Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பொதுத்தேர்வு அட்டவணை எப்போது வெளியாகும்? அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

Tamil Nadu Public Exam Timetable 2025-26 : 2025-2026ஆம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு கால அட்டவணை 2025 அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இன்னும் ஒருசில மாதங்களில் காலாண்டு தேர்வு நடைபெற உள்ள நிலையில், இதுபோன்ற அறிவிப்பை அன்பில் மகேஷ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

பொதுத்தேர்வு அட்டவணை எப்போது வெளியாகும்? அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு
அன்பில் மகேஷ்Image Source: PTI
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 29 Jul 2025 16:31 PM

சென்னை, ஜூலை 29 : 2025-26ஆம் கல்வியாண்டிற்கான பொதுத் தேர்வு கால அட்டவணை 2025 அக்டோர் மாதத்தில் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். அதோடு, 2025 அக்டோபர் 18ஆம் முதல் 26ஆம் தேதி வரை காலாண்டு தேர்வும், 2025 டிசம்பர் 15ஆம் தேதி முதல் டிசம்பர் 23ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வும் நடைபெறும் எனவும் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளது. 2025-26ஆம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் 2025 ஜூன் 2ஆம் தேதி தொடங்கப்பட்டது. 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அன்று முதல் வகுப்புகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. இன்னும் ஒரு சில மாதங்களில் காலாண்டு தேர்வு நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து மாணவர்களும் தயார் செய்து வருகின்றனர். அதே நேரத்தில், ஆசிரியர்களும் பாடங்களை முடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் அன்பில் மகேஷ், ”மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் ஆலோசனையின்படி, கடந்தாண்டு போலவே 2025-2026ஆம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு கால அட்டவணை அக்டோபர் மாதம் வெளியிடப்படும். இத்துடன் பள்ளிக் கல்வித்துறையின்(2025-2026) நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள காலாண்டு/அரையாண்டுத் தேர்வுக்கான தேதிகள் அடங்கிய பக்கங்களை இணைத்துள்ளோம். மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தன்னம்பிக்கையோடு தயார் ஆகுங்கள்” என குறிப்பிட்டு இருக்கிறார்.

Also Read : முதுகலை ஆசிரியர் தேர்வு ஒத்திவைப்பு.. எப்போது? TRB வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

அரையாண்டு, காலாண்டு தேர்வு விவரம்

2025-26ஆம் கல்வியாண்டிற்கான காலாண்டு தேர்வு 2025 செப்டம்பர் 18ஆம் தேதி முதல் செப்டம்பர் 26ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து, 2025 செப்டம்பர் 29ஆம் தேதி முதல் அக்டோபர் 5ஆம் தேதி வரை 9 நாட்களுக்கு காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, 2025 டிசம்பர் 15ஆம் தேதி முதல் 205 டிசம்பர் 23ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெற உள்ளது.

இதன்பிறகு, 2026 ஜனவரி 4ஆம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு 2026 ஏப்ரல் 10ஆம் தேதி தொடங்குவதாக ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்து இருந்தது.

Also Read : ஆகஸ்ட் 5ல் விடுமுறை.. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு

மேலும், 2025-26ஆம் கல்வியாண்டிற்கான கடைசி வேலை நாள் 2026 ஏப்ரல் 24ஆம் தேதி எனவும் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தான், முழு ஆண்டு தேர்வுக்கான முழு அட்டவணையை 2025 அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படும் என அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.