Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Tamil Nadu News Live Updates: திமுக மண்டல பொறுப்பாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு..!

Tamil Nadu Breaking news Today 19 July 2025, Live Updates: தமிழகத்திற்கு வருகை தரும் பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை மனு அளித்துள்ளார். மருத்துவமனையில் இருப்பதால், தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமரிடம் வழங்கவுள்ள கோரிக்கைகள் அடங்கிய மனுவை தலைமைச் செயலாளர் மூலமாக கொடுத்து அனுப்பியதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 26 Jul 2025 18:38 PM
Share
Tamil Nadu News Live Updates: திமுக மண்டல பொறுப்பாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு..!
பிரதமர் மோடி

LIVE NEWS & UPDATES

  • 26 Jul 2025 06:35 PM (IST)

    PMK Anbumani Ramadoss: அன்புமணி ராமதாஸின் 2வது நாள் நடை பயணம்!

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் ‘தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்’ இரண்டாவது நாளாக செங்கல்பட்டில் தொடங்கியது.

  • 26 Jul 2025 06:25 PM (IST)

    திருவாரூரில் உர விற்பனையில் குளறுபடி – 6 கடைகளுக்கு தடை

    திருவாரூர் மாவட்டத்தில் உர விற்பனையில் முறைகேடு நடந்த குற்றச்சாட்டு அடிப்படையில் உர விற்பனை செய்ய 6 கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் 1.60 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் உரத் தட்டுப்பாடு புகாரை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் 20 கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

  • 26 Jul 2025 06:10 PM (IST)

    BJP Nainar Nagendran: பாஜக மூத்த நிர்வாகிகளுக்கு விருந்து.. நயினார் நாகேந்திரன் ஏற்பாடு..!

    பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு திருநெல்வேலியில் உள்ள தனது வீட்டில் விருந்து அளித்தார் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன். இந்த விருந்தில் பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், தமிழிசை சௌந்தரராஜன், சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • 26 Jul 2025 05:50 PM (IST)

    PMK: அன்புமணியின் திட்டமிட்டபடி நடைபயணம் தொடரும் – பாமக வழக்கறிஞர் பாலு

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் தமிழக உரிமை மீட்பு பயணம் திட்டமிட்டபடி தொடரும் என்றும், நடைபயணத்துக்கு தடை என வெளியான செய்திகள் உண்மை அல்ல என்றும் பாமக வழக்கறிஞர் பாலு பேட்டியளித்துள்ளார்.

  • 26 Jul 2025 05:40 PM (IST)

    Edappadi Palaniswami: எடப்பாடி பழனிசாமிக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு..!

    மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் சுற்று பயணத்திற்காக புதுக்கோட்டைக்கு வருகை தந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக மேற்கு மாவட்ட தலைவர் என்.ராமச்சந்திரன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

  • 26 Jul 2025 05:28 PM (IST)

    Tamil Nadu CM MK Stalin: திமுக மண்டல பொறுப்பாளர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை..!

    ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை பற்றி திமுக மண்டல பொறுப்பாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

  • 26 Jul 2025 05:00 PM (IST)

    Hunger Strike: தஞ்சையில் இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்..!

    திராவிட முன்னேற்ற கழக அரசின் தேர்தல் வாக்குறுதி 311ல் உள்ளவாறு சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி, தஞ்சை ஜூபிடர் தியேட்டர் முன்பு இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

  • 26 Jul 2025 04:45 PM (IST)

    Oraniyil Tamil Nadu: திமுக மண்டல பொறுப்பாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு..!

    ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை நிலவரம் குறித்து ஆய்வு செய்ய அப்போலோ மருத்துவமனைக்கு வர திமுகவின் மண்டல பொறுப்பாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். தேர்தல் களப்பணிகள் குறித்தும் மண்டல பொறுப்பாளர்களிடம் கேட்டறிய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • 26 Jul 2025 04:30 PM (IST)

    Tiruvallur Child Assault Case: திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு.. வெளியான குற்றவாளியின் பெயர்..!

    திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளியின் பெயர் ராஜூ பிஸ்வகர்மா என கண்டறியப்பட்டுள்ளது. இவர் அசாம் மாநிலம் தின்சுகியாவை சேர்ந்தவர் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 26 Jul 2025 04:21 PM (IST)

    Maruthamalai Temple: முருகன் சிலை அமைக்கும் பணிகளை நிறுத்த வேண்டும் – வன விலங்குகள் ஆர்வலர் முரளிதரன் வழக்கு

    கோவை மருதமலையில் 184 அடி உயரத்தில் முருகன் சிலை அமைக்கும் பணிகளை நிறுத்தக் கோரி வன விலங்குகள் ஆர்வலர் முரளிதரன் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், வனத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • 26 Jul 2025 04:05 PM (IST)

    SANSAD RATNA AWARDS 2025: திமுக எம்.பிக்கு சி.என்.அண்ணாதுரை சன்சத் ரத்னா விருது..!

    நாடாளுமன்றத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை உள்ளிட்ட 17 எம்பிக்களுக்கு சன்சத் ரத்னா விருது வழங்கப்பட்டது.

  • 26 Jul 2025 03:50 PM (IST)

    Edappadi Palaniswami: திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை – எடப்பாடி பழனிசாமி!

    எஸ்.ஐ.ராஜராஜன் கொலை வழக்கில் நேர்மையான விசாரணை நடத்தப்பட்டு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

  • 26 Jul 2025 03:35 PM (IST)

    Bhavanisagar: பவானிசாகர் ஆற்றக்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!

    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 99.00 அடியாக உயர்ந்துள்ளது. அணையிலிருந்து 3000 கன அடி முதல் 10,000 கன அடி வரை உபரி நீர் திறக்க வாய்ப்பிருப்பதால் பவானி ஆற்றக்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  • 26 Jul 2025 03:26 PM (IST)

    ஏபிஆர்ஓக்களாக திமுகவினரை நியமிக்க முயற்சி என புகார்..!

    தமிழ்நாடு அரசின் உதவி மக்கள் தொடர்பு அலுவலர்களாக திமுகவினரை நியமிக்க முயற்சிப்பதாக புகார் எழுந்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை சார்பில் இடையீட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

  • 26 Jul 2025 03:00 PM (IST)

    Child assault caught on CCTV: சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு.. குற்றவாளியை பிடிக்க உதவிய 75 சிசிடிவி கேமராக்கள்..!

    திருவள்ளூர் ஆரம்பாக்கத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக 75 சிசிடிவி கேமராக்களின் உதவியால் அசாமை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ரயிலில் பயணிப்பது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது.

  • 26 Jul 2025 02:45 PM (IST)

    பிரதமர் மோடி வருகை..! தூத்துக்குடி விமான நிலையத்தில் பலத்த கட்டுப்பாடு..!

    பிரதமர் நரேந்திர மோடி இன்று அதாவது 2025 ஜூலை 26ம் தேதி தூத்துக்குடி விமான நிலையத்தில் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. விமானப் பயணிகளை அழைத்து செல்ல வருவோருக்கு பிரதான நுழைவு வாயிலில் அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 26 Jul 2025 02:26 PM (IST)

    Tamilnadu Weather Update: ஜூலை 26ம் தேதியான இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு..?

    தமிழ்நாட்டில் 2025 ஜூலை 26ம் தேதியான இன்று நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய 2 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், தேனி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

  • 26 Jul 2025 02:00 PM (IST)

    சென்னை விமான நிலையத்தில் தங்கம், கஞ்சா பறிமுதல்

    சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் இரண்டு பயணிகளிடமிருந்து ரூ.1.05 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் கஞ்சாவை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தில் இரண்டு பேர் கைதாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

  • 26 Jul 2025 01:45 PM (IST)

    ‘தமிழ்நாடு பெரியார் புராணம் அல்ல’ – தமிழிசை

    தமிழ்நாடு பெரியார் புராணம் அல்ல என்றும் நமது பெரிய புராணம் ஆன்மீக தமிழ், காவி தமிழ் தான் என்றும் நான்கு வருடத்தில் செய்ய முடியாததை 45 நாட்களில் எப்படி திமுகவால் செய்ய முடியும் என்றும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

