Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மதுரையில் விரட்டி விரட்டி கடித்த தெரு நாய்.. அலறிய சிறுவன்.. அதிர்ச்சி வீடியோ!

Madurai Dog Attacks Boy : மதுரை மாவட்டத்தில் வீட்டிற்கு வெளியே நின்றுக் கொண்டிருந்த 8 வயது சிறுவனையும், அவரது தந்தையும் தெரு நாய் கடித்து குதறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், தந்தை, மகன் இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி உள்ளது.

மதுரையில் விரட்டி விரட்டி கடித்த தெரு நாய்.. அலறிய சிறுவன்.. அதிர்ச்சி வீடியோ!
சிறுவனை தாக்கிய நாய்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 10 Aug 2025 12:14 PM

மதுரை, ஆகஸ்ட் 10 :  மதுரை மாவட்டத்தில் 8 வயது சிறுவனையும், அவரது தந்தையும் தெரு நாய் விரட்டி (Dog Attack) விரட்டி கடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது சம்பந்தமான காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதில், தந்தை, மகன் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் மாட்டுத்தாவணி பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி (40). இவருக்கு எட்டு வயதில் செந்தில் என்ற மகன் உள்ளார். அதே பகுதியில் தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இந்த நிலையில் , சிறுவன் வழக்கம் போல் காலையில் எழுந்து பள்ளிக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது சிறுவன் வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அந்த நேரத்தில் திறந்து கிடந்த காம்போன் கதவு வழியாக வீட்டிற்குள் தெரு நாய்கள் நுழைந்தது.

அப்போது, சிறுவனை தெருநாய்கள் விரட்டி விரட்டி கடித்தது. இந்த சத்தம் கேட்டு வெளியே வந்த சிறுவனின் தந்தையையும் தெருநாய்கள் கடித்துக் குதறியது. இருவரும் நாய் கடித்ததில்அலறி துடித்துள்ளனர்.  உடனே  அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதோடு இல்லாமல் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் ஒரு மணி நேரமாக போராடி நாயை பிடித்தனர்.  நாய்க்கடியால் சிறுவன் செந்தில் மற்றும் அவரது தந்தை முத்துசாமிக்கும் பலத்த காயும் ஏற்பட்டுள்ளது.

Also Read : தீண்டாமை சுவர்.. அதிகாரிகள் எடுத்த அதிரடி நடவடிக்கை.. கரூரில் பரபரப்பு!

விரட்டி விரட்டி கடித்த தெருநாய்


சிறுவனின் கை, கால், முகத்தில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. அதேபோல, தந்தை முத்துசாமிக்கும் கால், தொண்டை, கைகளில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்துள்ளது. உடனே அவர்களை அக்கம் பக்கத்தினர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து தந்தை முத்துசாமிக்கும், சிறுவன் செந்திலுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.

இதனால், தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் நான் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்‌. இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் சிறுவனையும் அவள் தந்தையும் நாய் விரட்டி விரட்டி கடிக்க சென்ற காட்சிகள் பார்ப்போரை பதறி வைத்துள்ளது.

Also Read : நெல்லையில் இருக்கும் பட்டறையில் இருந்து 9 அரிவாள்கள் பறிமுதல்.. 3 பேர் மீது நடவடிக்கை..

தெருநாய்களால் தொடரும் தொல்லை

தமிழகம் முழுவதும் தெருநாய்கள் கடிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. அண்மைக்காலங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தெரு நாய்கள் கடித்து வருகிறது. இதனால், பலரும் பாதிக்கப்பட்டு, சிலர் ரேபிஸ் நோயால் உயிரிழந்து வருகின்றனர். தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அதன்படியே அரசும் தெருநாய்களை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சமீபத்தில் கூட தெருநாய்களை கருணை கொலை செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தெரு நாய்களுக்கு தெருக்களிக்கு சென்று தடுப்பூசி போடும் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக மதுரை மாவட்டத்தில் தொடங்கப்பட்ட நிலையில், தற்போது சென்னையிலும் தொடங்கப்பட்டிருக்கிறது.