பெண் டெக்கி எடுத்த விபரீத முடிவு.. 21வது மாடியில் நடந்த சம்பவம்.. சிக்கிய கடிதம்!
Pune Techie Suicide : மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் பெண் ஐடி ஊழியர் 21வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தனது வாழ்க்கை முடிந்துவிட்டதாகவும், தனக்கு வாழ விருப்பமில்லை என்றும் கடிதம் எழுதிவிட்டு, இந்த விபரீத முடிவை எடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

புனே, ஜூன் 06 : மகாராஷ்ரா மாநிலம் புனேவில் 25 வயதான ஐடி ஊழியர் 21வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்து கொண்டவர் அபிலாஷா பௌசாஹேப் கோதிம்பிரே என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. சமீப காலமாகவே, ஐடி ஊழியர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர்ந்து நடந்து வருகிறது. பணிச்சுமை, குடும்ப பிரச்னை போன்ற காரணங்களால் ஐடி ஊழியர்கள் தற்கொலை செய்து கொள்வது நடந்து வருகிறது. இதனை தடுக்க மாநில, மத்திய அரசும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இருப்பினும், இதுபோன்று விபரீத முடிவு எடுக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. அந்த வகையில், தற்போது மகராஷ்டிரா மாநிலம் புனேவில் பெண் ஐடி ஊழியர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். தற்கொலை செய்து கொண்டவர் அபிலாஷா பௌசாஹேப் கோதிம்பிரே என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
பெண் டெக்கி எடுத்த விபரீத முடிவு
இவர் புனேவில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஐடி ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், இந்த நிலையில், இவர் நண்பரை பார்ப்பதற்காக 2025 மே 31ஆம் தேதி அவரது வீட்டிற்கு சென்றிருக்கிறார்.
அங்கு அதிகாலை 4.30 மணியளவில் அடுக்குமாடி குடியிருப்பின் 21வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இதனை அறிந்த அவரது நண்பர் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பெண்ணின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக கூறினர். இதனை அடுத்து, பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிக்கிய கடிதம்
STORY | 25-year-old techie jumps to death from 21st floor of Pune residential building
READ: https://t.co/sq5tAALlRN pic.twitter.com/E40eUyqcuA
— Press Trust of India (@PTI_News) June 5, 2025
மேலும், அவரது நண்பரின் வீட்டில் சோதனை மேற்கொண்ட போது கடிதம் ஒன்றும் சிக்கியுள்ளது. அதில், ”அந்த பெண், நான் வாழ்ந்து முடித்துவிட்டேன். இனிமேல் எனக்கு வாழ விருப்பமில்லை. நண்பர்கள், குடும்பத்தினர் என்னை மன்னித்து விடுங்கள் ” என கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.
முன்னதாக, இரண்டு வாரங்களுக்கு முன்பு, பெங்களூருவில் ஐடி ஊழியர் தற்கொலை செய்து கொண்டார். ஓலாவின் ஏஐ பிரிவில் பணியாற்றி வந்த நிகில் சோம்வன்ஷி தற்கொலை செய்து கொண்டார். பணிச்சுமை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
(எந்தவொரு பிரச்னைக்கும் தற்கொலை எதற்கும் தீர்வல்ல. ஏதேனும் பிரச்னையால் மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)