்னை, ஜூலை 28: 2026 சட்டமன்ற தேர்தலுக்கு (2026 Assembly Elections Tamil Nadu) முன்பாக, பிரதமர் மோடியின் வருகை மிகவும் முக்கியத்துவம் நிறைந்ததாக பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி எப்போதெல்லாம் தமிழ்நாட்டிற்கு வருகிறார்களோ, அப்போதெல்லாம் எதிர்ப்பு தெரிவிக்கும் திமுக (DMK), விசிக கட்சிகள் கூட இந்தமுறை ஆதரவு தெரிவித்தனர். கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரதமர் மோடி அமர்ந்திருந்த மேடையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், அமைச்சர்களான தங்கம் தென்னரசு, சிவசங்கர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இந்தநிலையில், பிரதமர் மோடியின் வருகை குறித்து மதிமுக தலைவர் வைகோ (Vaiko) தனது கருத்துகளை முன்வைத்துள்ளார்.

வைகோ பேட்டி:

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக தலைவர் வைகோ, “இந்திய முழுவதும்தான் பிரதமர் மோடி பயணம் செய்கிறார். ஏன் உலகெங்கிலும் கூட பல நாடுகளுக்கு இடைவிடாமல் சுற்றுப்பயணம் செய்கிறார். அதுபோலதான் தமிழ்நாட்டிற்கும் வருகை தந்தார். இதில், எந்த முக்கியத்துவமும் கிடையாது” என்றார்.

ALSO READ: லட்சிய கூட்டமா..? சினிமா ரசிகர் கூட்டமா..? போர்தான் இனி.. விஜயை மறைமுக எதிர்த்த சீமான்!

தொடர்ந்து, தமிழ்நாட்டில் 8 இடங்களை தேர்ந்தெடுத்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க இருப்பதாக கூறினீர்களே என்று செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த வைகோ, “நான் எப்போது அப்படி சொன்னேன். அப்படியான வார்த்தைகளை நான் பயன்படுத்தவே இல்லை. இதுபோன்ற வார்த்தைகளை என் வாயில் திணிக்க வேண்டாம். தமிழ்நாட்டில் ஒரு 8 இடங்களை தேர்ந்தெடுத்து எந்த பிரச்சனைகளுக்காக நான் கடந்த சில ஆண்டுகளாக போராடி வெற்றி பெற்றேனோ. அதனை அந்த வட்டார மக்களுக்கு நினைவூட்டவே இந்த கூட்டங்களை நடத்துகிறோம்.

பிரதமரை சந்தித்த துரை வைகோ:

தமிழ்நாட்டில் அப்படியான பிரச்சனைகள் நடந்தபோது, அதுகுறித்து முகத்தை கூட காட்டாதவர்கள். முணுமுணுக்க கூட செய்யாதவர்கள் இப்போது அந்த பிரச்சனைகளை கையில் எடுத்து பேசுகிறார்கள். இந்த பிரச்சனைகளை வென்று கொடுத்த இயக்கம்தான் மதிமுக. அதன்படி, வருகின்ற 2025 ஆகஸ்ட் 9ம் தேதி தூத்துக்குடியில் முதல் கூட்டத்தை நடத்துகிறோம். கடந்த 18 ஆண்டுகளாக நான் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி இருக்கிறேன். அந்த பழைய செய்திகளை நான் மக்களுக்கு நினைவூட்டவே இந்த கூட்டத்தை நடத்துகிறோம்.

ALSO READ: வைகோவுக்கு எதிராக களமிறங்கும் மல்லை சத்யா.. உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு

கடந்த 1998ம் ஆண்டு செம்மணி புதைகுழி விவகாரத்தை உலகிற்கு வெளிகொண்டு வந்தது நான்தான். இப்போது, திடீரென சிலர் ஆர்ப்பாட்டத்தை நடத்துகின்றனர். இதை பார்க்கும்போது வேடிக்கையாக உள்ளது. இப்படியாக நாங்கள் போராடி வெற்றிபெற்ற பிரச்சனைகள் குறித்தும், எங்களது பங்களிப்பு குறித்தும் விளக்கவே 8 நாள் பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளோம்” என்றார்.