Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

3 நாட்களில் அரசு பணிகளை தொடங்கும் முதல்வர் ஸ்டாலின்.. திட்டம் என்ன?

Tamil Nadu CM MK Stalin: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் மேற்கொள்ள இருந்த கோவை மற்றும் திருப்பூர் பயணம் ரத்து செய்யப்பட்டது. அதேபோல் அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் மூன்று நாட்களுக்கு பிறகு மீண்டும் அரசு பணிகள் தொடங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது

3 நாட்களில் அரசு பணிகளை தொடங்கும் முதல்வர் ஸ்டாலின்.. திட்டம் என்ன?
முதல்வர் ஸ்டாலின்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 28 Jul 2025 06:49 AM

சென்னை, ஜூலை 28, 2025: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக சென்னையில் இருக்கக்கூடிய அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு பல்வேறு உடல் நலப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் ஜூலை 27, 2025 தேதியான நேற்று மாலை வீடு திரும்பினார். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொழுது நலம் விசாரித்த அரசியல் இயக்க தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், தமிழ்நாடு மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி:

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடந்த 2025 ஜூலை 21ஆம் தேதி வழக்கமான நடை பயிற்சி மேற்கொண்ட பொழுது தலைசுற்றல் ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேலும் அவருக்கு ஆஞ்சியோ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. மருத்துவமனையில் இருந்தபடியே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஓரணியில் தமிழ்நாட்டின் செயல்பாடுகள் குறித்து காணொளி காட்சி மூலமாக நிர்வாகிகள் இடம் கேட்டு அறிந்தார்.

மேலும் படிக்க: செங்கல்பட்டு, விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.. முழு விவரம் இதோ..

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் மேற்கொள்ள இருந்த கோவை மற்றும் திருப்பூர் பயணம் ரத்து செய்யப்பட்டது. அதேபோல் அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. மருத்துவமனையில் இருந்தபடியே அவர் ஆலோசனைக் கூட்டங்களும் மேற்கொண்டார். அதேபோல் தமிழகத்திற்கு வருகை தந்திருந்த பிரதமர் மோடி இடம் கடிதத்தையும் அமைச்சர் தங்கம் தென்னரசு மூலம் கொடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

மூன்று நாட்களில் அரசு பணிகள் தொடக்கம்:

இந்நிலையில் அவர் பூரண குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் மூன்று நாட்களுக்கு பிறகு மீண்டும் அரசு பணிகள் தொடங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுபிரமணியன் ஏற்கனவே தெரிவித்திருந்தது போல நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் என்பது ஆகஸ்ட் 2, 2025 ஆம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: பூரண நலத்துடன் வீடு திரும்பிய முதலமைச்சர் ஸ்டாலின்.. 3 நாட்கள் ஓய்வில் இருக்க அறிவுறுத்தல்..!

அனைவருக்கும் நன்றி – முதலமைச்சர் ஸ்டாலின்:


மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொழுது அக்கறையுடன் விசாரித்து நலம் பெற வாழ்த்து அனைத்து அரசியல் இயக்க தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், நீதி அரசர்கள், அரசு அதிகாரிகள், துறை கலைஞர்கள் என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள், உள்ளிட்ட தமிழ்நாடு மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி என தனது எக்ஸ் வாலைதல பக்கத்தில் தெரிவித்துள்ளார்