Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

விஜய் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்த நபர்.. பரபரப்பு!

Bomb Threat to Vijay Home | தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டுக்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். தகவலின் அடிப்படையில் விஜய் வீட்டில் சோதனை மேற்கொண்ட நிபுணர்கள் அதன்படி வெடிகுண்டு எதுவும் வைக்கப்படவில்லை என்பதை உறுதி செய்துள்ளனர்.

விஜய் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்த நபர்.. பரபரப்பு!
விஜய்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 27 Jul 2025 13:39 PM

சென்னை, ஜுலை 27 : நடிகரும் தமிழக வெற்றிக் கழக (TVK – Tamilaga Vetri Kazhagam) தலைவருமான விஜய் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாக  மிரட்டல் வந்துள்ளது. சென்னை நீலாங்கரையில் விஜய் தனது குடும்பத்தினருடன் வசித்து வரும் நிலையில், அந்த வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தகவல் வந்துள்ளது. அதன் அடிப்படையில் அவரின் வீட்டிற்கு சென்ற வெடிகுண்டு நிபுணர்கள், தகவல் வந்ததை போல எந்த விதமான வெடிகுண்டும் விஜய் வீட்டில் இல்லை என்பதை உறுதி செய்துள்ளனர். விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு ஏற்பட்டதால் சற்று பதற்றம் ஏற்பட்டது. இந்த நிலையில், வெடிகுண்டு மிரட்டல் குறித்து விரிவாக பார்க்கலாம்.

தவெக தலைவர் விஜய் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்த நபர்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வந்த விஜய், நடிப்பை விட்டுவிட்டு தீவிர அரசியலில் இறங்கியுள்ளார். அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகம் கட்சிடை தொடங்கியுள்ள விஜய், 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் வகையில் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். பிரசாரம் நடத்துவது, பொதுமக்களை சந்திப்பது, நலத்திட்ட உதவிகளை வழங்குவது உள்ளிட்ட செயல்கள் மூலம் பொதுமக்களை நேரடியாக சந்தித்து பேசி வருகிறார். 2026 சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பல அதிரடி நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வருகிறார். விஜய் இவ்வாறு தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ள நிலையில், அவரது வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் வந்துள்ளது.

இதையும் படிங்க : பிரதமர் மோடியை சந்தித்த எடப்பாடி பழனிசாமி.. முன்வைத்த 3 முக்கிய கோரிக்கைகள்.. என்னென்ன?

வெடிகுண்டு மிரட்டல் – அதிரடி சோதனையில் ஈடுபட்ட நிபுணர்கள்

சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில், விஜய் தனது குடும்பத்தினர் உடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், அந்த வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவலர் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் மர்ம நபர் ஒருவர் கூறியுள்ளார். இந்த சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், வெடிகுண்டு நிபுணர்கள்  உடனடியாக நீலாங்கரையில் உள்ள விஜய்யின் வீட்டிற்கு விரைந்தனர். அங்கு அவர்கள் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க : PMK Anbumani Ramadoss: திமுகவிற்கும் சமூக நீதிக்கும் சம்பந்தமும் இல்லை.. அன்புமணி ராமதாஸ் ஆவேசம்..!

சோதனையின் முடிவில் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்ததை போல குண்டு எதுவும் வைக்கப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து விஜய் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த தகவல் வெறும் புரளி என்பதை போலீசார் உறுதி செய்தனர். இதனை அடுத்து பரபரப்பு சற்று தணிந்தது.