வீட்டு சாவி இல்ல.. இளைஞர் எடுத்த விபரீத முயற்சி.. பறிபோன உயிர்.. செங்கல்பட்டில் அதிர்ச்சி
Virudhunagar Crime : விருதுநகர் மாவட்டத்தில் வீட்டில் சாவி தொலைந்ததால், இளைஞர் ஒருவர் வீட்டின் புகைக்கூண்டு வழியாக நுழைந்துள்ளார். இதனை அடுத்து, அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். மதுபோதையில் இருந்த அந்த நபர், இதுபோன்ற விபரீத முயற்சியை எடுத்து உயிரிழந்துள்ளார்.

விருதுநகர், ஆகஸ்ட் 09 : விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீட்டின் சாவி தொலைந்ததால், இளைஞர் ஒருவர் எடுத்த முயற்சி விபரீதத்தில் முடிந்துள்ளது. அதாவது, வீட்டின் சாவி தொலைந்து போனதால், இளைஞர் வீட்டின் புகைக்கூண்டு வழியாக புகைக்குண்டு வழியாக வீட்டிற்குள் செல்ல முயன்றவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவர் மது போதைக்கு அடிமையானவர் எனக் கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி மனைவியுடன் சண்டையிட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த மனைவி, கணவனிடம் இருந்து விலகி தந்தை வீட்டிற்கு சென்றிருக்கிறார். இதனால், பிரபாகரன் சோகத்தில் இருந்துள்ளார்.
தினமும் மாமனார் வீட்டிற்கு சென்று மனைவியை சமாதானப்படுத்தியும் வந்திருக்கிறார். அதே நேரத்தில் தினமும் மது குடித்துவிட்டும் வீட்டிற்கு வந்து சென்றும் இருந்திருக்கிறார். இந்த நிலையில், சம்பவத்தன்று மதுபோதையில் தனது வீட்டுக்கு பிரபாகரன் வந்துள்ளார். அப்போது வீட்டின் சாவி தொலைந்துள்ளதாக தெரிகிறது. தனது சட்டை பையில் வைத்திருந்த சாவியை மதுபோதையில் இருந்த பிரபாகரன் தொலைத்துள்ளார் என கூறப்படுகிறது. இதனால் வீட்டிற்கு வந்த பிரபாகரனுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் மதுபோதையில் சுற்றி திரிந்துள்ளார்.
இளைஞர் எடுத்த விபரீத முயற்சி
மது போதையில் இருந்த பிரபாகரன், தன் வீட்டின் புகைப்போக்கி வழியாக வீட்டிற்குள் சென்றுவிடலாம் என நினைத்துள்ளார். அதன்படியே வீட்டின் மாடியில் இருந்த புகை குண்டின் வழியாக பிரபாகரன் செல்ல முயன்று இருக்கிறார். இதனை அடுத்து, வீட்டின் புகைக் கூண்டு வழியாக மெல் மெல்ல நுழைந்திருக்கிறார்.
உள்பக்கம் நுழைந்த உடனேயே அவரால் நகர முடியாத சுழல் ஏற்பட்டுள்ளது. இதனால், வசமாக புகைக்கூண்டில் அவர் சிக்கினார். இதனை அடுத்து, வெளியே வர அவர் முயற்சித்தும், அவரால் முடியவில்லை. இதனால் அவருக்கு புகைக்கூண்டில் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. பல மணி நேரமாகயும் மூச்சு விட முடியாமல் அவதிப்பட்டு வந்த பிரபாகரன் மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதற்கிடையில் கணவன் வீட்டிற்கு வராததால் சந்தேகம் அடைந்த மனைவி, அவரை வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டின் அருகே தண்ணீர் வாலிக்குள் கிடந்த சாவி எடுத்து வீட்டை திறந்து பார்த்துள்ளார். ஆனால் வெகு நேரம் ஆகியும் கணவர் வீட்டிற்கு வராததால் சந்தேகம் இருந்து, அக்கம் பக்கத்தில் இருந்து விசாரித்துள்ளார். எதார்த்தமாக வீட்டின் மாடிக்கு சென்ற மனைவி, அங்கு புகைக்கூண்டில் கணவன் தொங்கிக்கொண்டு இருப்பது பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
உடனே கூச்சலிட்டதை எடுத்து சம்பவ இடத்திற்கு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வந்துள்ளனர். அவரை வெளியே எடுக்கும் முயற்சித்தனர். ஆனால் முடியாததால் மீட்பு குழுவினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து மீட்டு குழுவினர் பிரபாகரனின் உடலை மீட்டு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் பிரேத பரிசோதனைக்காக பிரபாகரனுடன் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.