Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தீண்டாமை சுவர்.. அதிகாரிகள் எடுத்த அதிரடி நடவடிக்கை.. கரூரில் பரபரப்பு!

Karur Untouchability Wall : கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சர்ச்சைக்குள்ளான தீண்டாமை சுவர் இடிக்கப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் தீண்டாமை சுவர் இடிக்கப்பட்டது. பட்டியலின மக்கள் வரக் கூடாது என்பதற்காக கோயிலைச் சுற்றி தீண்டாமை சுவர் அமைக்கப்பட்டிருப்பதாக புகார் எழுந்த நிலையில், நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தீண்டாமை சுவர்.. அதிகாரிகள் எடுத்த அதிரடி நடவடிக்கை.. கரூரில் பரபரப்பு!
கரூர் தீண்டாமை சுவர்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 10 Aug 2025 11:13 AM

கரூர், ஆகஸ்ட் 10 :  கரூர் மாவட்டத்தில் உள்ள முத்துலடம்பட்டியில் கிராமத்தில் இருந்த தீண்டாமை சுவர் (Karur Untouchability Wall) இடிக்கப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் தீண்டாமை சுவர் இடிக்கப்பட்டது. பட்டியலின மக்கள் வரக் கூடாது என்பதற்காக கோயிலைச் சுற்றி தீண்டாமை சுவர் அமைக்கப்பட்டிருந்ததற்கு எதிர்ப்பு கிளம்பியது. இதனை அடுத்து, போராட்டங்கள் நடந்த நிலையில், தற்போது அந்த சுவர் இடிக்கப்பட்டது. நவீன காலத்திலும் தீண்டாமை இருந்து வருகிறது.  குறிப்பாக, பட்டியலின மற்றும் பழங்குடி சமூகத்தினரை கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுப்பது,  தண்ணீர் தர மறுப்பது போன்ற  குற்றங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை தடுக்க மாநில அரசு பல  நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், சட்டங்களையும் கடுமையாக இயற்றி வருகிறது. அப்படி இருந்தும், தீண்டாமை தொடர்ந்து நடந்து வருகிறது.  இந்த நிலையில், கரூர் மாவட்டத்தில்  கோயிலை சுற்றி 200 அடிக்கு தீண்டாமை சுவர் இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பட்டியலின மக்கள் அரசு நிலத்தில் நுழைவதை தடுக்கவும், கோயிலுக்குள் நுழைவுதை  தடுக்கவும் தடுப்புச் சுவர் கட்டப்பட்டு இருந்தது. கரூர் மாநகராட்சியின் கீழ் உள்ள 48வது வார்டில் உள்ள முத்தாலம்பட்டி கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட இடைநிலை சாதியைச் சேர்ந்த குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 45 பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கு இடைநிலை சாதி மக்கள், பட்டியலின மக்கள் கோயிலுக்குள் நுழையக் கூடாது எனவும், அரசு நிலத்திற்குள் நுழையக் கூடாது என தடுப்பு சுவர் அமைத்ததாக புகார் எழுந்தது. சுமார் 200 அடி நீளமும் 10 அடி உயரமும் கொண்டு இந்த சுவர் கட்டப்பட்டு இருந்தது.

Also Read : நெல்லையில் இருக்கும் பட்டறையில் இருந்து 9 அரிவாள்கள் பறிமுதல்.. 3 பேர் மீது நடவடிக்கை..

கரூரில் தீண்டாமை சுவர்

இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. சுவர் எழுப்பப்பட்டதிலிருந்து, இடைநிலை சாதியினர் மற்றும் பட்டியிலின மக்கள் இடையே  மோதல் ஏற்பட்டது.  இடைநிலை சாதி சமூகத்தினர் சார்பில் கட்டப்பட்ட சுவரை இடிக்க வேண்டும் பட்டியலின மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்

இதற்கிடையில் வருவாய்த்துறை அதிகாரிகள் இடைநிலை சாதி தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பினர். அதில் 15 நாட்களுக்குள் கட்டப்பட்டிருக்கும் சுவரை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டிருந்தனர். ஆனால், இதற்கு இடைநிலை சாதியினர் மறுப்பு தெரிவித்து, வெளியூர் ஆட்கள் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதை தடுக்கவே தடுப்பு சுவர் எழுப்பப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்தனர்.

Also Read : இனி தப்ப முடியாது.. சென்னையில் 169 இடங்களில் ஏ.என்.பி.ஆர் கேமிரா.. 10 நொடியில் நோட்டீஸ்..

அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை

ஆனால் இதற்கு பட்டியலின மக்கள் மறுப்பு தெரிவித்து,  இது தீண்டாமைச் சுவர் என கூறினர். அதன் பிறகும் வருவாய்த்துறை 2025 ஆகஸ்ட் 8ஆம் தேதி மீண்டும் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதில் 2025 ஆகஸ்ட் 9ஆம் தேதி காலை 11 மணிக்குள் இந்த சுவரை இடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.

அதற்கு இடைநிலை சாதியினர் எதிர்ப்பு தெரிவித்து, வருவாய்த்துறை அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து, அங்கு 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிந்தனர். மாவட்ட எஸ்பி அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இறுதியில் தடுப்புச்சுவரை அகற்றவும் அவர்கள் ஒப்பு கொண்டுள்ளனர்.  இதனை அடுத்து, பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் தீண்டாமை சுவர் இடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.