Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு.. பா.ம.க மகளிர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 14 தீர்மானங்கள்..

PMK Women's Conference: பூம்புகாரில் நடந்த பாமக மகளிர் மாநாட்டில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முக்கியமாக, வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு காலம் தாழ்த்தாமல் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் சாதிவாரி கணக்கெடுப்பு உடனடியாக நடத்த வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு.. பா.ம.க மகளிர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 14 தீர்மானங்கள்..
பாமக மகளிர் மாநாடு
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 11 Aug 2025 06:45 AM

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற மகளிர் மாநாட்டில் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடும் உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணியிடையே பல மாதங்களாக கருத்து மோதல்கள் நிலவி வருகிறது. இந்த நிலையில் ஆகஸ்ட் 9 2025 தேதி அன்று அன்புமணி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் அன்புமணியின் தலைவர் பதவி காலம் மேலும் ஒரு ஆண்டு காலம் நீட்டிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல் அன்புமணி தரப்பில் 2026 சட்டமன்ற தேர்தலில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அன்புமணி இல்லாமல் நடந்த முதல் மாநாடு:

இது போன்ற சூழலில் கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பூம்புகாரில் வன்னியர் மகளிர் மாநாடு நடத்தப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளாக எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் அதில் அன்புமணி நிச்சயமாக கலந்து கொள்வார். ஆனால் முதல் முறையாக மகன் அன்புமணி இல்லாமல் இந்த மகளிர் மாநாடு நடத்தப்பட்டது இதில் கூட்டணி குறித்து தக்க சமயத்தில் முடிவெடுக்கப்படும் என கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்திருந்தார். முக்கியமாக கூட்டணி குறித்து யார் சொல்வதையும் கேட்காதீர்கள் நான் சொல்வது தான் நடக்கும்.2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி கூட்டணி அமைப்பேன் என பேசியிருந்தார்.

மேலும் படிக்க: தூய்மைப் பணியாளர்கள் 10 நாள் போராட்டம்.. தனியார்மயமாக்கல் அவசியம் ஏன்..? சீமான் கேள்வி!

நிறைவேற்றப்பட்ட 14 தீர்மானங்கள்:

இந்த கூட்டத்தில் 14 தீர்மானங்கள் முக்கியமாக நிறைவேற்றப்பட்டது. அதில்

  • பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் பெண்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்க வேண்டும்
  • பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்
  • மதுவால் பெண்களும் குழந்தைகளும் கடுமையாக பாதிக்கப்படுவதோடு பெண்கள் தற்கொலை உயிரிழப்பு அதிகரித்து வருவதால் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்த வேண்டும்
  • தமிழ்நாடு முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் தடையின்றி விற்பதால் மாணவர்கள் இளைஞர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதால் கஞ்சா விற்பனை இரும்பு கரம் கொண்டு ஒடுக்கி தடை செய்ய வேண்டும்
  • நீட் தேர்வின் போது மாணவிகள் மன உளைச்சல் அடையும் வகையில் சோதனை செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும் பள்ளிகளில் கல்லூரிகளில் பெண்கள் பணிபுரியும் இடங்களில் பாலியல் கொடுமைகள் அதிகரித்து வருவதால் அதை தடுதிட பெண் காவலர்கள் ஆங்காங்கே நியமிக்கப்பட வேண்டும்
  • 100 நாள் வேலை திட்டத்தில் குடும்ப பொருளாதாரத்தை உயர்த்த வேலை நாட்களின் எண்ணிக்கையும் தினக்கூலியையும் அதிகப்படுத்திட வேண்டும்
  • மாணவிகள் தொழிற்கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்வி பெற கூடுதலாக மகளிர் பல்கலைக்கழகம் தனியாக உருவாக்கப்பட வேண்டும்
  • கர்ப்பப்பை புற்றுநோய் மற்றும் மார்பகப் புற்றுநோய் உள்ளிட்ட புற்றுநோய்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டும்
  • வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு காலம் தாழ்த்தாமல் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்
  • தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டின் அளவை சரியாக நிர்ணயத்திடம் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும்
  • தமிழ்நாட்டின் காவிரி பாசன டெல்டா மாவட்டங்களுக்கு கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் துவங்கப்பட வேண்டும்
  • பூம்புகார் பகுதி மீனவர்கள் மற்றும் மீன்பிடி துறைமுகம் மீனவர்கள் உள்ளிட்ட தமிழ்நாடு மீனவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்