Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Narendra Modi : தமிழகத்தின் வளர்ச்சி தான் எங்களுக்கு முன்னுரிமையாக உள்ளது.. பிரதமர் மோடி உரை!

Prime Minister Narendra Modi Speech | இரண்டு நாட்கள் பயணமாக தமிழகம் வந்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைத்தார். அப்போது பேசிய பிரதமர் மோடி, தமிழகத்தின் வளர்ச்சி தான் எங்களுக்கு முன்னுரிமையாக உள்ளது என்று கூறியுள்ளார்.

Narendra Modi : தமிழகத்தின் வளர்ச்சி தான் எங்களுக்கு முன்னுரிமையாக உள்ளது.. பிரதமர் மோடி உரை!
பிரதமர் நரேந்திர மோடி
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 26 Jul 2025 22:37 PM

தூத்துக்குடி, ஜுலை 26 : தமிழகத்தின் வளர்ச்சி தான் எங்களுக்கு முன்னுரிமையாக உள்ளது. தமிழ்நாடு வளர்ச்சியடைய வேண்டும் என்று நாங்கள் முன்னுரிமை வழங்குகிறோம் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Indian Prime Minister Narendra Modi) தெரிவித்துள்ளார். இரண்டு நாட்கள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி, தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனைய கட்டடத்தை திறந்து வைத்தபின் ஆற்றிய உரையில் இவ்வாறு கூறியுள்ளார். இந்த நிலையில், தூத்துக்குடி உரையில் பிரதமர் மோடி பேசியது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இரண்டு நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ள பிரதமர் மோடி

இங்கிலாந்து, மாலத்தீவு உள்ளிட்ட பகுதிகளுக்கு நான்கு நாட்கள் பயணம் மேற்கொண்டு இருந்த பிரதமர் மோடி, அவற்றை முடித்துக்கொண்டு இன்று (ஜூலை 26, 2025) மாலை தூத்துக்குடி வந்தடைந்தார். அதனை தொடர்ந்து சுமார் ரூ.450 கோடி மதிப்பில் சர்வதேச தரத்தில் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையத்தை அவர் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து மேடையில் பேசிய பிரதமர் மோடி, தமிழகத்தின் வளர்ச்சி குறித்து பேசினார்.

தமிழில் உரையை தொடங்கிய பிரதமர் மோடி

விமான நிலையத்தின் புதிய முனையத்தை தொடங்கி வைத்த பிரதமர் தமிழில் வணக்கம் என உரையை தொடங்கினார். அதனை தொடர்ந்து பேசிய அவர், இன்று கார்கில் வெற்றி தினம். காரிகில் போரின் வீரர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன். வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன் என்று கூறினார். ஸ்ரீ ராமரின் புனித பூமியில் காலடி எடுத்து வைப்பது பாக்கியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.