பொறி உருண்டை கொடுத்து 8 சவரன் திருட்டு.. ஓடும் பஸ்ஸில் துணிகரம்!
கிருஷ்ணகிரி அருகே பேருந்தில் பயணித்த ஆசிரியை சாரதாவுக்கு, ஒரு பெண் கடலை மிட்டாய் கொடுத்து நகை திருடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் மயக்கம் தெளிந்ததும் நகை காணாமல் போனதை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஊத்தங்கரை, ஆகஸ்ட் 9: கிருஷ்ணகிரி அருகே ஓடும் பேருந்தில் இனிப்பு கொடுத்து ஆசிரியரிடம் இருந்துன் 8 சவரன் நகை திருடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட ஆசிரியர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் நகை திருடிய பெண் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என பார்க்கலாம். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பகுதியில் சாரதா என்ற 57 வயது பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். சாராதாவின் மகள் கோவை மாவட்டத்தில் உள்ள நிலையில் அவரை சந்திக்க அடிக்கடி பேருந்தில் பயணம் செய்வது வழக்கம்.
இப்படியான நிலையில் நேற்று கோவை மாவட்டத்தில் உள்ள தனது மகளை சந்தித்து விட்டு சாரதா மீண்டும் வீடு திரும்பி உள்ளார். இதற்காக கோவையில் இருந்து சேலம் பேருந்து நிலையத்தில் வந்த அவர், பின்னர் திருப்பத்தூர் பேருந்து நிலையம் வரை செல்லும் பேருந்தில் பயணித்துள்ளார். பேருந்தில் ஓரளவு கூட்டம் இருந்த நிலையில் அரூர் அருகே சென்று கொண்டிருந்தது.
Also Read: சிறுமி கடத்தல்.. சினிமாவை மிஞ்சிய ட்விஸ்ட்.. கடைசியில் சிக்கிய இளைஞன்!




அப்போது சாராதாவின் அருகில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் கடலை உருண்டை கொடுத்ததாக தெரிகிறது. ஏற்கனவே சற்று பசி, பேருந்தில் நன்றாக பேசிக்கொண்டிருந்ததால் அப்ப்பெண்ணை நம்பி அதனை சாப்பிட்டுள்ளார். அதனை சாப்பிட்ட சாரதா அடுத்த சில நிமிடங்களில் மயங்கியதாக கூறப்படுகிறது. பேருந்தில் இருந்தவர்களும் அவர் தூங்குவதாக நினைத்திருக்கின்றனர். இப்படியான நிலையில் ஊத்தங்கரையில் இறங்க வேண்டிய சாரதா திருப்பத்தூர் பேருந்து நிலையம் வரை மயங்கி நிலையில் பேருந்தில் பயணம் செய்து வந்துள்ளார்.
திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் அனைவரும் இறங்கிய நிலையில் இவர் மட்டும் தூங்கிய நிலையில் இருந்துள்ளார். இதனால் நடந்துநர் அருகில் சென்று பேருந்து நிலையம் வந்து விட்டது. இறங்குங்கமா என கூறியுள்ளார். ஆனால் சாரதாவிடம் எந்தவித அசைவும் இல்லாததைக் கண்டு நடத்துநர் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அருகில் இருந்த சக சக பயணிகள் உதவியோடு ஆம்புலன்ஸ்கு தகவல் அளிக்கப்பட்டது.
Also Read: 80 வயது முதியவருக்கு பேஸ்புக்கில் ஸ்கெட்ச்.. ரூ.9 கோடி அபேஸ்!
அதற்கு பயணிகள் தண்ணீர் தெளித்து சாரதாவை மயக்கத்தில் இருந்து மீட்டனர். அப்போது தனக்கு என்ன நடந்தது என புரியாமல் விழித்த அவர் தனது கழுத்தில் இருந்த தாலி சரடு சயின் ஆகிய 8 சவரன் நகை மற்றும் பணப்பையை காணாமல் போனதைக் கண்டு திடுக்கிட்டார். இதுதொடர்பாக கண் கலங்கினார். இதன்பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
இந்த நிலையில் இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக சாராதாவின் கணவர் போலீசில் புகாரளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கிருஷ்ணகிரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.