Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கேரளாவில் தீயாய் பரவும் நிபா வைரஸ்.. கண்காணிப்பில் 425 பேர்… மாநில அரசு நடவடிக்கை!

Kerala Nipah Virus Outbreak : கேளராவில் நிபா வைரஸ் தொற்றால் இரண்டு பேர் பாதிக்கப்பட்டதை அடுத்து, அங்கு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், மலப்புரம், பாலக்காடு, கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 425 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதோடு, வீடு வீடாக சென்று காய்ச்சல் குறித்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் தீயாய் பரவும் நிபா வைரஸ்..  கண்காணிப்பில்  425 பேர்…  மாநில அரசு நடவடிக்கை!
நிபா வைரஸ்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 07 Jul 2025 08:57 AM

கேரளா, ஜூலை 07 : அண்டை மாநிலமான கேரளாவில் நிபா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அங்கு இருவருக்கு நிபா வைரஸ்  (Kerala Nipah Virus) உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர்களுடன் தொடர்பில் இருந்த 425 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மழைக்காலங்களில் அவ்வப்போது வைரஸ் தொற்று பாதிப்புகள் ஏற்படக் கூடும். குறிப்பாக, கொரோனா போன்ற தொற்று ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். இதற்கிடையில், நம் அண்டை மாநிலமான கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருகிறது. கேரளாவில் இரண்டு பேருக்கு நிபா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது, மலப்புரம் பகுதியைச் சேர்ந்த 17 வயறு சிறுமிக்கு நிபா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 17 வயது சிறுமி காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கேரளாவில் தீயாய் பரவும் நிபா வைரஸ்

அங்கு சிகிச்சை பெற்று வந்த சிறுமியின் உடல்நிலை மோசம் அடைந்ததை அடுத்து, 2025 ஜூன் 28ஆம் தேதி கோழிக்கோடு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் 2025 ஜூலை 1ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை அடுத்து, சிறுமியின் மாதிரியை பரிசோதனை செய்ததில், அவருக்கு நிபா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மேலும், பாலக்காட்டி 38 வயதான பெண் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டார். தொடர்ந்து, அவர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். இதனால், கேரளாவில் பாலக்காடு, கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் நிபா வைரஸ் பாதிப்பு அதிகளவில் இருப்பதாக தகவல் வெளியானது.  

இருவருக்கு நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர்களுடன் தொடர்பில் இருந்த 425 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக மலப்புரம் மாவட்டத்தில் 228 பேரும், பாலக்காட்டில் 110 பேரும், கோழிக்கோட்டில் 87 பேரும் தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

கண்காணிப்பு பணிகள் தீவிரம்

சுகாதார அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர், மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பரவலான கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர். வீடு வீடாக சென்று காய்ச்சல் குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், இரண்டு மாவட்டங்களில் தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் தனிமைப்படுத்தும் வசதிகளை அதிகரிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.

நிபா வைரஸ் அறிகுறிகள்

நிபா வைரஸ் என்பது ஆபத்தான வைரஸாகும். இது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. குறிப்பாக வௌவால்கள் தான் இந்ர வைரஸின் மூல காரணம் என சொல்லப்படுகிறது. இது கடுமையாக மூளையழற்சி, சுவாசக் கோளாறு போன்றவையால் மரணத்தை ஏற்படுத்துகிறது. காய்ச்சல், தலைவலி, தசை வலி, தொண்டை வலி, வாந்தி, தலைச்சுற்றல், மயக்கம் போன்றை நிபா ரைஸின் அறிகுறிகளாகும். நிபா வைரஸ்க்கு இதுவரை எந்த தடுப்பூசியும் கண்டுபிடிக்கவில்லை. சிகிச்சை மூலமாக மட்டுமே இது குணப்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.