Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பிரதமர் மோடியை சந்தித்த எடப்பாடி பழனிசாமி.. முன்வைத்த 3 முக்கிய கோரிக்கைகள்.. என்னென்ன?

Edappadi Palanisamy Meets PM Modi : திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடியை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். மேலும், மூன்று முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார். அதிமுக பாஜக கூட்டணி அமைந்திருக்கும் நிலையில், இந்த சந்திப்பு நடந்துள்ளது.

பிரதமர் மோடியை சந்தித்த எடப்பாடி பழனிசாமி.. முன்வைத்த 3  முக்கிய கோரிக்கைகள்.. என்னென்ன?
பிரதமர் மோடியை சந்தித்த எடப்பாடி பழனிசாமி
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 27 Jul 2025 06:29 AM

திருச்சி, ஜூலை 27 : திருச்சி விமான நிலையத்தில் பிரதமர் மோடியை (PM Modi), எடப்பாடி பழனிசாமி (Edappadi Palaniswamy) சந்தித்துள்ளது. திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடியை (PM Modi Tamil Nadu Visit) வரவேற்று, மூன்று முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார். கிட்டதட்ட மூன்று ஆண்டுகளுக்கு பிறகு, பிரதமர் மோடியை நேரில் எடப்பாடி பழனிசாமி சந்தித்துள்ளார். பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக 2025 ஜூலை 26ஆம் தேதியான நேற்று இரவு 7.30 மணியளவில் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தந்தார். தமிழகத்தின் பராமரியமான வேட்டி, சட்டை அணிந்து வந்தார். அங்கு அவரை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர்கள் ராம் மோகன் நாயுடு, எல். முருகன் உள்ளிட்டோர் வரவேற்றனர். அதைத் தொடர்ந்து, விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

தொடர்ந்து, ரூ.4,900 கோடி மதிப்பில் புதிய ரயில் திட்டஙகள், சாலை திட்டங்களையும் நாட்டுக்கு அவர் அர்ப்பணித்தார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிறகு, பிரதமர் மோடி, தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். இரவு 10.30 மணியளவில் திருச்சிக்கு வந்த பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, பிரதமர் மோடியை சந்திப்பதற்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே திருச்சியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தார். இந்த நிலையில், தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தந்தை பிரதமர் மோடியை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்.

பிரதமர் மோடியை சந்தித்த எடப்பாடி பழனிசாமி


அவருடன் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி ஆகியோரும் சந்தித்துள்ளனர். சில நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பில் பிரதமர் மோடியிடம் மூன்று முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

முன்வைத்த 3 முக்கிய கோரிக்கைகள்

அதன்படி, விவசாய கடன் வழங்குவதற்கு சிபில் ஸ்கோர் கேட்பதில் இருந்து வங்கிகள் விவசாயிகளுக்கு விதிவிலக்கு வழங்க வேண்டும். கோதாவரி – காவிரி இணைப்பு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்து உடனடியாக நிறைவேற்ற வேண்டும். தமிழ்நாட்டில் ராணுவ தளவாட உற்பத்திக்கு வழிவகுக்கும் பிரத்யேக ராணுவ வழித்தடம் ஒன்றை சென்னை, கோவை, ஓசூர், சேலம், திருச்சியை இணைத்து செயல்படுத்த வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனுவை பெற்றுக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கோரிக்கை மனுவை பரிசீலித்து ஆவண செய்வதாகஎடப்பாடி பழனிசாமியிடம் பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். இந்த சந்திப்பு மூன்று ஆண்டுகளுக்கு பிறகு நடந்துள்ளது. கடைசியாக 2021ஆம் ஆண்டு சந்தித்ததாக தெரிகிறது. அதிமுக பாஜக கூட்டணி பிரிவுக்கு பிறகு, பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி சந்திக்கவிலலை.

2024 மக்களவை தேர்தலிலும் அதிமுக, பாஜக தனிதனியாக போட்டியிட்டது. அதன்பிறகு, தற்போது அதிமுக பாஜக கூட்டணி அமைத்து இருந்தாலும், 2025 மே மாதம் ராமேஸ்வரத்திற்கு பிரதமர் மோடி வருகை தந்தபோதும், எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை சந்திக்கவில்லை. அதன்பிறகு, தற்போது இருவரின் சந்திப்பு நடந்துள்ளது.