Tamil Nadu CM Stalin Discharged: பூரண நலத்துடன் வீடு திரும்பிய முதலமைச்சர் ஸ்டாலின்.. 3 நாட்கள் ஓய்வில் இருக்க அறிவுறுத்தல்..!
Tamil Nadu CM MK Stalin health update: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜூலை 21 அன்று காலை நடைப்பயணத்தின் போது தலைச்சுற்றல் காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதயத் துடிப்பு மாறுபாட்டிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, இன்று அதாவது 2025 ஜூலை 27 அன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.

சென்னை, ஜூலை 27: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (Tamil Nadu CM MK Stalin) இன்று அதாவது 2025 ஜூலை 27ம் தேதி மாலை 6.15 மணிக்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதை தொடர்ந்து, சென்னை அப்போலோ மருத்துவமனையில் (Apollo Hospitals) இருந்து 7 நாட்களுக்குப் பிறகு வீடு திரும்பினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மருத்துவமனையில் இருந்து புறப்படும்போது முதலமைச்சர் வாழ்க.. வாழ்க.. என வழிநெடுக திமுக (DMK) தொண்டர்கள் முழக்கமிட்டனர். உடல்நிலை குணமடைந்து வீடு திரும்பினாலும், 3 நாட்களுக்கு பிறகு வழக்கமான பணிகளை தொடர வேண்டுமென்ற அறிவுறுத்தியுள்ளனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு என்ன ஆனது..?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வழக்கமான காலை நடைப்பயணத்தின்போது தலைச்சுற்றல் ஏற்பட்டதால், கடந்த 2025 ஜூலை 21ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தலைச்சுற்றல் தொடர்பான பிரச்சனை காரணமாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை அண்ணா சாலைக்கு அருகிலுள்ள கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் ஆஞ்சியோகிராம் நோயறிதல் உட்பட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.




ALSO READ: பிரதமர் மோடியிடம் மனு.. முதல்வர் ஸ்டாலின் வைத்த 5 முக்கிய கோரிக்கைகள்.. என்ன விஷயம்?
இதன் காரணமாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 2025 ஜூலை 22ம் தேதி மேற்கொள்ளவிருந்த கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கான பயணம் ரத்து செய்யப்பட்டது. இந்த பயணம் மருத்துவ ஆலோசனைகளுக்கு பிறகு அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், மகள் செந்தாமரை, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் மருத்துவமனைக்குச் சென்று முதல்வரை நலம் விசாரித்தனர்.
அப்போலோ மருத்துவமனை சிகிச்சை குறித்து சொன்னது என்ன..?
முன்னதாக, அப்போலோ மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் இயக்குநர் டாக்டர் அனில் பி.ஜி. வெளியிட்ட அறிக்கையில், “தலைச்சுற்றல் தொடர்பான அறிகுறிகளுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதயத் துடிப்பில் ஏற்பட்ட மாறுபாடுகள் காரணமாகவே இந்த அறிகுறிகள் உண்டானது.
ALSO READ: முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ பரிசோதனை – அமைச்சர் துரைமுருகன்!
இன்டர்வென்ஷனல் கார்டியாலஜிஸ்ட் டாக்டர் ஜி செங்கோட்டுவேலு தலைமையிலான மருத்துவ நிபுணர் குழுவின் கருத்தின் அடிப்படையில், இந்த மாறுபாடுகளை சரிசெய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு சிகிச்சை முறையை மேற்கொண்டார். இதுகுறித்து செய்யப்பட்ட நோயறிதல் ஆஞ்சியோகிராம் இயல்பானது. மாண்புமிகு முதலமைச்சர் நலமாக உள்ளார், இரண்டு நாட்களில் தனது வழக்கமான வழக்கத்தை மீண்டும் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.
நலமுடன் வீடு திரும்பிய ஸ்டாலின்:
#WATCH | Chennai: Tamil Nadu CM MK Stalin leaves from a private hospital in Chennai, where he underwent a ‘therapeutic procedure to correct variations in heart rate’.
CM was admitted on July 21st after experiencing mild giddiness during his morning walk that day. pic.twitter.com/vDlL1NMGGp
— ANI (@ANI) July 27, 2025
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பின் அப்போலோ வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் நிபுணர் குழுவின் சிகிச்சையில் இருந்து வெற்றிகரமாக குணமடைந்ததை அடுத்து, அவர் டிஸ்சார்ஜ் செய்ய தகுதியானவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து இன்று மாலை அதாவது 2025 ஜூலை 27ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மேலும் மூன்று நாட்களுக்குப் பிறகு தனது வழக்கமான வேலைகளை தொடங்க அறிவுறுத்தப்பட்டுள்ளார்.” என்று தெரிவித்திருந்தது.