  • 26 Jul 2025 01:30 PM (IST)

    ராகுல் காந்தி போல தவறை ஸ்டாலின் உணர்வாரா? – அன்புமணி

    சாதிவாரி கணக்கெடுப்பில் ராகுல் காந்தி உணர்ந்த வரலாற்று தவறை முதல்வர் ஸ்டாலின் உணர்வாரா என பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், சாதிவாரி விவரங்கள் வெளிவந்தால், மக்களை ஏமாற்றி பிழைக்க முடியாது என முதல்வரின் கருத்து முழுமையான சமூகநீதியை வழங்க சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என உணர வேண்டும் என தெரிவித்தார்.

  • 26 Jul 2025 01:15 PM (IST)

    வைகோவால் மன உளைச்சல் – மல்லை சத்யா

    மன உளைச்சலில் ஏற்படுத்திய மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு எதிராக, மக்கள் மன்றத்தில் நீதி கேட்டு 2025 ஆகஸ்ட் 2 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரம் இருக்கப் போகிறேன் என்றும் இந்த உண்ணாவிரதம் சேப்பாக்கம் சிவானந்தா சாலையில் நடைபெறும் என்றும் மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா தெரிவித்துள்ளார்.

  • 26 Jul 2025 12:50 PM (IST)

    பிரதமர் மோடிக்கு முதல்வர் கோரிக்கை மனு

    தமிழகத்திற்கு வருகை தரும் பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை மனு அளித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “மருத்துவமனையில் இருப்பதால், தமிழ்நாட்டிற்கு வரும் மாண்புமிகு பிரதமர் அவர்களிடம் வழங்கவுள்ள கோரிக்கைகள் அடங்கிய மனுவைத் தலைமைச் செயலாளர் மூலமாகக் கொடுத்து அனுப்பியுள்ளேன்.
    மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்கள் மாண்புமிகு பிரதமர் அவர்களிடம் வழங்குவார்” என குறிப்பிட்டுள்ளார்.

    முதல்வர் கோரிக்கை மனு

  • 26 Jul 2025 12:35 PM (IST)

    புதுக்கோட்டை இரட்டை கொலை – 7 பேர் கைது

    புதுக்கோட்டை மாவட்டத்தில் அண்ணன் தம்பி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ.40 ஆயிரம் பண பிரச்னையால் கண்ணன், கார்த்திக், முத்துக்குமார் உள்ளிட்ட 7 பேர் சேர்ந்து வெட்டிக் கொலை செய்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

  • 26 Jul 2025 12:15 PM (IST)

    ஒருதலைக் காதல் – மாணவிக்கு கத்திக்குத்து

    ராணிப்பேட்டையில் கல்லூரி மாணவியை மூன்று ஆண்டுகளாக ஒருதலை பட்சமாக காதலித்த வந்த இளைஞர், அவரை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். காதலித்த மறுத்த காரணத்தால், கல்லூரிக்கு சென்று திரும்பிய மாணவியை தந்தை கண்முன்னே கவியரசு என்ற இளைஞர் குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த மாணவிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  • 26 Jul 2025 11:50 AM (IST)

    பனிமய மாதா பேராலய திருவிழா கொடியேற்றம்

    தூத்துக்குடி பனிமய மாத போராலயத்தின் 443வது திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் முழக்கத்துடன் பனிமய மாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

  • 26 Jul 2025 11:35 AM (IST)

    சென்னை குடிநீர் விநியோகம் ரத்து

    சென்னை மாநகராட்சியின் 7 முதல் 13 வரையுள்ள 7 மண்டலங்களில் 2025 ஜூலை 30ஆம் தேதி முதுல் ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருநது வரும் பிரதான குழாயை மற்றொரு குழாயோடு, இணைக்கும் பணியால் ரத்து செய்யப்படுகிறது.

