AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

CDS Chauhan on Operation Sindoor: 6 இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதா..? உண்மையை உடைத்த தளபதி ஜெனரல் அனில் சவுகான்!

India-Pakistan Conflict: இந்திய பாதுகாப்புத் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான், ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளார். பாகிஸ்தானின் விமானத் தளங்களைத் தாக்கியது, துல்லியமான தாக்குதல்கள், ஆரம்பகால இழப்புகள் மற்றும் அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட தந்திரோபாய மாற்றங்கள் பற்றி விளக்கியுள்ளார். அணு ஆயுத பயன்பாட்டின் அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்றும், மே 7, 8 மற்றும் 10 ஆம் தேதிகளில் இந்தியா பெருமளவில் பதிலடி கொடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

CDS Chauhan on Operation Sindoor: 6 இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதா..? உண்மையை உடைத்த தளபதி ஜெனரல் அனில் சவுகான்!
இந்திய பாதுகாப்பு தலைமை தளபதி ஜெனரல் அனில் சவுகான்Image Source: PTI
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 31 May 2025 19:09 PM IST

டெல்லி, மே 31: இந்திய பாதுகாப்பு தலைமை தளபதி ஜெனரல் அனில் சவுகான் (CDS Anil Chauhan), ஆபரேஷன் சிந்தூர் திட்டத்தின் கீழ் பாகிஸ்தானுக்குள் நுழைந்ததன் மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றியும், பாகிஸ்தானுடனான மோதலின்போது முதல் நாளில் இந்திய இராணுவம் (Indian Army) சந்தித்த சில இழப்புகளை பற்றியும் விவரித்தார். இதன்பிறகு, இந்தியா செய்த தந்திர மாற்றம் எவ்வாறு பயனுள்ளதாக இருந்தது என்றும், இந்தியா – பாகிஸ்தான் (India – Pakistan Tension) போரின்போது அணு ஆயுத அச்சுறுத்தல் எதுவும் ஏற்படவில்லை. 2025 மே 7, 8 மற்றும் 10 ஆகிய தேதிகளில் இந்தியா பெருமளவில் பதிலடி கொடுத்ததாகவும், பாகிஸ்தானின் விமானப்படை தளங்களை ஆழமாக குறிவைத்ததாகவும் என்றும் தெரிவித்தார்.

ஆபரேஷன் சிந்தூர் பற்றி விவரித்த இந்திய இராணுவ ஜெனரல்:

சிங்கப்பூரில் நடந்த ஷாங்க்ரி-லா உரையாடல் பாதுகாப்பு மாநாட்டின் போது ப்ளூம்பெர்க்கிற்கு இந்திய பாதுகாப்பு தலைமை தளபதி ஜெனரல் அனில் சவுகான் அளித்த பேட்டியில், ” மத்திய அரசு கொடுக்க உத்தரவிற்கு பிறகு, நாங்கள் எந்த தடையும் இல்லாமல் பாகிஸ்தானுக்குள் நுழைந்து அவர்களின் விமான தளங்களை தாக்கினோம். பாகிஸ்தானின் அனைத்து பாதுகாப்பையும் மீறி உள்ள் நுழைந்து துல்லியமான தாக்குதல்களை நடத்தினோம். கடந்த 2025 மே 10ம் தேதி இந்திய விமானப்படை அனைத்து வகையான ஆயுதங்களுடனும் வானில் விமானங்களை பறக்கவிட்டு, தாக்குதல் நடத்தினோம்” என்று தெரிவித்தார்.

தந்திரங்களை மாற்றினோம்:

தொடர்ந்து செய்தியாளர் ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு, இந்தியாவிற்கு ஏற்பட்ட சேதம் குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ஜெனரல் சவுகான், “பாகிஸ்தான் உடனான மோதலின்போது இந்திய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது என்பது உண்மைதான். விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது என்பதை விட, தவறு எப்படி நடந்தது என்பதை ஆராய்ந்தோம். அதன்பிறகு, எங்களது தவறை கண்டறிந்து, அதனை சரி செய்து ஒரு தினங்களுக்கு பிறகு இலக்குகள் மீது வெற்றிகரமாக தாக்குதல் நடத்தினோம். நாங்கள் மீண்டும் எங்கள் அனைத்து போர் விமானங்களையும் நீண்ட தூர இலக்குகளில் பறக்கவிட்டோம். பாகிஸ்தானுக்குள் 300 கிலோமீட்டர் தூரம் வரை, வான் பாதுகாப்பு மிகுந்த விமான தளங்கள் மீது, ஒரு மீட்டர் துல்லியத்துடன் துல்லியமான தாக்குதல்களை நடத்த முடிந்தது.” என்றார்.

6 இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதா..?

சிந்தூர் ஆபரேஷனின்போது ரபேல் உள்பட 6 இந்திய விமானங்களை சூட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியது குறித்து கேட்டபோது பதிலளித்த ஜெனரல் சவுகான், “தனது நாட்டு மக்களை மகிழ்விக்க ஷாபாஸ் ஷெரீப், பாகிஸ்தான் 6 இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக கூறியிருக்கிறார். ஆனால், அப்படி எதுவும் நடைபெறவில்லை. போர் முடிவுக்குக் கொண்டுவரும் செயல்முறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எதிர்காலத்தில் பாகிஸ்தானின் நடவடிக்கைகளைப் பொறுத்தது. இரு தரப்பினரும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு நெருக்கமாக இருப்பதாகக் கூறுவது அபத்தமானது.” எனவும் கூறினார்.

Follow Us