Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கிருஷ்ணகிரியில் மக்களை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி.. 3 ஆம் கட்ட பிரச்சார பயணத்திட்டம் என்ன?

Edappadi Palanisamy Campaign: அதிமுக பொதுச் செயலாளர் மற்றும் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி தனது 3 ஆம் கட்ட சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார், அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 11, 2025) கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மக்களை சந்தித்து சாலைவலம் மேற்கொண்டு உரையாற்றுகிறார்.

கிருஷ்ணகிரியில் மக்களை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி.. 3 ஆம் கட்ட பிரச்சார பயணத்திட்டம் என்ன?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 11 Aug 2025 07:06 AM

எடப்பாடி பழனிசாமி, ஆகஸ்ட் 11, 2025: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஆகஸ்ட் 11, 2025) கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கக்கூடிய நிலையில் தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் ஆன எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் பிரச்சார சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் முதல் கட்ட பிரச்சார சுற்றுப்பயணம் என்பது 2025 ஜூலை 7ஆம் தேதி தொடங்கி 2025 ஜூலை 21ஆம் தேதி முடிவடைந்தது. அதனை தொடர்ந்து மூன்று நாட்கள் ஓய்வு எடுத்தப்பின் ஜூலை 24 அன்று இரண்டாம் கட்ட பிரச்சாரமானது தொடங்கினார்.

இந்த பிரச்சாரம் 2025 ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை மேற்கொண்டார். மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் இந்த பிரச்சார சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். இதில் தொகுதி வாரியாக சென்று சாலை வலம் மேற்கொண்டு மக்களை சந்தித்து பேசி வருகிறார். குறிப்பாக தமிழகத்தில் ஆளும் திமுக அரசை கண்டித்தும் அதன் கூட்டணி கட்சிகளை கண்டித்தும் பிரச்சாரங்களை முன்வைத்து வருகிறார்.

2026 சட்டமன்ற தேர்தல்:

2026 சட்டமன்றத் தேர்தலை பொரறுத்தவரையில் அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாஜக மற்றும் அதிமுக ஒன்றாக சந்தித்தது. அதனைத் தொடர்ந்து பல்வேறு காரணங்களுக்காக பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.

Also Read: வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு.. பா.ம.க மகளிர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 14 தீர்மானங்கள்..

அதனைத் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலை இரண்டு கட்சிகளும் தனித்தனியாக சந்தித்தது. ஆனால் இரண்டு கட்சிகளுமே ஒரு இடத்தை கூட கைப்பற்ற முடியவில்லை. இந்த நிலையில் 2025 ஏப்ரல் மாதம் உள்துறை அமைச்சர் தமிழகத்திற்கு வருகை தந்த பொழுது மீண்டும் அதிமுக பாஜக கூட்டணியானது முடிவானது.

எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம்:

அதிமுக மற்றும் பாஜக தரப்பில் தேர்தலை சந்திப்பதற்காக ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தின் எதிர் கட்சி தலைவர் ஆன எடப்பாடி பழனிசாமி இரண்டு கட்ட பிரச்சாரங்களை முடிந்த நிலையில் மூன்றாம் கற்ற சுற்றுப்பயணமாக இன்று அதாவது ஆகஸ்ட் 11 2025 தேதியான இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு செல்கிறார். இதற்காக இன்று மதியம் 2 மணி அளவில் சேலத்தில் இருக்கக்கூடிய அவரது வீட்டிலிருந்து கிருஷ்ணகிரிக்கு சாலை வழியாக பயணம் மேற்கொள்கிறார்.

கிருஷ்ணகிரியைத் தொடர்ந்து இரவு 7.30 மணி அளவில் ஓசூரில் பல்வேறு பகுதிகளில் அவர் பிரச்சாரங்களை மேற்கொள்கிறார். அதேபோல் நாளை அதாவது ஆகஸ்ட் 12 2025 தேதியான நாளை ஓசூரில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட கட்சி அலுவலகத்தை எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார். அங்கு ஓசூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பின்னர் பர்கூர் சட்டசபை தொகுதிக்கு செல்கிறார்.