  • 26 Jul 2025 11:15 AM (IST)

    கோவையில் 5 சுங்கச்சாவடிகள் மூடல்

    கோவை மாவட்டத்தில் எல் அண்டி டி சாலையில் உள்ள ஐந்து சுங்கச்சாவடிகள் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இருவழிச்சாலையாக உள்ள எல் அண்டி டி சாலையை, நான்கு வழிச்சாலையாக மாற்றப்படுவதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், மதுக்கரை சுங்கக்சாவடியில் மட்டும் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 26 Jul 2025 10:50 AM (IST)

    சிறுமி பாலியல் வன்கொடுமை – கைதான இளைஞர் வாக்குமூலம்

    திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான இளைஞர் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார். அதாவது, சிறுமியை வன்கொடுமை செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதன்படி, காவல்துறை நடத்திய விசாரணையின்போது, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிகிறது.

  • 26 Jul 2025 10:35 AM (IST)

    குற்றாலத்தில் களைக்கட்டியுள்ள சீசன்.. குவியும் சுற்றுலாப் பயணிகள்

    விடுமுறை தினமான இன்று தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் சீசன் களைகட்டியுள்ளது. கடந்த வாரம் விடுமுறை நாளில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

  • 26 Jul 2025 10:20 AM (IST)

    அன்புமணி நடைபயணத்திற்கு தடையில்லை – சென்னை காவல்துறை விளக்கம்

    அன்புமணி நடைபயணத்திற்கு தடை விதிக்கவில்லை என தமிழக காவல்துறை விளக்கமளித்துள்ளது. அந்தந்த காவல் ஆணையர், எஸ்.பி-க்கள் மனுக்களை பெற்று பரிசீலனை செய்து அனுமதி கொடுக்குமாறு டிஜிபி சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 26 Jul 2025 10:00 AM (IST)

    அன்புமணியின் நடைபயணம் திட்டமிட்டபடி தொடரும் – வழக்கறிஞர் பாலு

    அன்புமணியின் நடைபயணம் திட்டமிட்டபடி தொடரும் என பாமகவின் வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார். பேஸ்புக்கில் இதுதொடர்பாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அவர்,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு அனுப்பப்பட்ட டிஜிபி அலுவலக சுற்றறிக்கை தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

  • 26 Jul 2025 09:40 AM (IST)

    பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் 17 மின்சார ரயில் சேவை ரத்து

    கும்மிடிப்பூண்டி – கவரப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அவ்வழியாக செல்லும் 17 மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. பயணிகள் தங்கள் பயணங்களை திட்டமிட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் படிக்க

  • 26 Jul 2025 09:20 AM (IST)

    பெண் போலீஸ் வீட்டில் நகை கொள்ளை.. சிக்கிய காவலர்!

    நெல்லை காவலர் குடியிருப்பில் உள்ள வீட்டில், 30 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் காவலர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆன்லைன் ரம்மியில் இழந்த பணத்தை ஈடுகட்ட மணிகண்டன் என்ற காவலர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் என தெரிய வந்துள்ளது. மேலும் படிக்க

  • 26 Jul 2025 09:00 AM (IST)

    சென்னையில் தாக்குதலுக்குள்ளான எஸ்.ஐ. உயிரிழப்பால் அதிர்ச்சி

    சென்னை எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனை அருகே கடந்த 18ஆம் தேதி கொலை வெறி தாக்குதலுக்குள்ளான எஸ்.ஐ. ராஜாராமன் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • 26 Jul 2025 08:40 AM (IST)

    மின் கசிவால் வெடித்து சிதறிய எல்.இ.டி டிவி.. ரூ.3 லட்சம் சேதம்!

