Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தோண்ட தோண்ட எலும்புக்கூடுகள்… தோட்டத்தில் கிடந்த சடலங்கள்.. கேரளாவை அதிர வைத்த சீரியல் கில்லர்!

Kerala Murder : கேரள மாநிலத்தில் ஆலப்புழா பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் நான்கு பெண்களை கொலை செய்து, தனது வீட்டு தோட்டத்தில் புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான விசாரணையில் தோட்டத்தில் எலும்புக்கூடுகள், ரத்தக்கரை பெண்களின் உடைகள், பற்கள் போன்றவை போலீசார் கண்டெடுத்தனர். இதனை மரபணு பரிசோதனைக்கும் போலீசார் அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தோண்ட தோண்ட எலும்புக்கூடுகள்… தோட்டத்தில் கிடந்த சடலங்கள்.. கேரளாவை அதிர வைத்த சீரியல் கில்லர்!
கொலை செய்த நபர்Image Source: X
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 07 Aug 2025 15:22 PM

கேரளா, ஆகஸ்ட் 07 : கேரளாவில் ஆலப்புழாவில் தோட்டத்தில் மனித எலும்புக்கூடுகளை போலீசார் கண்டெடுத்தது அம்மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பெண் கொலை வழக்கில்  (Kerala Murder) கைதான செபஸ்டியான் என்பவரது தோற்றத்தில் போலீசார் ஆய்வு மேற்கொண்ட போது எலும்புக்கூடுகள் மீட்டெடுக்கப்பட்டன. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கேரள மாநிலம் ஆலப்புழா பள்ளிப்புரம் பகுதியைச் சேர்ந்தவர் செபாஸ்டின். இவருக்கு வயது 65. இவர் நான்கு பெண்களை கொலை செய்ததாக கைதாகி உள்ளார். அதாவது, கடந்த சில மாதங்களுக்கு முன்பு  கோட்டயம் பகுதியை சேர்ந்த ஜெய்னம்மா காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் புகார் கொடுத்தனர். இதனை அடுத்து கோட்டயம் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மற்றும் மேற்கொண்டனர்.

அப்போது, ஜெயனம்மாவின் தொலைபேசியை போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, செபாஸ்டியன் இடம் அடிக்கடி போனில் பேசியது தெரியவந்தது. அதே நேரத்தில் செல்போன் டவரின் இருப்பிடத்தை இருப்பிடத்தை கண்டுபிடித்த போலீசார் செபாஸ்டியனை சந்தேகத்தின் பெயரில் கைது செய்தனர். இதனை அடுத்து அவரிடம் போலீஸ் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, ஜெயனம்மாவை கொலை செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் பள்ளிப்புரத்தில் உள்ள தனது தோட்டத்தில் அவர் உடலை புதைத்ததாகவும் அவர் வாக்குமூலம் அளித்தார்.

Also Read : கோவை காவல் நிலையத்தில் ஒருவர் சடலமாக மீட்பு.. நடந்தது என்ன? தீவிர விசாரணை

தோட்டத்தில் கிடந்த சடலங்கள்

போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை தோண்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஜெயனம்மாவின் மண்டை ஓடுகள், கை, கால் எலும்புகள் போன்றவை கண்டெடுக்கப்பட்டன. இதனை போலீசார் டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில், ஜெயனம்மாவின் உடல் என உறுதி செய்யப்பட்டது.

தொடர்ந்து செபாஸ்டியன் மீடியம் சோதனை மேற்கொண்டதில் அடுத்தடுத்து அதிர்ச்சியூட்டும் விஷயங்கள் தெரிய வந்தது. அதாவது போலீச சோதனையின் போது அவரது வீட்டில் பெண்களின் கைப்பை பெண்கள் சார்ந்த பொருட்கள் போன்றவை கண்டெடுக்கப்பட்டன. மேலும் ஆங்காங்கே இரத்தக் கரைகள் இருப்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர்.

இதனை அடுத்து செபாஸ்டியன் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதனால், போலீசார் காணாமல் போன பெண்கள் குறித்து தீவிரமாக விசாரித்தனர். அப்போது, 2012 ஆம் ஆண்டு வார நாட்டைச் சேர்ந்த ஆயிஷா, 2013 ஆம் ஆண்டு ஆலப்புழாவைச் சேர்ந்த பிந்து, அதே பகுதியை சேர்ந்த சிந்து ஆகிய மூன்று பெண்கள் காணாமல் போனது தெரியவந்தது. இவர்களையும் செபாஸ்டியன் கொலை செய்திருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.

கேரளாவை அதிர வைத்த சீரியல் கில்லர்

இதனை அடுத்து  தோட்டத்தில் போலீசார் குழு பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டினர். அப்போது, சுமார் 20 மனித எலும்பு கூடுகள், மனித பற்கள் ரத்த கரைகள் பெண்களின் உடைகள் போன்றவை கண்டெடுக்கப்பட்டன. இவை அனைத்தையும் உன் கிட்ட போலீசார் தடை அறிவியல் மற்றும் மரபணு பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

Also Read : நாமக்கல்லில் அதிர்ச்சி.. 3 மகள்களை கழுத்து அறுத்து கொன்ற தந்தை.. பகீர் பின்னணி!

ஜெயனம்மா உட்பட நான்கு பெண்களையும் செபாஸ்டியன் கொலை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் கூறியுள்ளனர். தனியாக வசித்த பெண்களை இவர் குறி வைத்து கொலை செய்து இருக்கலாம் என போலீசார் கூறுகின்றனர். அதற்காக கொலை செய்தார் என்ன காரணம் போன தொடர்பாக விசாரணை நடந்து வருவதாக கூறியுள்ளனர். கேரளாவில் நடந்த இந்த சீரியல் கொலைகள் அம் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.