Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தூய்மை பணியாளர்களின் நியாயமான கோரிக்கை நிறைவேற்ற வேண்டும் – சி.பி.ஐ.எம் மாநிலச் செயலாளர் சண்முகம்..

Sanitization Workers Protest: சென்னையை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து 10 வது நாளாக ரிப்பன் மாளிகை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பணி நிரந்தரம் கோரி நடத்தப்படும் போராட்டத்திற்கு சி.பி.ஐ.எம் மாநிலச் செயலாளர் சண்முகம் நேரில் சென்று அவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

தூய்மை பணியாளர்களின் நியாயமான கோரிக்கை நிறைவேற்ற வேண்டும் – சி.பி.ஐ.எம் மாநிலச் செயலாளர் சண்முகம்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 10 Aug 2025 15:55 PM

சென்னை, ஆகஸ்ட் 10, 2025: சென்னை ரிப்பன் மாளிகைக்கு முன்பாக தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து பத்தாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் வைக்கும் ஒரே கோரிக்கை பணி நிரந்தரம் மற்றும் தனியாருக்கு விடக் கூடாது என்பதுதான். இந்த கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 2025 ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் ரிப்பன் மாளிகை வளாகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முக்கியமாக இதில் பெண்கள் பலரும் ஈடுபட்ட ரிப்பன் மாளிகை வாசலில் பந்தள்கள் அமைத்து அங்கேயே இரவு பகலாக தங்கி போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள். அதாவது தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவிக நகர், அம்பத்தூர், அண்ணா நகர் ஆகிய மண்டலங்களில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களை அழைத்து அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் அமைச்சர் கே.என் நேரு ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்துனர். இருப்பினும் இந்த பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படாத காரணத்தால் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

7 கட்ட பேச்சுவார்த்தை:

இது தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு குறிப்பிடுகையில் அவர்கள் தரப்பு கோரிக்கை அவர்கள் முன் வைத்துள்ளார்கள் அரசு என்ன செய்ய வேண்டுமோ அதை நிச்சயமாக செய்யும் என தெரிவித்துள்ளார். தற்போது வரை ஏழு கட்ட பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளது. பணி நிரந்தரம் கோரி அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Also Read: சோகத்தில் முடிந்த பிறந்தநாள் கொண்டாட்டம்.. பாரில் இளைஞர் கொலை.. புதுச்சேரியில் அதிர்ச்சி!

தூய்மை பணியாளர்கள் போராட்டத்திற்கு பலரும் ஆதரவு குரலை தெரிவித்து வருகின்றனர். பாஜக தரப்பில் நயினார் நாகேந்திரன் ஏற்கனவே அவர்களது கோரிக்கை நிறைவேற்றும் படி அரசுக்கு வலியுறுத்தி இருந்தார். அதனை தொடர்ந்து பாடகி சின்மயி, திருமாவளவன் உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Also Read: தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்கள் மழையா? வெயிலா..? லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!

நியாயமான கோரிக்கை நிறைவேற்ற வேண்டும் – சிபிஐஎம் சண்முகம்:

அதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் ஆகஸ்ட் 10 2025 தேதி அன்று நேரில் சந்தித்து அவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். அதேபோல் தூய்மை பணியாளர்களின் இந்த நியாயமான கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். பத்து நாட்களாக தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அப்பகுதிகளில் குப்பைகள் அல்லப்படாமல் இருக்கிறது. மேலும் இதன் காரணமாக கடுமையான துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்