AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வேகமெடுக்கும் கொரோனா.. 2,000-ஐ தாண்டிய பாதிப்புகள்.. தமிழகத்தில் நிலை என்ன?

India Covid Cases : நாட்டில் கொரோனா பாதிப்புகள் 2,000-ஐ  தாண்டியதாக மத்திய சுகாதாரத்துறை  தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 2,710 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக கேரளாவில் 1,147 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் 148 பேர் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், 60 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வேகமெடுக்கும் கொரோனா.. 2,000-ஐ தாண்டிய பாதிப்புகள்.. தமிழகத்தில் நிலை என்ன?
கொரோனாImage Source: X
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 31 May 2025 10:55 AM IST

டெல்லி, மே 31 : நாட்டில் கொரோனா பாதிப்புகள் (india covid cases) 2,000-ஐ  தாண்டியதாக மத்திய சுகாதாரத்துறை  தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 2,710 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக கேரளாவில் 1,147 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆசிய நாடுகளில்  பரவிய கொரோனா தொற்று, தற்போது இந்தியாவில் அதிகரித்துள்ளது.  தாய்லாந்து, சிங்கப்பூரில் 2025 மே மாதத்தில் கொரோனா தொற்று பரவியது. அதைத் தொடர்ந்து, தற்போது கொரோனா தொற்று இந்தியாவிலும் அதிகரித்துள்ளது. 2025 மே மாதத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.  NB.1.8.1 மற்றும் LF.7 ஆகிய கொரோனா வகைகள் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரித்துள்ளது. நாட்டில் இதுவரை 2,710 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2,000-ஐ தாண்டிய கொரோனா பாதிப்புகள்

நாட்டில் 2,710 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கேரளாவில் 1,147 பேர் கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மகாராஷ்டிராவில் 424 பேரும், டெல்லியில் 294 பேரும், குஜராத்தில் 223 பேரும்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 148 பேரும், குஜராத்தில் 223 பேரும், மகாராஷ்டிரா 424 பேரும், புதுச்சேரி 35 பேரும், பஞ்சாபில் 4 பேரும், ராஜஸ்தானில் 51 பேரும், உத்தர பிரதேசத்தில் 42 பேரும், மேற்கு வங்கத்தில் 116 பேரும், ஆந்திராவில் 16 பேரும், கர்நாடகாவில் 148 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், டெல்லி, குஜராத், கர்நாடக, தமிழ்நாடு, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர். மகாராஷ்டிராவில் 2 பேரும் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர்.  இருப்பினும், பெரும்பாலான கோவிட்-19 பாதிப்புகள் லேசானவை என்றும், தற்போது பீதி அடையத் தேவையில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் நிலை என்ன?


தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் 148 பேர் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், 60 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்.   2025 மே மாதத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ளதால்,  பொது இடங்களில் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என  மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

காய்ச்சல், தொண்டை வலி, இருமல், உடல் வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்து உதவியை நாட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. முன்னதாக, கேரளா, கர்நாடகாவிலும் பொது இடங்களில் முகக் கவசம் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. தற்போது பரவி வரும் கொரோனா தொற்று, லேசானது என்றும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Follow Us