AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Crime: சிறுமி கடத்தல்.. சினிமாவை மிஞ்சிய ட்விஸ்ட்.. கடைசியில் சிக்கிய இளைஞன்!

உத்தரப்பிரதேசத்தில் இருந்து 12 வயது சிறுமியை கடத்திச் சென்ற 22 வயது இளைஞர், 900 கிமீ தொலைவில் கைது செய்யப்பட்டார். மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேச காவல்துறையின் கூட்டு முயற்சியால் சிறுமி மீட்கப்பட்டார். கடத்தல் சம்பவம் குறித்து ஜபுவா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் கிட்டதட்ட 16 மணி நேரத்தில் சிறுமி மீட்கப்பட்டார்.

Crime: சிறுமி கடத்தல்.. சினிமாவை மிஞ்சிய ட்விஸ்ட்.. கடைசியில் சிக்கிய இளைஞன்!
கைதான கோவிந்த் நாயக்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 08 Jun 2025 09:39 AM IST

உத்தரப்பிரதேசம், ஜூன் 7: உத்தரப்பிரதேசத்தில் சிறுமியை கடத்திய இளைஞர் ஒருவர் 900 கிமீ தொலைவில் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் மத்தியப்பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசம் காவல்துறையினர் இணைந்து கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அவர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். அம்மாநிலத்தை அதிர வைத்த இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்பது பற்றிக் காணலாம். மத்தியப் பிரதேசத்தின் மேற்கு பகுதியில் ஜபுவா என்ற மாவட்டம் உள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் கோவிந்த் நாயக் என்பவர் வசித்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, மத்திய உத்தரப்பிரதேச மாநிலத்தின் அவுரையா மாவட்டத்தில் இருந்து மேற்கு மத்தியப் பிரதேசத்தின் ஜபுவா மாவட்டத்திற்கு அவன் வருகை தந்துள்ளான்.

அங்கிருக்கும் ராணாபூர் நகரத்தில் தெருவோர ஆடை விற்பனையாளர்கள் குழுவினருடன் தங்கியிருந்த கோவிந்த் நாயக், சாலையோர கடை ஒன்றையும் நடத்தி வந்ததாக சொல்லப்படுகிறது. கோவிந்த் நாயக் தான் வசித்து வந்த பகுதியில் இருந்த 12 வயது சிறுமியுடன் பேசி பழகி நட்பை வளர்த்துள்ளார். அந்த சிறுமி ஒரு பழங்குடியின பெண்ணாவார். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியதாக கூறப்படுகிறது. சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கோவிந்த் மயக்கியுள்ளான்.

சிறுமியை கடத்தி சென்ற கோவிந்த்

இதனிடையே இரண்டு வருடமாக பழகிய நிலையில் சிறுமி கோவிந்த் மீது மிகப்பெரிய நம்பிக்கையை வைத்திருக்கிறார். இந்த நிலையில் அச்சிறுமியை அழைத்து செல்ல அவன் முடிவெடுத்தான். அதன்பாடி 2025, மே 31 ஆம் தேதி அந்த சிறுமியை யாரும் அறியாத வகையில் திட்டமிட்டு கோவிந்த் அழைத்து சென்றுள்ளான். ஏற்கனவே அவனுடன் பழகுவதை சிறுமியின் குடும்பத்தினர் கண்டித்திருக்கின்றனர். இந்நிலையில் அவள் காணாமல் போனதால் நிச்சயம் கோவிந்த் தான் அழைத்துச் சென்றிருப்பான் என சிறுமி குடும்பத்தினர் நம்பினர்.

ஆனால் சிறுமி காணாமல் போனதை உறுதி செய்வதற்குள் கோவிந்த் அப்பெண்ணுடன் ஜாபுவாவிலிருந்து 150 கி.மீ தொலைவில் உள்ள இந்தூரை அடைந்து குவாலியருக்குப் பேருந்தில் ஏறியிருக்கிறான். இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து சிறுமியின் குடும்பத்தினர் ஜபுவா மாவட்ட காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இரண்டு குழுக்கள் அமைத்து கடத்தப்பட்ட சிறுமியை தேடும் பணி 2025, மே 31 ஆம் தேதி மாலை 4 மணிக்கு தொடங்கினர். சிறுமி காணாமல் போனது, கடத்தல் வழக்காக ராணாபூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது.

போலீசை திசை திருப்ப ட்விஸ்ட்

இதில் தான் கோவிந்த் எப்படிப்பட்ட திட்டம் தீட்டியிருந்தான் என்பது போலீசாருக்கு புரிந்தது. அதாவது சிறுமி காணாமல் போனால் போலீசார் முதலில் தன்னை சுற்றியுள்ள முக்கிய தொடர்புகளை விசாரிப்பார்கள் என்பதை நன்கு அறிந்திருந்த அவன், தனது சொந்த மாநிலமான உத்தரப்பிரதேசத்துக்கு செல்லும் நிலையில் குஜராத்துக்குச் செல்லப் போவதாக தொலைபேசியில் கூறிக்கொண்டே இருந்துள்ளான்.போலீசாரின் கவனத்தை திசைதிருப்ப அவன் தாஹோத்திலிருந்து குஜராத்தில் உள்ள கோத்ராவுக்குச் செல்வதாக கூறியிருந்தான்.

ஆனால் அவனது செல்போன் சிக்னல் மத்தியப் பிரதேசத்தின் குணா மாவட்டத்தைக் காட்டியது. இதனைத் தொடர்ந்து கோவிந்தின் இருப்பிடத்தைக் காவல்துறை கண்காணித்தது. இதனால் அவன் உத்தரப்பிரதேசத்துக்குச் செல்வது உறுதியானது. ஜாபுவா காவல்துறையின் இரு குழுக்களும் கோவிந்தைப் பிடிக்க புறப்பட்டனர். ஆனால் அவன் இருந்த இடத்துக்கு செல்ல கிட்டதட்ட ஆறரை மணி நேரம் தேவைப்பட்டது. அதேசமயம் கோவிந்த் உத்தரப்பிரதேசத்தில் உள்ள தனது சொந்த மாவட்டமான அவுரையாவுக்குச் செல்லாமல் தன்னுடைய சகோதரி வசிக்கும் கான்பூரில் உள்ள தேஹாத் பகுதிக்கு சென்றுள்ளான்.

அன்றிரவு அங்கேயே தங்கிய நிலையில் உடனடியாக ஜாபுவா காவல்துறையினர் தேஹாத் மாவட்ட காவல்துறை உதவியை நாடினர். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமியை மீட்டனர். கோவிந்த் நாயக் தப்பிய நிலையில் அடுத்த சில மணி நேரத்தில் பக்கத்து ஊரில் கைது செய்யப்பட்டான். 2025, மே 31 ஆம் தேதி மாலை 4 மணிக்கு தொடங்கிய இந்த வேட்டை 2025, ஜூன் 1 ஆம் தேதி காலை 8 மணிக்கு நிறைவடைந்தது. கடத்தப்பட்ட அந்த சிறுமி அவர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்த சம்பவம் தற்போது தான் வெளியே தெரிய வந்துள்ளது.

Follow Us