Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

உலகம் வியக்கும் செனாப் ரயில் பாலம்.. நாளை திறந்து வைக்கும் பிரதமர் மோடி.. என்னென்ன சிறப்புகள்?

Kashmir Chenab railway Bridge : உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத்தை பிரதமர் மோடி 2025 ஜூன் 6ஆம் தேதி திறந்து வைக்க உள்ளார். காஷ்மீர் ரியாசி மாவட்த்தில் செனாப் ஆற்றின் மீது இந்த பிரம்மாண்ட பாலம் ரூ.1,400 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது.

உலகம் வியக்கும் செனாப் ரயில் பாலம்.. நாளை திறந்து வைக்கும் பிரதமர் மோடி.. என்னென்ன சிறப்புகள்?
காஷ்மீர் செனாப் பாலம்Image Source: PTI
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 25 Jun 2025 11:24 AM

காஷ்மீர், ஜூன் 05 : உலகின் மிக உயரமான ரயில் பாலமான செனாப் பாலத்தை (Chenab Rail bridge) பிரதமர் மோடி (Pm modi) 2025 ஜூன் 6ஆம் தேதியான நாளை திறந்து வைக்க உள்ளார். இந்த பாலம் ஈபிள் டவரை விட உயரமானது. இந்த பாலம் உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் பாதை வழியாக இணைக்கிறது.  ரயில்வே துறையை நவீனப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பல்வேறு   அதிநவீன ரயில்களையும் மத்திய அரசு கொண்டு வருகிறது.    மேலும், புதிய ரயில் பாதைகள், ரயில் நிலைங்கள் போன்றவற்றையும் மத்திய அரசு அமைத்து வருகின்றனர். பயணிகளுக்கு சிறப்பான பயணத்தை ரயில்வே துறையை நவீனப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தான், உலகத்தையே திரும்பி பார்க்க வைக்கும் வகையில், பிரம்மாண்ட பாலம் ஒன்று காஷ்மீரில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.  இது செனாப் பாலம் என அழைக்கப்படுகிறது.

செனாப் பாலத்தின் சிறப்பம்சங்கள் என்னென்ன?

இந்த பாலம் ஜம்மு மற்றும் ஸ்ரீநகருக்கு இடையேயான ரயில் இணைப்பை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், ஜம்மு-காஷ்மீரின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கும். செனாப் பாலம் ரூ.1,400 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது.

இந்த பாலம் செனாப் நதியில் இருந்து 359 மீட்டர் உயரம் கொண்டது. இது ஈபிள் கோபுரத்தை விட உயரமானது. இந்த பாலம் 30,000 மெட்ரிக் டன் உயர்தர ஸ்டீல் மற்றும் கான்கிரீட்டால் ஆனது. மணிக்கு 266 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் காற்றைத் தாங்கும் வகையில் இந்த பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 நாளை திறந்து வைக்கும் பிரதமர் மோடி

மேலும், 8 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டாலும் அதனை தாங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் ஆயுட்காலம் 120 ஆண்டுகள் ஆகும். இந்தப் பாலத்தைக் கட்டுவதற்கு 28,660 மெட்ரிக் டன் ஸ்டீல், 66000 கான்கிரீட் போன்றவை தேவைப்பட்டுள்ளன.

மைனஸ் 10 டிகிரி செல்சியஸ் குளிர் முதல் 40 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பத்தை தாங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் மணிக்கு 100 கிமீ வேகத்தில் ரயில்கள் செல்ல முடியும். இந்த பாலத்தில்  மூலம் கத்ரா மற்றும் ஸ்ரீநகர் இடையே பயணிக்க சுமார் 3 மணிநேரம் மட்டுமே ஆகும். இந்த பிரம்மாண்ட செனாப் பாலத்தை பிரதமர் மோடி 2025 ஜூலை 6ஆம் தேதியான திறந்து வைக்கிறார். மேலும், கட்ராவில் ரூ.46,000 கோடிக்கு மதிப்புள்ள திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். என்பது குறிப்பிடத்தக்கது.