AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பிரதமர் மோடி திறந்து வைத்த உலகின் மிக உயரமான செனாப் ரயில்வே பாலம்.. இவ்வளவு ஸ்பெஷலா?

World's Tallest Rail Bridge: ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில், உலகின் மிக உயரமான ரயில்வே பாலமான செனாப் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். 359 மீட்டர் உயரமும் 1315 மீட்டர் நீளமும் கொண்ட இந்த பாலம், பூகம்பம் மற்றும் சூறாவளிக்கு எதிரான வடிவமைப்புடன் 120 ஆண்டுகள் ஆயுளுடையது.

பிரதமர் மோடி திறந்து வைத்த உலகின் மிக உயரமான செனாப் ரயில்வே பாலம்..  இவ்வளவு ஸ்பெஷலா?
ஜம்மு காஷ்மீரில் உலகின் மிக உயரமான ரயில் பாலம் திறப்புImage Source: x
Sivasankari Bose
Sivasankari Bose | Updated On: 06 Jun 2025 13:18 PM IST

ஜம்மு-காஷ்மீர் ஜூன் 06: ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உலகின் மிக உயரமான ரயில்வே பாலமான செனாப் பாலத்தை பிரதமர் மோடி 2025 ஜூன் 6 அன்று திறந்து வைத்தார். இந்த பாலம் 359 மீட்டர் உயரத்தில், 1,315 மீட்டர் நீளத்தில் செனாப் நதிக்கு மேல் கட்டப்பட்டுள்ளது. பூகம்பம் மற்றும் சூறாவளியையும் தாங்கும் வல்லமை கொண்ட இந்த பாலம், 120 ஆண்டுகள் ஆயுளுடையதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் வழியாக வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படவுள்ளன, இதனால் கத்ரா–ஸ்ரீநகர் இடையிலான பயண நேரம் 3 மணிநேரத்திற்கு குறையும். பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு முதன்முறையாக ஜம்மு-காஷ்மீருக்குச் சென்ற பிரதமர், மேலும் ரூ.46,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களையும் தொடங்கி வைத்தார். செனாப் பாலம், ஈபிள் கோபுரத்தை விட 35 மீட்டர் உயரம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

செனாப் பாலம் திறந்துவைக்கப்பட்டது

ஜம்மு-காஷ்மீர் ரியாசி மாவட்டத்தில், செனாப் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில்வே பாலமான செனாப் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூன் 6) உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார். 359 மீட்டர் உயரத்தில், 1,315 மீட்டர் நீளத்தில் அமைந்துள்ள இந்த வளைவான பாலம், ரயில்வே வரலாற்றில் மிக முக்கியமான சாதனையாகும்.

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு முதல் பயணம்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் முதல் முறையாக ஜம்மு-காஷ்மீர் பயணித்த பிரதமர் மோடி, பாதுகாப்பு நடவடிக்கைகள் உறுதி செய்யப்பட்ட பின்னரே சென்றுள்ளார். அந்த தாக்குதலுக்குப் பின் இந்திய ராணுவம் சிந்தூர் நடவடிக்கையில் பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை அழித்து அமைதியை மீட்டுள்ளது.

செனாப் ரயில்வே பாலம் திறப்பு

செனாப் பாலம்: தொழில்நுட்ப சிறப்பம்சங்கள்

இந்த செனாப் பாலம், ரிக்டர் அளவுகோலில் 8 அளவுவரை நிலநடுக்கத்தையும், மணிக்கு 260 கி.மீ. வேகத்தில் வீசும் காற்றையும் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 120 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்ட இந்த பாலத்தில் மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் ரயில் ஓட முடியும்.

வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம்

கத்ரா-ஸ்ரீநகர் இடையே 2 புதிய வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இந்த புதிய சேவைகள் மூலம் பயண நேரம் சுமார் 3 மணி நேரமாக குறையும். கடந்த ஜனவரி மாதமே சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.

ஆஞ்சி பாலம் மற்றும் வளர்ச்சி திட்டங்கள்

இதையடுத்து, கம்பி வழி ரயில் பாலமான ஆஞ்சி பாலத்தையும் பிரதமர் திறந்து வைத்தார். பகல் 12 மணியளவில் வைஷ்ணோ தேவி கோவில் நகரமான கத்ராவில் இருந்து ஸ்ரீநகர் வரை இயக்கப்படும் 2 வந்தே பாரத் ரயில்களையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் ரூ.46,000 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

பிரதமரின் வருகை – புதிய தொடக்கங்களுக்கு தொடக்கக்கல்லாகும்

பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி இரண்டிலும் உறுதியளிக்கும் வகையில், ஜம்மு-காஷ்மீரில் அமைதி நிலவிக்கொண்டிருக்க, இந்த ரயில்வே இணைப்பு இந்தியாவின் வடக்கு எல்லைப் பகுதிகளின் உள்நாட்டுப் போக்குவரத்தில் மிகப்பெரிய முன்னேற்றமாகும்.

Follow Us