Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

உ.பியில் கொடூரம்: சூட்கேஸில் பெண்ணின் சடலம், காதலன் கைது!

Delhi Woman Killed Over Money Dispute: உத்திரப்பிரதேசம் ஹாபூர் மாவட்டத்தில், 24 வயது இளம்பெண் ஒருவரின் சடலம் சூட்கேசில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. காதலுக்குள் ஏற்பட்ட பணவிவாதத்தில், டெல்லியைச் சேர்ந்த 29 வயது சதேந்திர யாதவ் என்பவர் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக காவல்துறை தெரிவித்தது.

உ.பியில் கொடூரம்: சூட்கேஸில் பெண்ணின் சடலம், காதலன் கைது!
பணப்பிரச்சனையில் காதலியை கொன்ற காதலன் Image Source: social media
sivasankari-bose
Sivasankari Bose | Published: 07 Jun 2025 08:58 AM

உத்திரப் பிரதேசம் ஜூன் 07: உத்திரப் பிரதேச மாநிலம் ஹாபூர் மாவட்டத்தில் சூட்கேஸில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில், 24 வயது இளம்பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, டெல்லி வினோத் நகர் பகுதியைச் சேர்ந்த 29 வயதான சதேந்திர யாதவ் என்ற நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக காதலுறவில் இருந்தபோது, அந்த இளம்பெண் ரூ.5.25 லட்சம் பணம் வழங்கியதாக கூறப்படுகிறது. கடந்த மாதம் 28ஆம் தேதி, பணத்தை திருப்பிக் கொடுக்க கேட்டதற்காக தகராறு ஏற்பட்டு, யாதவ் தனது காதலியை கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சூட்கேஸில் பெண் சடலம் மறைத்து வாய்ப்பு

உத்திரப் பிரதேச மாநிலம் ஹாபூர் மாவட்டத்தில் 24 வயது இளம்பெண் ஒருவர் சூட்கேசில் சடலமாக காணப்பட்ட கொலை வழக்கில், காவல்துறையினர் 29 வயது நண்பரைக் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, 2025 மே 30ஆம் தேதி ஹாபூர் மாவட்டம் பில்குவா காவல் நிலைய எல்லைக்குள் உள்ள சிகேதா கிராமத்தில், கால்வாய் அருகே ஒரு சூட்கேஸில் பெண் சடலம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அந்த பெண் டெல்லியின் திரிலோக்புரியை சேர்ந்த நீலேஷ் என அடையாளம் காணப்பட்டார். சடலம் மிகவும் அழுகிய நிலையில் இருந்ததோடு, கழுத்தில் தழும்புகள் காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இளம்பெண் கொலை: காதலன் கைது

இந்தக் கொலையில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் டெல்லி வினோத் நகர் பகுதியைச் சேர்ந்த சதேந்திர யாதவ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ஒரு தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணியாற்றியவராவார். யாதவிடமிருந்து நகுந்த பெண்ணின் ஆதார் அட்டை, வங்கி பாஸ்புக், இரு மொபைல் போன்கள் மற்றும் காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பணவிவாதமே கொலையின் காரணமா?

தனது வாக்குமூலில் யாதவ், கடந்த 3 ஆண்டுகளாக நீலேஷுடன் காதல் உறவில் இருந்ததாகவும், அந்த காலப்பகுதியில் அவர் ₹5.25 லட்சம் பணம் கொடுத்ததாகவும் கூறியுள்ளார். கடந்த அக்டோபரில், நீலேஷுக்கு சிறுநீரக கோளாறு இருப்பது தெரியவந்த நிலையில், டெல்லியின் தரம்சீலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

தகராறு கொலையில் முடிந்ததாக வாக்கு மூலம்

2025 மே 28ஆம் தேதி, தன் பணத்தை கேட்டு வந்த நீலேஷை யாதவ் கடுமையாகத் தாக்கி உள்ளார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராற்றில், யாதவ் அவளின் ஸ்கார்ஃப்பை பயன்படுத்தி கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகவும், பின்னர் தனது அறையில் இருந்த சூட்கேசில் சடலத்தை மறுத்ததாகவும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

பின்னர் அன்றைய தினம் அந்த இரவு, சடலத்தை சூட்கேசில் வைத்து தனது காரில் சிகேதா கால்வாய் சாலையில் கொண்டு சென்று எறிந்ததாகவும் கூறியுள்ளார். இந்த வழக்கில் தொடர்புடைய காரும், சிசிடிவி காட்சிகளும், முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என ஹாபூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குன்வர் ஜ்யானஞ்சய் சிங் தெரிவித்தார்.