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகேயுள்ள ஒழுகமங்கலம் கிராமத்தில் வசித்து வரும் சிட்டு என்பவர் வீட்டில் எல்.இ.டி டிவி வெடித்து தீவிபத்து ஏற்பட்டது. மின் கசிவால் ஏற்பட்ட தீயில் ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்தன. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் படிக்க

  • 26 Jul 2025 08:25 AM (IST)

    சிகிச்சை, பரிசோதனைகள் நிறைவு: முதலமைச்சர் ஸ்டாலின் டிஸ்சார்ஜ் பற்றி வெளியான தகவல்

    உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் முதலமைச்சர் ஸ்டாலின் தற்சமயம் ஓய்வில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பல்வேறு விதமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் நாளை (ஜூலை 27) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது.

  • 26 Jul 2025 08:05 AM (IST)

    கும்மிடிப்பூண்டி சிறுமி விவகாரம்.. கைதான நபரிடம் போலீசார் விடிய விடிய விசாரணை

    திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் 10 நாட்களுக்குப் பின் தீவிர தேடுதல் வேட்டையில் கைது செய்யப்பட்ட வடமாநில இளைஞரிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். தகவலறிந்து அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தில் கூடியதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

  • 26 Jul 2025 07:50 AM (IST)

    உங்களுடன் ஸ்டாலின் முகாம்.. சென்னையில் மட்டும் 96,739 விண்ணப்பங்கள்!

    சென்னையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலம் கடந்த ஜூலை 15ம் தேதி முதல் இதுவரை 96,739 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக பெருநகர மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்காக மட்டும் கிட்டதட்ட 60 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

  • 26 Jul 2025 07:35 AM (IST)

    TN Rain News Live: காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு

    வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும் ஜூலை 26,27ஆம் தேதிகளில் கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, மிக கனமழைக்கான எச்சரிக்கை நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க

  • 26 Jul 2025 07:15 AM (IST)

    PM Modi: 2 நாட்கள் பயணமாக இன்று தமிழ்நாடு வருகை தரும் பிரதமர் மோடி

    பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் பயணமாக இன்று தமிழ்நாடு வருகை தருகிறார். மாலை தூத்துக்குடி விமான நிலையம் வரும் அவர், அங்கு கட்டப்பட்டுள்ள புதிய விமான நிலைய முனையத்தை திறந்து வைக்கிறார். பின்னர் இரவு திருச்சிக்கு செல்கிறார். மேலும் படிக்க

  • 26 Jul 2025 07:00 AM (IST)

    அன்புமணி பயணத்துக்கு தடை.. நீதிமன்றத்தை நாட முடிவு என தகவல்

    பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் 100 நாட்கள் தமிழ்நாட்டின் மக்களை சந்திக்கும் வகையில் நடைபயணம் தொடங்கியுள்ளார். திருப்போரூரில் தொடங்கிய அவர் பயணத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து உயர்நீதிமன்றத்தை நாட அன்புமணி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் 100 நாட்கள் தமிழ்நாட்டின் மக்களை சந்திக்கும் வகையில் நடைபயணம் தொடங்கியுள்ளார். திருப்போரூரில் உள்ள கந்தசாமி கோயிலில் சாமி தரிசனம் செய்து தனது பயணத்தை அவர் தொடங்கினார். தனது தந்தையும் பாமக நிறுவனமான ராமதாஸின் எதிர்ப்பை மீறி இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார். பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று தமிழ்நாட்டிற்கு வருகை தருகிறார். மாலையில் தூத்துக்குடி விமான நிலையம் வரும் அவர் அங்கு கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தை திறந்து வைக்கிறார். தொடர்ந்து இன்று இரவு பிரதமர் திருச்சி செல்கிறார். பிரதமர் வருகையை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு வருகை தரும் பிரதமர் மோடியை சந்திக்க அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களுக்கு நேரம் ஒதுக்கப்படுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் இன்று காலை 9 மணிக்கு தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. மாலை 5 மணி வரை இந்த முகாம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. திருவள்ளூர் கும்மிடிப்பூண்டி சிறுமி விவகாரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளில் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அதுதொடர்பான தகவல்கள் மற்றும் தமிழ்நாட்டில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் பற்றிக் காணலாம்.

மேலும் தமிழ்நாடு தொடர்பான செய்திகளை தெரிந்துக் கொள்ள

Published On - Jul 26,2025 7:00 AM