பூம்புகாரில் அன்புமணி இல்லாமல் நடக்கும் மகளிர் மாநாடு.. ராமதாஸ் எடுக்கப்போகும் முடிவு..
PMK Women Conference: பூம்புகாரில் பாமக கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமையில் ஆகஸ்ட் 10, 2025 தேதியான இன்று மகளிர் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு அன்புமணி மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என வன்னியர் சங்கம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை, ஆகஸ்ட் 10, 2025: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள பூம்புகாரில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மகளிர் மாநாடு இன்று அதாவது ஆகஸ்ட் 10 2025 தேதியான இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெற உள்ளது. இதற்கான இறுதி கட்ட ஏற்பாடுகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சியை பொறுத்தவரையில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணிக்கும் இடையே அதிகாரப்போட்டி நிலவு வருகிறது. கடந்த சில மாதங்களாகவே இருவரும் தனித்தனியாக கட்சியின் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் முக்கியமாக நேற்று அதாவது ஆகஸ்ட் 9 2025 தேதி ஆன நேற்று கட்சி நிறுவனர் ராமதாஸ் இல்லாமல் அன்புமணி மட்டும் அவரது ஆதரவாளர்களை வைத்து பொதுக்குழு கூட்டம் நடத்தினார்.
இது அரசியலில் பெரும் பேசும் பொருளாக மாறியது. அதனைத் தொடர்ந்து வருகின்ற ஆகஸ்ட் 17 2025 தேதி அன்று கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமையில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு பேருமே தனி தனியாக அரசியல் நகர்வுகளை முன்வைத்து வரும் நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்களிடையே பெரும் அதிருப்தி நிலவி வருகிறது.
மேலும் படிக்க: மதுரையில் விரட்டி விரட்டி கடித்த தெரு நாய்.. அலறிய சிறுவன்.. அதிர்ச்சி வீடியோ!
2026 சட்டமன்ற தேர்தலில் மெகா கூட்டணி:
அன்புமணி தரப்பில் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்புமணி தொடர்ந்து ஆளும் திமுக அரசை விமர்சனம் செய்து அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வருகிறார். இதனால் அவர் மீண்டும் அதிமுக பாஜக கூட்டணியில் இணைய கூடும் என யூகங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் கட்சி நிறுவனர் ராமதாசை பொருத்தவரையில் கூட்டணி என்றால் அது அதிமுக அல்லது திமுகவுடன் மட்டுமே இருக்கும் எனக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: பி.எல். சந்தோஷ் தலைமையில் பாஜக நிர்வாவிகள் கூட்டம்.. கூட்டணி குறித்து முக்கிய ஆலோசனை..
அன்புமணி இல்லாமல் நடக்கும் மகளிர் மாநாடு:
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சியின் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அதில் அன்புமணி இல்லாமல் நடக்காது. ஆனால் தற்போது முதல்முறையாக அன்புமணியின் தயவில்லாமல் கட்சி நிறுவனர் ராமதாஸ் பூம்புகாரில், மகளிர் மாநாட்டை நடத்த உள்ளார். இந்த மாநாட்டில் மூன்று லட்சம் மகளிர் குறைந்தபட்சம் பங்கேற்க வேண்டும் என ராமதாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. முக்கியமாக இந்த மாநாட்டிற்கு அன்புமணிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என வன்னியர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய தீர்மானங்கள்:
அன்புமணி இல்லாமல் தன்னிச்சையாக முதல் முறையாக நிறுவனர் ராமதாஸ் இந்த மாநாட்டை நடத்துகிறார். இந்த விழா முக்கியமாக பெண்களை போற்றுவது, குடும்பத்தின் வாழ்வை மேம்படுத்துவது போதை பொருள் பயன்பாட்டை ஒழிப்பது உள்ளிட்ட சமூக பொறுப்புகளை மையமாக வைத்து நடைபெறும் என கூறப்படுகிறது. இந்த மாநாடு தொடர்பாக ஜி.கே மணி கூறுகையில் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு, அனைத்து சமூகங்களுக்கும் உரிய இட ஒதுக்கீடு வழங்குதல், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துதல் உள்ளிட்டவை குறித்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என தெரிவித்துள்ளார்