Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஆபரேஷன் சிந்தூர் குழு.. எம்.பிக்களை சந்திக்கும் பிரதமர் மோடி.. என்ன மேட்டர்?

Operation Sindoor All Party delegation Meet PM Modi : ஆபரேஷன் சிந்தூர் எம்.பிக்கள் குழுவை பிரதமர் மோடி 2025 ஜூன் 9,10ஆம் தேதிகளில் சந்திப்பார் என தகவல் வெளியாகி உள்ளது. 7 எம்.பிக்கள் கொண்ட குழு ஆபரேஷன் சிந்தூர், பயங்கரவாத தாக்குதல் குறித்து விவரிக்க உலக நாடுகளுக்கு சென்ற நிலையில், இன்னும் சில நாட்களில் இந்தியா திரும்ப உள்ளனர்.

ஆபரேஷன் சிந்தூர் குழு.. எம்.பிக்களை சந்திக்கும் பிரதமர் மோடி.. என்ன மேட்டர்?
பிரதமர் மோடிImage Source: PTI
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 03 Jun 2025 09:51 AM

டெல்லி, ஜூன் 03 : ஆபேரஷன் சிந்தூர் (Operation sindoor) விவரிக்க 33 நாடுகளுக்கு சென்ற எம்.பிக்கள் குழுவை (All party delegation) பிரதமர் மோடி (PM Modi) சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பு 2025 ஜூன் 9, 10ஆம் தேதிகளில் டெல்லியில் நடைபெறும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த சந்திப்பின்போது, பல்வேறு நாடுகள் கூறிய கருத்துகள் குறித்து பிரதமர் மோடியிடன் எம்.பிக்கள் குழு விளக்குவார்கள் என தெரிகிறது. ஆபரேஷன் சிந்தூர் குறித்து உலக நாடுகளுக்கு விளக்க 7 எம்.பிக்கள் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்தது. இந்த குழுவுக்கு காங்கிரஸ் திருவனந்தபுரம் எம்.பி தலைமை தாங்கும் நிலையில், மகாராஷ்டிராவின் சிவசேனா கட்சியின் எம்பி ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே, பீகார் பாஜக எம்.பி ரவிசங்கர் பிரசாத், தமிழகத்தின் திமுக எம்.பி கனிமொழி, பீகார் ஐக்கிய ஜனதா தளம் எம்.பி சஞ்சய் குமார் ஜா, மகாராஷ்ரா தேசியவாத காங்கிரஸ் எம்.பி சுப்ரிய சுலே ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

ஆபரேஷன் சிந்தூர் குழு

இவர்கள் தலையில் கொண்ட எம்.பிக்கள் குழு 33 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறது. ரஷ்யா, அமெரிக்கா, இந்தோனேசியா, சிங்கப்பூர், ஜப்பான், கொரிய குடியரசு, பனாமா, கயானா, இத்தாலி, டென்மார்க், ஜெர்மினி, குவைத், சவுத் உள்ளிட்ட 33 நாடுகளுக்கு எம்.பிக்கள் குழு விரைந்துள்ளன.

2025 மே 21ஆம் தேதி இந்த இந்த பயணம் தொடங்கிய நிலையில், இன்னும் சில நாட்களில் டெல்லி திரும்ப உள்ளனர். இந்த குழு ஆபரேஷன் சிந்தூர் குறித்தும், பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் எந்த அளவுக்கு ஆதரவு அளிக்கிறது என்பதையும், பயங்கரவாதத்தால் இந்தியா எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டது என்பதையும் எம்.பிக்கள் உலக நாடுகளின் பிரதிநிதிகளிடம் விளக்கி உள்ளனர். இந்த எம்.பிக்கள் குழு இன்னும் சில நாட்களில் டெல்லி திரும்புகின்றனர்.

எம்.பிக்களை சந்திக்கும் பிரதமர் மோடி


இந்த நிலையில், பிரதமர் மோடி எம்.பிக்கள் குழு சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  டிவி 9 தகவலின்படி,  வெளிநாடு சென்ற எம்.பிக்கள் குழுவை பிரதமர் மோடி 2025 ஜூன் 9, 10ஆம் தேதிகளில் டெல்லியில் நேரில் சந்திப்பார் என கூறப்படுகிறது.  இந்த சந்திப்பின்போது, பஹல்காம் தாக்குதல் குறித்தும், ஆபரேஷன் சிந்தூர், பயங்கரவாதம் பிரச்னை குறித்து உலக நாடுகளின் சொன்ன விஷயங்கள் குறித்து எம்.பிக்கள் குழு பிரதமர் மோடி விளக்குவார்கள்.  மேலும், பயங்கரவாதத்தை உலக நாடுகள் எவ்வாறு எதிர்க்கிறது என்பது குறித்தும் எம்.பிக்கள் குழு விவரிக்கும் என சொல்லப்படுகிறது. பிரதமர் மோடியின் சந்திப்பிற்கு முன்பு, வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை சந்திப்பார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

பஹல்காம் தாக்குதல்

2025 ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தாலும், இதற்கு பாகிஸ்தானுக்கு பங்கு இருப்பதாக இந்தியா குற்றச்சாட்டி, அந்நாட்டின் மீது ஆபேரஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானும் பதிலடி கொடுத்தது. இப்படியே மூன்று நாட்கள் சென்ற நிலையில், 2025 மே 10ஆம் தேதி தாக்குதல் நிறுத்தப்பட்டது.

இருப்பினும், இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகம் நிறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில், மீண்டும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால், இந்தியா பொறுத்துக் கொள்ளாத என்றும் எந்த தாக்குதலை இந்தியா போர் நடவடிக்கையாக கருதி தக்க பதிலடி கொடுக்கும் என பிரதமர் மோடி கூறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.