Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

விருதுநகரில் பட்டாசு வெடி விபத்து.. 3 பேர் உடல் கருகி பலி.. பலர் காயம்

Virudhunagar Fire Accident : விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் வெடி விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீட்டில் வைத்து பட்டாசு தயாரிக்கும்போது ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகரில் பட்டாசு வெடி விபத்து.. 3 பேர் உடல் கருகி பலி.. பலர் காயம்
பட்டாசு ஆலை விபத்து
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 09 Aug 2025 14:29 PM

விருதுநகர், ஆகஸ்ட் 09 : விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் வெடி விபத்தில் (Virudhunagar Fire Cracker Accident) 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வீட்டில் வைத்து பட்டாசு தயாரிக்கும்போது ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டத்தில் அதிகளவில் பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்ட மக்களின் பிரதான தொழிலாக பட்டாசு தயாரிப்புகள் இருந்து வருகிறது. மேலும், தீப்பெட்டி தயாரிப்புகளும் நடந்து வருகிறது. ஆனால், பட்டாசு ஆலைகளில் அவ்வப்போது வெடி விபத்து ஏற்பட்டு வருகிறது. போதிய பாதுகாப்பு  வசதிகள் இல்லாமல் இருப்பதாலும், சரியான விதிமுறைகளை கடைபிடிக்காமல் இருப்பதனாலும் விபத்துகள் நடந்து வருகிறது. அந்த வகையில், தற்போது ஒரு விபத்து நடந்துள்ளது. அதாவது, சட்டவிரோதமாக வீட்டில் வைத்து பட்டாசு தயாரிக்கும்போது, விபத்து ஏற்பட்டுள்ளது.

அதாவது, விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுபாண்டியன். இவர் வீட்டில் அனுமதியின்று சட்டவிரோமாக பட்டாசு தயாரித்து வந்துள்ளததார். இங்கு 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். இந்த நிலையில், 2025 ஆகஸ்ட் 9ஆம் தேதியான இன்று வழக்கம்போல், தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, மின்கசிவு ஏற்பட்டுள்ளது. இதில் தீப்பற்றியதில் பட்டாசுகள் வெடித்து சிதறின. இதில் அப்போது பணியில் இருந்து பலரும் பலத்த காயம் அடைந்தன.

Also Read : பொறி உருண்டை கொடுத்து 8 சவரன் திருட்டு.. ஓடும் பஸ்ஸில் துணிகரம்!

பட்டாசு வெடி விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

இந்த விபத்து குறித்து அறிந்ததும் அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து இடிபாடுகளில் சிக்கியுள்வர்கள் மீட்டனர். உடனே அவர்கள் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதனையில் செய்ததில் 3 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். மேலும், ஒருவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்தவர்கள் நாச்சியாபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் (18), கர்சல்குளத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி (70), சண்முகத்தாய் (60), ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

Also Read : ”வறுமை இல்லாத, சமூக வளர்ச்சியில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு, கம்பர் கண்ட கனவு” – முதல்வர் ஸ்டாலின்..

இதில், அப்பகுதியைச் சேர்ந்த 55 வயதான மாரியம்மாள் என்பவர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உயிரிழந்த மூன்று பேரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதோடு, சட்டவிரோதமாக வீட்டில் பட்டாசு தயாரித்து வந்த வீட்டின் உரிமையாளர் பொன்னுப்பாண்டியனை போலீசார் தேடி வருகின்றனர்.