மதிமுகவில் முற்றிய உட்கட்சி விவகாரம்.. சென்னையில் உண்ணாவிரத போராட்டம் இருக்கும் மல்லை சத்யா..
MDMK Mallai Sathya Protest: மதிமுகவில் உட்கட்சி விவகாரம் உச்சக்கட்டத்தை எட்டிய நிலையில், மதிமுகவின் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா சென்னையில் உள்ள சிவானந்த சாலையில் உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறார். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த போராட்டம் நடைபெறுகிறது,

சென்னை, ஆகஸ்ட் 2, 2025: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கக் கூடிய நிலையில் அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியில் உட்கட்சி விவகாரம் உச்சத்தில் இருக்கும் நிலையில் அதனை தொடர்ந்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தில் உட்கட்சி விவகாரமும் தலைதூக்கி உள்ளது. அந்த வகையில் மதிமுகவின் துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா இன்று அதாவது 2025 ஆகஸ்ட் 2ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளார். மதிமுகவில் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவுக்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருகிறது. கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மல்லை சத்யாவை துரோகி என குறிப்பிட்டு குற்றச்சாட்டை முன் வைத்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மல்லை சத்யா அறிக்கையொன்றை வெளியிட்டார். அதில் பொதுச்செயலாளர் வைகோ தனது மகன் துரை வைகோவிற்காக தன்னை பழி சுமத்துவதா என கேள்வி எழுப்பி இருந்தார். மேலும் துரோக பட்டம் எதற்கு எனவும் அது உண்மையானால் நான் என்றோ இறந்து போயிருப்பேன் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
நடந்தது என்ன?
மதிமுகவில் ஆரம்ப காலம் தொட்டே மல்லை சத்யா உறுப்பினராக இருந்து வருகிறார். வைகோவின் தளபதி எனவும் அறியப்படும் இவரை பல நேரங்களில் பல மேடைகளில் வைகோ புகழ்ந்து பேசும் நிகழ்வுகளும் நடந்துள்ளது. அதாவது வைகோவின் உயிரை இரண்டுமுறை மல்லை சத்தியா காப்பாற்றியதாகவும் நெகிழ்ச்சியுடன் சமீபத்தில் கூட பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் கடந்த சில மாதங்களாக மல்லை சத்யா மற்றும் வைகோ இடையை கருத்து வேறுபாடுகள் நிலவி வருகிறது. தற்போது அது உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
மேலும் படிக்க: நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்.. தமிழகம் முழுவதும் 1,256 முகாம்கள்.. தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்..
உண்ணாவிரத போராட்டம்:
இதனைத் தொடர்ந்து மல்லை சத்யா 2025 ஆகஸ்ட் 2ஆம் தேதி ஆன இன்று சென்னை சிவானந்த சாலையில் உண்ணாவிரத போராட்டம் இருப்பதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “ இன்று வரை கட்சியிலிருந்து நான் நீக்கப்படவில்லை. பொதுமக்கள் மத்தியில் நீதி கேட்டு உண்ணாவிரத போராட்டத்தை சென்னை சேப்பாக்கம் சிவானந்த சாலையில் ஆதரவாளர்களுடன் நடத்த போகிறேன்” என தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: மதுரை மக்களே அலர்ட்… முக்கிய ரூட்டில் போக்குவரத்து மாற்றம்.. வெளியான அறிவிப்பு!
மேலும், “ வருகின்ற 2025 செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி மதிமுக சார்பில் திருச்சியில் நடைபெறும் அண்ணா பிறந்தநாள் மாநாட்டிற்கு இதுவரை மல்லை சத்யா அல்லது அவரது ஆதரவாளர்களுக்கு தற்போது வரை அழைப்பு வரவில்லை என்றும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டால் அடுத்த கட்டமாக ஒரு பெரும் அரசியல் நகர்வு இருக்கும்” எனவும் குறிப்பிட்டு பேசினார்.