PMK Ramadoss: 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி கூட்டணி அமைப்பேன்.. பாமக நிறுவனர் ராமதாஸ் உறுதி!
PMK Women's Conference in Poompuhar: பூம்புகாரில் நடைபெற்ற பாமக மகளிர் பெருவிழா மாநாட்டில், ராமதாஸ் கூட்டணி, வன்னியர் இடஒதுக்கீடு குறித்துப் பேசினார். அன்புமணி ராமதாஸ் உடன் கருத்து வேறுபாடு குறித்தும், சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் குறித்தும் தனது நிலைப்பாட்டை விளக்கினார்.

மயிலாதுறை, ஆகஸ்ட் 10: மயிலாதுறை அடுத்த பூம்புகாரில் இன்று அதாவது 2025 ஆகஸ்ட் 10ம் தேதி வன்னியர் சங்கம் (Vanniyar Sangam) சார்பில் பாமக மகளிர் பெருவிழா மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டிற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் (PMK founder S. Ramadoss) தலைமை தாங்க, ராமதாஸின் மனைவி சரஸ்வதி, மூத்த மகள் காந்திமதி, பாமக கௌரவ தலைவர் ஜிகே மணி (GK Mani) உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர். மாநாடு தொடங்கி சிறிது நேரத்தில் மழை குறுக்கிட்டதால், பாமக தொண்டர்கள் பெரும் அவதி பெற்றனர். இதனை தொடர்ந்து, மழை நின்றதால் பாமக மகளிர் மாநாடு தொடர்ந்து நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், கூட்டணி குறித்தும், வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு குறித்தும் பேசியுள்ளார்.
ALSO READ: தூய்மை பணியாளர்களின் நியாயமான கோரிக்கை நிறைவேற்ற வேண்டும் – சி.பி.ஐ.எம் மாநிலச் செயலாளர் சண்முகம்..




பாமக நிறுவனர் ராமதாஸ் பேச்சு:
கூட்டணி மற்றும் மகன் அன்புமணி ராமதாஸ் இடையேயான கருத்து வேறுபாடு குறித்து பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், “பிரதமர் மோடி அண்மையில் ராஜராஜசோழன், ராஜேந்திர சோழன் குறித்து மேடையில் பேசினார். இதிலிருந்து நீங்கள் என்ன பேசினார் என்பதை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அதாவது, மேடையில் தந்தையை விஞ்சிய தனையன் என்பது இருக்கக்கூடாது. இதற்கு காரணம், பெரிய கோயிலும் கங்கை கொண்ட சோழப்புரத்தை உதாரணமாக அருமையாக சொன்னார்.
பாமக மகளிர் மாநாட்டிற்கு வந்த பெண்கள் கூட்டம்:
5000-ற்கும் மேற்பட்ட மகளிர்கள்…..!
பூம்புகார் மகளிர் பெருவிழா மாநாட்டிற்கு கடலூர் வடக்கு மாவட்டம் நெய்வேலி மற்றும் பண்ருட்டி சட்டமன்ற தொகுதிகளில் இருந்து தற்போதைய நிலவரப்படி 250-க்கும் மேற்பட்ட வாகனங்களில் 5000ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிர்கள் பெண்ணுரிமை காவலர் மருத்துவர்… pic.twitter.com/TSJKn3HeVM
— Neyveli Jagan (@PMKJagan) August 10, 2025
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் என்னுடைய அருமை நண்பர். கஞைஞர் 20 சதவீத இட ஒதுக்கீட்டை கொடுத்ததால்தான் மக்கள் பலர் பயனடைந்தனர். அதேநேரத்தில், தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த தயங்குகிரார் என்பது தெரியவில்லை. அவர் இதை நடத்தி காட்டி சமூக வரலாற்றில் இடம் பிடிக்க வேண்டும். அதன்படி, தந்தையை மிஞ்சி ஏன் நீங்கள் ஏன் இதை செய்யக்கூடாது..? சாதி வாரி கணக்கெடுப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து, சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்நாடு முதலமைச்சரே 3 மாதம் என்னிடம் ஆட்சியை கொடுங்க என்று கேட்க மாட்டேன், அது சாத்தியமற்றது. ஆனால் 10 அதிகாரிகளை என்னிடம் அனுப்புங்கள். இந்த சமூக தீமையை ஒழித்து விடலாம்” என்றார்.
ALSO READ: தூய்மைப் பணியாளர்கள் 10 நாள் போராட்டம்.. தனியார்மயமாக்கல் அவசியம் ஏன்..? சீமான் கேள்வி!
தொடர்ந்து பேசிய அவர், ”கூட்டணி குறித்து யார் சொல்வதையும் கேட்காதீர்கள், நான் சொல்வதுதான் நடக்கும். 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி கூட்டணி அமைப்பேன். அமைப்பேன், அமைப்பேன் என 3 முறை சொல்கிறேன்” என்றார்.