Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மொத்தம் 30 கேள்விகள்.. மக்கள் தொகை கணக்கெடுப்பில் இதையெல்லாம் கேட்பாங்க.. என்ன தெரியுமா?

Population Census 2027 : நாடு முழுவதும் 2027ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, 30 கேள்விகள் கேட்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. அது என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்.

மொத்தம் 30 கேள்விகள்.. மக்கள் தொகை கணக்கெடுப்பில் இதையெல்லாம்  கேட்பாங்க..  என்ன தெரியுமா?
மக்கள் தொகை கணக்கெடுப்பு
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 06 Jun 2025 09:09 AM

டெல்லி, ஜூன் 06 : தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு (Population census) 2027ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. கிட்டதட்ட 16 ஆண்டுகளுக்கு பிறகு, மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. கடைசியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011ஆம் ஆண்டு நடந்தது. அதன்பிறகு, பல்வேறு காரணங்காளல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பை (Caste census) நடத்த கோரி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்த நிலையில், 2027ஆம் ஆண்டு சாதி வாரி கணக்கெடுப்புடன் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு

இந்தியாவில் ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறையும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது விதி. கடைசியாக 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்பிறகு 2021ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும்.

கொரோனா தொற்று காரணமாக, 2021ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. 2011ஆம் ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி, நாட்டின் மொத்த மக்கள் தொகை 1,210.19 மில்லியனாக இருந்தது. இதில் ஆண்கள் 51 சதவீத பேரும, பெண்கள் 48 சதவீத பேரும் இருந்துள்ளனர்.

இந்த நிலையில், 2027ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.  இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் மக்களிடம் என்னென்ன கேள்விகள் கேட்கப்படும் என்ற விவரங்களை பார்ப்போம்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவாளர் இயக்குநர் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகம் சுமார் முப்பது கேள்விகளைத் தயாரித்துள்ளது. இந்தக் கேள்விகள் குடும்பங்கள், அவர்களின் நிதி மற்றும் சமூக அந்தஸ்து உள்ளிட்டவற்றைப் பற்றி இருக்கும்.

30 கேள்விகள் என்னென்ன?


அதன்படி, மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது மக்களிடம் பெயர், அவர்கள் திருமணமானவர்களா, குழந்தையின் விவரங்கள், கல்வித்தகுதி, வேலைவாப்பு குறித்த விவரங்கள், தொலைப்பேசி எண், இணைய இணைப்பு போன்றவை கேட்கப்படும்.

மேலும், வீட்டில் உள்ள வாகனங்களால் சைக்கிள், இருசக்கர வாகனம், கார் போன்ற விவரங்கள், வீட்டில் சாப்பிடும் உணவு விவரங்கள், குடிநீர், மின்சாரம், வீட்டில் உள்ள கழிவறை வகை, கழிவுநீர் வெளியேறும் இடம், குளியல் வசதி, கேஸ் சிலிண்டர் இணைப்பு வசதி, வீட்டின் தரம் குறித்த நிலை, வீட்டில் வசிக்கும் நபர்களின் எண்ணிக்கை, குடும்ப தலைவர் யார், குடும்பத்தின் சாதி விவரங்கள், வீட்டில் உள்ள அறைகளின் எண்ணிக்கை, வீட்டில் வசிக்கும் தம்பதிகளின் எண்ணிக்கை உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.