Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மாணவர்களுக்கு குட் நியூஸ்.. இத்தனை நாட்கள் விடுமுறையா? 2025-26 பள்ளி நாட்காட்டி வெளியீடு!

Tamil Nadu School 2025-26 Calendar : தமிழகத்தில் 2025-26ஆம் கல்வியாண்டிற்கான நாட்காட்டியை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில், 2025-26 கல்வியாண்டின் மொத்த வேலை நாட்கள் 210 என அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, 2025-26 கல்வியாண்டில் அனைத்து சனி, ஞாயிற்று கிழமைகளிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு குட் நியூஸ்.. இத்தனை நாட்கள் விடுமுறையா? 2025-26 பள்ளி நாட்காட்டி வெளியீடு!
மாணவர்கள்Image Source: PTI
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 14 Jun 2025 07:17 AM

சென்னை, ஜூன் 14 : தமிழகத்தில் 2025-26ஆம் கல்வியாண்டுக்கான நாள்காட்டியை (Tamil Nadu School Calendar) பள்ளிக்கல்வித்துறை (Tamil Nadu Education Department) வெளியிட்டுள்ளது. அதில், காலாண்டு, அரையாண்டு, பொதுத் தேர்வு தேதிகள், விடுமுறை நாட்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகத்தில் 2025 ஜூன் 2ஆம் தேதி திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. கிட்டதட்ட 52 நாட்கள் விடுமுறைக்கு பிறகு 2025 ஜூன் 2ஆம் தேதி 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்கப்பட்டன. இந்த நிலையில் தான், தமிழகத்தில் 2025-26ஆம் கல்வியாண்டுக்கான நாள்காட்டியை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-26ஆம் கல்வியாண்டில் வேலை நாட்கள் 210 ஆகும். கடந்த கல்வியாண்டிலும் (2024-25) 210 நாட்கள் வேலை நாட்களாக இருந்தன.

2025-26ஆம் கல்வியாண்டிற்கான நாட்காட்டி வெளியீடு

2025-26ஆம் கல்வியாண்டில் அனைத்து சனி, ஞாயிற்றுகிழமைகளுக்கும் பள்ளிகள் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், தமிழகத்தில் காலாண்டு தேர்வுகள் 2025 செப்டம்பர் 18 முதல் 26ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.  இதைத் தொடர்ந்து, 2025 செப்டம்பர் 29ஆம் தேதி முதல் அக்டோபர் 5ஆம் தேதி வரை 9 நாட்களுக்கு காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலாண்டு விடுமுறையிலேயே ஆயுத பூஜை, விஜயதசமி விடுமுறை வருகிறது. தொடர்ந்து, 2025 டிசம்பர் 15ஆம் தேதி முதல் டிசம்பர் 23ஆம தேதி வரை அரையாண்டு தேர்வு நடத்தப்படும். 2025 டிசம்பர் 24ஆம் தேதி முதல் 2026 ஜனவரி 4ஆம் தேதி வரை 12 நாட்களுக்கு அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அரையாண்டு விடுமுறையை முடிந்து பள்ளிகள் 2026 ஜனவரி 5ஆம் தேதி திறக்கப்படுகிறது. அதன்பிறகு, 2026 ஜனவரி 14ஆம் தேதி முதல் 2025 ஜனவரி 18ஆம் தேதி வரை பொங்கல் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. 2026ஆம் ஆண்டில் பள்ளிகளுக்கு தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் பொங்கல் விடுமுறை வருகிறது.

எத்தனை நாட்கள் விடுமுறை

2026 பிப்ரவரி 1ஆம் தேதி தைப்பூச நாள் விடுமுறை வருகிறது. அதைத் தொடர்ந்து, 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு 2026 ஏப்ரல் 10ஆம் தேதி தொடங்குகிறது. 2025-26ஆம் கல்வியாண்டிற்கான கடைசி வேலை நாள் 2026 ஏப்ரல் 24ஆம் தேதியாகும். அதன்பிறகு, 2026 ஏப்ரல் 25ஆம் ஆண்டு முதல் கோடை விடுமுறை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறையை தாண்டி, வகுப்புகள் குறித்த விவரங்களையும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, விளையாட்டு வகுப்புகளுக்கு வாரத்தில் 2 நாட்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும். 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நன்னெறி வகுப்புகளுடன் புதிதாக Easy English, Fun With Maths வகுப்பு நடத்த வேண்டும். 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மொழி ஆய்வகம், நூலகம், கல்வி சார் செயல்பாடுகள், கல்வி சாரா செயல்பாடுகள், பாட வகுப்பு நடத்த வேண்டும்.

11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நீதி போதனை, மதிப்புக் கல்வி, மனநலம் மற்றும் வாழ்வியல் திறன் ஆகியவற்றிற்கு பாட வகுப்புகள் நடத்த வேண்டும். மனநல மற்றும் வாழ்வியல் திறன் பாடல் வகுப்புகளில் மாணவர்கள் அவர்களை குறித்த எழுதுதல், கவனம் குவித்தல், உன்னை அறிந்தால் என மாணவர்களின் நலம் சார்ந்த பாடங்களை எடுக்க அசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

சாம்பியன் தென்னாப்பிரிக்காவுக்கு இவ்வளவு கோடியா..? முழு விவரம்!
சாம்பியன் தென்னாப்பிரிக்காவுக்கு இவ்வளவு கோடியா..? முழு விவரம்!...
ஸ்ரீலீலாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பராசக்தி இயக்குநர்!
ஸ்ரீலீலாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பராசக்தி இயக்குநர்!...
விஷ்ணு மஞ்சுவின் 'கண்ணப்பா' படத்தின் ட்ரெய்லர் வெளியானது!
விஷ்ணு மஞ்சுவின் 'கண்ணப்பா' படத்தின் ட்ரெய்லர் வெளியானது!...
மதுரையில் காவல் நிலையத்தை அடித்து நொறுக்கிய குற்றவாளி..
மதுரையில் காவல் நிலையத்தை அடித்து நொறுக்கிய குற்றவாளி.....
மதுரை- அபுதாபி முதல் விமானம் - தமிழில் பேசிய பைலட்
மதுரை- அபுதாபி முதல் விமானம் - தமிழில் பேசிய பைலட்...
பவுண்டரி எல்லை கேட்சில் புதிய மாற்றம்! இனி இது சட்டவிரோதம்..!
பவுண்டரி எல்லை கேட்சில் புதிய மாற்றம்! இனி இது சட்டவிரோதம்..!...
தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் ரயில்கள்.. தெற்கு ரயில்வே..
தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் ரயில்கள்.. தெற்கு ரயில்வே.....
எனது அடுத்த படம் இப்படித்தான் இருக்கும்- இயக்குநர் பிரேம் குமார்
எனது அடுத்த படம் இப்படித்தான் இருக்கும்- இயக்குநர் பிரேம் குமார்...
”மதம் மக்களுக்கானது, அரசியலுக்கானது இல்லை” - திருமாவளவன்..
”மதம் மக்களுக்கானது, அரசியலுக்கானது இல்லை” - திருமாவளவன்.....
விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.25 லட்சம் - Air India
விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.25 லட்சம் - Air India...
போன் எண்ணை சேமிக்காமல் வாட்ஸ்அப்பில் கால் செய்ய முடியுமா?
போன் எண்ணை சேமிக்காமல் வாட்ஸ்அப்பில் கால் செய்ய முடியுமா?...